அரசியல் வரலாற்றுப்பின்னணி :
அரசியல்
என்பது ஒரு மக்கள் கூட்டத்தினை ஆட்சி செய்வது என்ற அடிப்படையில் நோக்கப்பட
வேண்டியதாகும். சம்மாந்துறையின் அரசியல் வரலாற்று, பின்புலம் மிகவும்
முக்கியமானதாகும். சம்மந்துறை என்பது கிழக்கின் கடல் வாணிபத்தின் மிக
முக்கிய துறைமுகமாக மிக நீண்ட காலமாக விளங்கி வந்தமைக்குப் பல்வேறு
சான்றுகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு வாவிய+டாக உள்நுழையும்
வர்த்தகக்கப்பல்கள் தென்புறமாக ஏறத்தாழ 40 கிலோமீற்றர் தூரம் வாவியில்
சென்று சம்மாற்துறையை அடைந்தார்கள். இங்கு தரை தட்டிய கப்பல்கள் பொருட்களை
இறக்கி இங்கிருந்து கண்டி இராதானிக்கும் உள்நாட்டுக்கும் கொண்டு
சென்றார்கள். இங்கிருந்துதான் கண்டிக்கான தரை வழி பாதையும் ஆரம்பமாகின்றது.
மட்டுமன்றி இலங்கையின் பெரிய நதிகளில் ஒன்றான கல் ஓயா ஆற்றின் இடப்பக்கமாக
அமைந்த (இது பட்டிப்பளையாறு என அக்காலத்தில் அழைக்கப்பட்டது).பரந்து
விரிந்த வளமான நிலப்படுக்கையின் நடுவே காணப்பட்டமையால் இப்பிரதேசம் மக்கள்
வாழ்க்கைக்கு வசதியாயமைந்தது.
இங்கு
வாழ்ந்த மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர்.
வுpவசாயத்துக்கான அனைத்து வளங்களும் இப்பிரதேத்தில் அமைந்து காணப்பட்டன.
பண்டைய மக்கள் தங்களுக்கிடையே ஒரு தலைவரைத் தெரிந்து கொண்டு அவரின்
கட்டுப்பாட்டிலேயே ஊர் முழுவதும் ஒர் அரசியல் ஒழுக்க விழுமியங்கள் மிக்கதாக
கட்டிவளர்க்கப்பட்டது. அந்தத் தலைவரே அவர்களின் முழு ஆட்சியாளராகத்
திகழ்ந்தார். அவர் மரைக்காயர் என்று அழைக்கப்பட்டார். அந்த மரைக்காயர்
தமக்குச் சிலரை உதவியாளர்களாக வைத்துக்கொள்வது வழக்கம். இந்த அடிப்படையில்
அரசியல் ஆட்சியில் நிர்வாக முறை அமைந்தது. அவரின் தலைமையிலேயே ஊரின்
பாதுகாப்பு, நிர்வாகம், நீதி, திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரிப்பு
போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிராமத்தின்
வசதிபடைத்தவரும் கல்வி அறிவு, புத்திசாதூரியம் போன்றவற்றில்
திறமையானவரையும் மரைக்காராக நியமித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு பரம்பரை
ரீதியான வாரிசுரிமையாக வந்தமையும் நாம் அவதானிக்கலாம். இப்படியே
சம்மாந்துறையிலும் அரசியல் பின்னணி அமைந்து காணப்பட்டது.
காலத்துக்குக்காலம் மாறிமாறிப்பலர் ஆட்சி செய்தமை வரலாற்றில்
காணப்படுகிறது. இவர்கள் கண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர்.
அவர்களுக்குச் சேவகம் செய்துள்ளனர். மன்னனின் பிரதிநிதியாக இவர்கள்
இருந்தமையால் மக்களும் மதித்தனர். இது பிற்காலத்தில் போர்த்துக்கேயரை
எதிர்க்கவும் ஒல்லாந்தரை ஆதரிக்கவும் இப்பதவிகளே பெரிதும் உதவின.
இவர்கள்தான் கிராம ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில்
உள்ளுராட்சி சபைகளாகவும், பாராளுமன்ற சட்டசபை-உறுப்பினர்களாகவும் வளர்ச்சி
பெற்று காணப்பட்டது என்பதை அறியமுடிகின்றது. இன்று இலங்கையிலேயே அதிக
சனத்தொகையையும் அதிக நிலப்பரப்பையும் கொண்ட ஊராக சம்மாந்துறை திகழ்ந்தாலும்
அவ்வளவுக்கும் ஒரு நம்பிக்கையாளர் சபையைக்கொண்டே இயங்கி வருகின்றமை
இவ்வூரின் ஆட்சியியல் வரலாற்றின் வளர்ச்சியின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை
அடிப்படையாகக் கொண்டிருந்தனர். காரணம், இப்பிரதேசத்தின் நிலத்தோற்றமும்
நீர்ப்பாசன வடிகால் அமைப்பு முறையுமேயாகும். இப்பிரதேசத்தின் அரசியல்
வளர்ச்சி என்பது ஒரு விவசாய சமூகத்தின் பரிணாம வளர்சியை அடிப்டையாகக்
கொண்டது என்பதைக் கருத்திற்கொண்டே நோக்கவேண்டியுள்ளது.
நிர்வாக முறைமை
பொதுவாக
- தென்கிழக்குப்பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து வாழ்கின்ற
பிரதேசமாகும். இப்பிராந்தியத்தில் 12ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் பரவலாக
வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. என்றாலும் கண்டி மன்னன் செனரத்
காலத்திலேயே (1604 – 1635) அதிகமான முஸ்லிம்கள் இப்பிரதேத்துக்குக்
குடியேற்றப்பட்டனர். இதன் பின் இப்பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும்
பிரதேசமாகக் காணப்பட்டு வந்துள்ளது. இம் மக்களின் அரசியல் நிர்வாக
முறைமைகள், விவசாயம், வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தன.
இங்கு மிக நீண்ட வரலாற்றையும் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட சமூக
அமைப்பு முறை காணப்பட்டுள்ளது. நிர்வாகஸ்தர்களாக வன்னியனார், போடிகள்,
காரியப்பர்கள், மரைக்காயர்கள், உடையார்கள் என்பவர்கள் அல்லது பதவிகள்
அக்காலத்து உயர் நிர்வாகப்பதவிகளக காணப்பட்டன. இவர்களின் நீதி முறைமை,
சட்டங்கள் என்பனவும் தனித்துவமனதகக் காணப்பட்டமை வரலாற்றின் மூலம்
அறியக்கிடக்கிறது. இவர்கள் அனைவரும் கண்டி அரசனின் ஆளுகைக்குக்கீழேயே தமது
அதிகாரங்களைப் பெற்று, செலுத்தி வந்துள்ளனர். தென்கிழக்குப் பிராந்தியம்
மிக நீண்ட காலமாக கண்டிய இராசதனியின் ஒரு பிரிவாக இருந்து வந்தது.