முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்குமிடையே எவ்வித கரு த்து மோதல்களோ பிரிவினையோ
இல்லையென கிழக்கு மாகாண அமைச்சர்களான எம். எஸ். உதுமாலெப்பை மற்றும் விமலவீர
திசாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.
மாகாண சபையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் கூட்டுப் பொறுப்புடனேயே
செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
அம்பாறை உல்லாச விடுதியில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே
அமைச்சர்கள் இக்கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இங்கு அவர்கள் மேலும் கருத்துக்
கூறுகையில்: கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நேர்மையானவர், எம்முடன் சுமுகமாக உறவு
வைத்துள்ளார். நாங்களும் நம்பிக்கை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு
வருகிறோம். இந்நிலையில் சில ஊடகங்கள் எமக்கிடையே விரிசலை ஏற்படுத்த முற்படுவது
தார்மீக பொறுப்பான செயல்.
ஜனாதிபதியில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக்
கொண்டுவரவுள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment