கல்முனை மாநகர சபையில் அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக இன்று முதல்வரினால் கூட்டப்பட்ட மாநகர சபையின் விசேட அவசர பொதுச் சபைக் கூட்டத்தை 11 உறுப்பினர்கள் பகிஷ்கரித்துள்ளனர்.
குறித்த அவசரக் கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தில் குளறுபடிகள்
காணப்படுவதாலும் போதிய கால அவகாசத்துடன் அக்கடிதம் உறுப்பினர்களுக்கு
கையளிக்கப்படவில்லை என்பதாலுமே தாங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை
என தீர்மானித்ததாக மாநகர ஆளும் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) உறுப்பினர்
ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.
மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஆளும்
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ்,
எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,
எம்.சாலிதீன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர்
ஏ.அமிர்தலிங்கம், தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான வி.கமலநாதன்,
ஏ.விஜயரட்ணம், எஸ்.ஜெயகுமார் ஆகியோரே இன்றைய விசேட அவசரக் கூட்டத்தை
பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
நண்பகல் 12 மணியளவில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில்
ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்கூட்டத்தில் ஆளும் தரப்பில்
மூவரும் எதிர்த் தரப்பில் மூன்று உறுப்பினர்களும் பிரசன்னமாகியுள்ளனர்.
No comments:
Post a Comment