ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பல்கலைக்கழக வாளகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை
விதிக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த மாணவனை மீண்டும் கற்றல்
செயற்பாடுகளுக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் இந்த
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பகிடி வதை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து
முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தபோது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை
பொலிஸார் மறித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனால் பல்கலைக்கழக ஊழியர்களும் விரிவுரையாளர்களும் நுழைவாயிலுக்கு
வெளியே நீண்டநேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுடன் தொடர்பினை
ஏற்படுத்துவதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.
No comments:
Post a Comment