Tuesday, July 2

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இருநாள் சாரணர் பாசறை

இன நல்லுறவுக்கு பாலமாக அமையும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 130 வருட பூர்த்தியினை முன்னிட்டு அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த இருநாள் சாரணிய பாசறையின் இறுதிநாள் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூமின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி மற்றும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அக்கரைப்பற்று-கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத், கௌரவ சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதி மற்றும் சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூமின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.




No comments:

Post a Comment