கல்விப்பொதுத்தராதர
சாதாரண தர பரீட்சை எழுதியதன் பின்னர் உயர் தரத்துக்கு செல்வதற்கு இடைப்பட்ட
காலப்பகுதியில் கொம் டெக் கல்வி நிறுவனத்தில் அமெரிக்க சக்காத் நிறுவனத்தின் புலமை
பரிசு திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற பாடங்களை கற்று வெளியேறிய
மாணவ மாணவிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு ஒன்று (2013.06.06) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு
கொம் டெக் கல்வி நிறுவனத்தின் இஸ்தாபகரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான
எ.எம்.ஜெமீல்லுடைய அழைப்பின் பெயரில் அமெரிக்க சக்காத் நிறுவனத்தின் பிரதம
நிறைவேற்று அதிகாரி ஹலீல் டீமைர் பிரதம அதிதியாக பங்குகொண்டு சான்றிதல்களை வழங்கி
வைத்தார். விசேட அதிதிகளாக முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவந்தரும்
பேராசிரியருமான எம்.எல்.எ.காதரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட்ட
விரிவுரையாளர் முபாரக்கும் கலந்து சிறப்புரையாற்றினர்.
மாகாண சபை
உறுப்பினர் எ.எம்.ஜெமீல் கொம் டெக் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும்
எதிர்காலம் தொடர்பில் உரையாற்றிய அதே வேளை பிரதம அதிதி தனதுரையில் இந்நிறுவனத்தில்
கல்வி கற்று உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள
பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெற உதவுவதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment