கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி புதிய முஸ்லிம் அரசியல் கட்சியொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அரசாங்கத்தில் கபினட் அமைச்சுப் பதவி வகிக்கும் ஒருவரின் தலைமையில்தான் புதிய முஸ்லிம் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாம்.
இந்தக் கட்சிக்குரிய முக்கிய பொறுப்புக்களுக்கு யார்? யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நீண்ட ஆலோசனைகள் மேல் மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றதாம். குறிப்பாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சியொன்று அரசை விட்டு வெளியேறினால் அடுத்த கணமே இன்னும் பலரையும் தமது அணிக்குள் இழுத்தடுக்கலாம் என்கின்ற நினைப்போடு தலைவராக வரவிருக்கின்றவர் உலாவருவதாகவும் கேள்வி.
தனித்துவத் தலைவர் தனது கட்சிக்குள் இருக்கின்ற ஒற்றரை கண்டுகொண்டதால் இனிமேலும் தனது பருப்பு வேகாது என்ற முடிவுக்கு வந்ததன் காரணத்தினாலேயே புதிய கட்சிக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றத்தில் உயர் பதவி வகிக்கின்ற ஒருவரையும் புதிய கட்சியில் இணைத்துக்கொ
ண்டு போவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாம். இதற்கு அரச உயர்மட்டம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம். இதேவேளை தனித்துவத் தலைவரோ? ஓற்றர் வேலை பார்க்கின்றவரை பெரியதொரு ஆளாகக் கணக்கே எடுக்கவில்லையாம் மிக விரைவில் அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாராம். தனித்துவத் தலைவரின் முடிவிற்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பெருத்த ஆதரவை தெரிவித்துள்ளனராம்.
அதிகார பதவி ஆசைக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகின்றார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment