உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று வைபவமொன்று கல்லூரி சுற்றாடல் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோஸ்தர் திருமதி எஸ்.செல்வேற்குமரன் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
” அநாவசிய நுகர்வினை கைவிடுவோம் என்பதற்கு அமைவாக சிந்தி - உண் - சேமி எனும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இன்றைய நிகழ்வில் பிரதான வளவாளர் மாணவர்களுக்கு சுற்றாடல்
தினத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றியதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரம் நடும் நிகழ்வு மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் போன்றனவும் இடம்பெற்றன.
கல்லூரி பிரதி அதிபர் ஏ.ஏ.கபுர் , உதவி அதிபர்களான யு.எல்.எஸ்.ஹமீட் , எம்.ஐ.ஜவாஹர் இப்றாஹிம் , எம்.ஐ.எம்.அஸ்மி , ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் , கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி ,சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், தரம் 6 பகுதித் தலைவர் ஏ.எல்.எம்.நஸீர் , ஒழுக்காற்று சபை பிரதி தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் , தரம் 7 உதவி பகுதித் தலைவர் முஹம்மட் ஜெமீல் ,விவசாய ஆசிரியர்களான எம்.வை.பைஸால் , எம்.எஸ்.எம்.மிஸ்பாஹ் உட்பட ஆசிரியர்களும் சுற்றாடல் கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment