Wednesday, March 13

நிந்தவூரில் திண்மக் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்!


நிந்தவூர் பிரதேசத்தின் திண்ம கழிவு முகாமைத்துவம்.சம்மந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நிந்தவூர் அமீர் மேர்சா கேட்போர் கூடத்தில் தவிசாளர் MAM .தாகிர் தலைமையில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் தின்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான பொதுமக்கள் தகவல் தொடர்பாளர் உத்தியோகத்தர் ஏ.அஸ்பர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தின் 25 கிராம சேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
தவிசாளர் தனது உரையில் கடந்த 3 வருடங்களாக UNOPS நிறுவனத்தின் பூரண அனுசரனையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் விரைவில் அவர்களின் அனுசரணையில் இருந்து நாம் தன்னிசையாக இயங்க வேண்டிய கட்டாய இடத்துக்கு வந்துருப்பதகவும்,இதனை தொடர்ந்தும் வெற்றிகரமாக கொண்டு செல்லும் பொருட்டு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பினை எதிர்பார்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் ஜவ்பர், UNOPS நிறுவனத்தின் தகவல் உத்திஜோகத்தர் S.கிருபாகரன், நிந்தவூர் பிரதேசத்தின் திண்  கழிவு முகாமைத்துவ கண்காணிப்பாளர் AM. ஆசிக் ஆகியோரும் கலந்து கொண்டு ,திண்மக் கழிவு அகற்றல் சம்மந்தமான தட்போதைய மற்றும் எதிர்கால திட்ட நடவடிக்கை சம்மந்தமாக விளக்கமளித்தனர்.

No comments:

Post a Comment