கடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா கல்முனையில் நடத்தவிருந்த
கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்முனையில் கூட்டம் நடத்த முஸ்லிம்கள்
காட்டிய கடும் எதிர்ப்பு காரணமாகவே இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே ,
அம்பாறை, கல்முனை பிரதேசங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட கூட்டம் ரத்து
செய்யப்பட்டதை உறுதி செய்தார். அத்துடன் முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக
ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்த அவர் தூரம் மற்றும் நேரமின்மை
காரணமாகவே அது ரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கல்முனையில் தாம் கூட்டம் நடத்த எந்த ஏற்பாடுகளையும் செய்வில்லை
என குறிப்பிடும் அவர் அங்கு ஒரு சிலருடன் கலந்துரையாடவே ஏற்பாடுகள்
முன்னடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடந்த புதன் கிழமையன்று கல்முனையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக
டிலந்த விதானகே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment