Wednesday, November 30

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் சமயத்தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை சமயத்தலைவர்களுக்கான முதலாவது ஒன்றுகூடலை அம்பாறை வித்யாலங்கார பிரிவேனாவில் நடாத்தியபோது பேரவையின் தலைவர் டாக்டர். எம்.ஜ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண சங்க நாயக்கர் கலாநிதி கிரிந்திவல சோமரத்ன தேரர் ஆகியோர் உரையாற்றுவதையும் சமயத்தலைவர்கள்
இருப்பதையும் படங்களில் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழா (படங்கள் இணைப்பு)

November 30, 2011.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சருக்கு பெருந்தெருளான மக்கள், பிரமுகர்கள் அஞ்சலி.

Wednesday, November 30, 2011

முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 85ஆவது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் இரவு 9.25 மணிக்கு இறையடி சேர்ந்தார்.இவர் கடந்த 24ஆம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்விமானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடு துவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்றார். பின்னர் 1934ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர், 1946ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.

இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


     சொத்து பிரகடனம் செயத் தவறிய கல்முனை மாநகர சபை உறுப்பினரான  அப்துல் ரஹீம் அமீர் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்  ஆணையாளரினால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுள் இருவர் மாத்திரமே சொத்து பிரகடனம் செய்ய வில்லை .

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்



 
 
கிழக்கு மாகாண பாடசாலைளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர் செய்யும் நோக்கில் கல்முனைக் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 185 ஆசிரியர்கள் கல்முனை கல்வி மாவட்டத்தை விட்டு வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்திலிருந்து 126 ஆசிரியர்களும், சம்மாந்துறைக் கல்வி வலயத்திலிருந்து 43 ஆசிரியர்களும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு


(சம்மாந்துறை நிருபர் - ஏ.ஜே.எம்.ஹனீபா)
கடந்த 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு நிரந்தர அபிவிருத்திகளோ, பல்கலை கழகத்துக்கு தேவையான கட்டிடங்களோ உருவாக்கப்படாமல் இலங்கை நெற் சந்தைப்படுத்தும் சபையினால் அரிசி ஆலைக்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்களிலேயே உள்ளக மாற்றங்களை செய்து இன்று வரைக்கும் இயங்கி வருகின்றது.
இதனால் இப் பல்கலை கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் இங்கு கற்ற பழைய மாணவர்கள் மத்தியிலும் பாரிய சந்தேகங்களும், அச்சமும் ஏற்பட்டிருந்தது என இலங்கை தென் கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல்
தெரிவித்தார்.

சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் காலமானார்


Slide2(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் இன்று(29) தனது 85வது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இரவு 9.25 மணிக்கு மரணமாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் கடந்த 24ம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

Friday, November 25

கடும்மழையினால் மூழ்கியுள்ள மருதமுனைப் பிரதேசம்.


கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக கல்முனை பிரதேசத்தின் பல இடங்கள் நீரில் தாழ்ந்து வருகின்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சிகளை படங்களில் காண்கின்றீர்கள்.

கல்முனை வர்த்தக நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை; லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி!


Slide2கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில் இருந்து வந்த குறைபாடுகள் களையப்பட்டு தற்போது முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது.

கல்முனை மாநகரதுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் தொழில் நிலையங்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பன முதல்வரின் நேரடி பரிசோதனையின் பின்னர் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் இவ்வாறான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கு சிலர் தகாத பெறுவனவுகள் பெற்று வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னரே முதல்வர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உரிய இடத்துக்கு சென்று அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றார்.

ஒலுவில் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு!


ஒலுவில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக ஒலுவில் துறைமுக வெளிச்ச வீடு பகுதி (Light House) கடலரிப் புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து வெளிச்ச வீட்டினை பாதுகாப்பதற்காக ஒலுவில் துறைமுக ஊழியர்கள் மண் மூடைகளை அடுக்கி வருகின்றனர். அதனையும் கடலலைகள் அடித்துக்கொண்டு செல்கின்றன.
ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள ஒலுவில் கரையோரப் பிரதேசங்கள் சுமார் 100 மீற்றர் தூரம் கடல் குடியிருப்புப் பிரதேசங்களை (ஊரை) நோக்கி சில தினங்களுக்குள் நகர்ந்துள்ளன.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் வெள்ள அபாயம் தொடர்பில் மேயருடன் கலந்துரையாடல்


 
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானம், மாணவர் விடுதி மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது இதன்காரணமாக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையால் விசேடமாக பாடசாலையில் தங்கி கற்கும் விடுதி மாணவர்கள் சுகவீனம் மற்றும் தோற்று நோய்களுக்கு உள்ளாவதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவும் இவ்வேளையில் இந்நிலைமையை கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பாடசாலையின் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஆசிரியர் குழுவொன்று
மாநகர சபையின் மேயரை சந்தித்தது இதன் போது கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.நசார்டீன், எம்.சாலித்தீன் ஆகியோரும் இச்சந்திப்பில் இணைந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பதவிக்கு புதிதாக விண்ணப்பம் கோரல்


கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் கணிதம். ஆங்கிலம் பட்டதாரிகளும் ஆங்கில டிப்ளோமாதாரிகளும் சேர்;த்து கொள்வதற்கு விண்ணப்பம் கோரியுள்ளதாக கிழக்கு மாகாண அரச சேவை ஆணையாளர் சபையின் செயலாளர் எச்.ஈ.எம். டப்லியூ.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையின் மூலம் இந்த ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வயது 18- 45 வரையில் உட்பட்வர்களாக இருத்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதியிடமாக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.

Thursday, November 24

கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்திக்க பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் உறுதி!

Slide2கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நேற்று புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார்

காஸ்வின், கேரளா, மலேசியா மாநிலங்களுடன் கிழக்கு மாகாணத்தை இணைத்து கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டம்; மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் முன்மொழிவு


Jameelகிழக்கு மாகாணத்தை ஈரான் நாட்டின் காஸ்வின், இந்தியாவின் கேரளா மற்றும் மலேசியா நாட்டின் மலாக்கா ஆகிய மாநிலங்களுடன் இணைத்து கிழக்குமாகாணத்தின் கல்வி வர்த்தகம் கைத்தொழில் தொழிழசார் கல்வி, தகவல் தொழிநுட்பம் சுயதொழில் முயற்சி மற்றும் மொழியாற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் முன்மொழிந்துள்ளார்.

நிந்தவூரில் இரும்பினால் தாக்கப்ட்டவர் வபத்தானார்




வீதியில் சைக்கிளில் சென்ற ஒருவருக்கு எதிரே ஓட்டோவில் வந்த மூவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது. ஆட்டோவில் வந்தவர்கள் இரும்புக்கம்பியால் தாக்கியதில் சைக்கிளோட்டி மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நிந்தவூர் 13 ஆம் பிரிவைச்சேர்ந்த இப்ராலெவ்வை அபுல் ஹசன் (வயது46) என்ற குடும்பஸ்தரே மரணமாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

அஷ்ரப் நகர் கிராமசேவையாளர் நிறுத்தம்


(நமது செய்தியாளர்)
அண்மையில் பரபரப்புக்குள்ளான ஒலுவில் அஷ்ரப் நகர காணிகள் சம்பந்தமான பிரச்சினைகளில் அப்பிரதேச கிராம சேவையாளரை பொதுநிர்வாக அமைச்சின் உடனடி அறிவித்தலின்படி சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரத்தில் அண்மைக்காலமாக காணிகள் சம்பந்தப்பட்ட சலசலப்புக்களும், இராணுவ முகாமை அமைத்தல் போன்ற விடயங்களும் பெரும் பரப்பை ஏற்படுத்தி அவை அமைச்சர்கள் மட்டத்தில் சென்றன.

இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேச சபையின் கீழ் செயற்படுத்த ஏ.எம். ஜெமீல் கோரிக்கை


அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேச சபையின் கீழ் கொண்டு வந்து மாதம் ஒன்றுக்கு முப்பது இலட்சம் ரூபா இலாபத்தினை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியினை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பிப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற கிழக்குமாகாணசபை அமர்வில் முதலமச்சருக்கான அமைச்சுக்கள் சம்மந்தமான வரவு செலவு முன்மொழிவின் போது மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு உரைநிகழ்த்தினார்.

இக்கோரிக்கைக்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அதற்குறிய நடவடிக்கைகளை மேற் கொள்வதாக மாகாணசபை உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மிக நவீன விளையாட்டு மைதானமாக வெபர் மைதானம் மாறுகின்றது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மட்டக்களப்பு நகரில் மிகப்பிரபல்யமான இவ்விளையாட்டு அரங்கை அடுத்த ஆண்டு நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு முதல்வரிடம் அவர் உறுதியளித்தார். இதன் அடிப்படையில் தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெபர் விளையாட்டு மைதானத்தின் புனர் நிர்மாணம் தொடர்பான முதலாவது பூர்வாங்க ஆயுவு கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் மட்டு மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநாகர மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, November 23

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு


2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் ஊடகவியலாளர்களின் நலன்களை பேணுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி ஒதுக்கீடு செய்துள்ளமைக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் ஜனபாதிபதிக்கு

சம்மேளனத்தின் தலைவர் மீரா . எஸ் இஸ்ஸதீன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தொடர் மழை அவதியுறும் விவசாயிகள் (படங்கள்)

அம்பாறைத மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக விதைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்கள் உடைப்பெடுத்துள்ளால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

மேலும், சிறு வேளாண்மைகள் அழிவடையும் நிலையும் தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை மஹிந்த சிந்தனையின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானிய விநியோகமும் மந்தகதியில் இடம்பெறுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமூர்த்தி வர்த்தக கண்காட்சியும், விற்பணையும் அம்பாரை பொது மைதானத்தில்

அம்பாரை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூர்த்தி வர்த்தக கண்காட்சியும், விற்பணையும் அம்பாரை பொது மைதானத்தில் சமுர்த்தி மாவட்ட உதவி ஆணையானார் கே.டபிள்யு. கிரிந்தகே தலைமையில் நடைபெற்றது
இவ்விழாவின் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிறியானி விஜேவிக்ரம அவர்களும் அதிதிகளாக அம்பாரை மாட்ட உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன, இலங்கை சமூர்த்தி அதிகார சபையின் வங்கி நிதிப்பிரிவு பணிப்பாளர் ஏ.கே.எல்.சந்திரதிலக, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையானார் பீ.குணரத்தினம், உணவு மற்றும் போஷனைத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சுணில் சந்திரலால், மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட
சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்


 
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஐ.எம்.கலீல் தலைமையில் நேற்று(21) இரவு சாய்ந்தமருது சீ ப்ரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக
விரிவாக ஆராயப்பட்டது.

கல்முனையில் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு நேற்று 22 ம் திகதி சுகாதாரக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது. கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜாமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் , தாதிமார் உட்பட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாண்டிருப்பு துஷ்யந்தன்

Tuesday, November 22

கல்முனை மாநகர முதல்வருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானத்தில் இடம்பெற்றது

இன்று காலை இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கினும் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் இலங்கை வான்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக அம்பாறை விமானப் படைத் தளத்தை வந்தடைந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர முதல்வருக்கும் பிரித்தானிய தூதுவருக்கும் இடையில் விமானத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதில் கல்முனை மாநகரின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரயாடியதாகவும், பிரித்தானிய தூதுவர் ஜான் ரெண்கின் அவரது
அம்பாறைக்கான விஜயத்தின் போது கல்முனை மாநகரத்திற்கும் வருகைதரவுள்ளதாகவும் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலசம் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்கான முத்திரை வரி நிலுவையை வழங்க அனுமதி

kalmunaimc

திறைசேரியினால் கல்முனை மாநகர சபைக்கு வழங்க வேண்டியிருந்த முத்திரை வரி நிலுவையில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கினங்க 11 மில்லியன் ரூபா முத்திரை வரி நிலுவை காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கல்முனை மாநகர சபைக்கு 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான முத்திரை வரி 21 மில்லின் ரூபா திறைசேரியினால் வழங்க வேண்டியிருந்தது. இதில் ஒரு தொகையே தற்போது காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரின் முயற்சியினாலேயே குறித்த நிலுவை பணம் மாநகர சபைக்கு கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன நல்லிணக்கத் திட்டங்களை முன்னெடுக்க கல்முனை வந்தடைந்த தேரர்

அம்பாறை மாவட்டத்தில் இனநல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துமுகமாக சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை நேற்று கிழக்கு மாகாண சங்க நாயக்கர் வண.கிரிந்திவல சோமரத்ன தேரரை அம்பாறை மகாவிகாரைக்குச் சென்று சந்தித்தனர்.

அங்கு பேரவையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தமது நோக்கம் பற்றி விளக்கமளிப்பதையும் உபதலைவர் வண.சந்கரத்ன தேரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.

கல்முனையில் தற்போது பலத்த மழை

 


 
தற்போது கல்முனை பிரதேசம் முழுவதும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவருவதனால் நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று இரவு பலத்த இடி மற்றும் மின்னலுடன் பெய்த மழையினால் நகரின் பெரும்பாலான வீதிகளில் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பலவித சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேவேளை செய்லான் வீதி, சின்னத்தம்பி வீதி, மதரஸா வீதி, மாதவன் வீதி, சந்தை வீதி, கோயில் வீதி, மாரியா வீதி, நகர மண்டப வீதி, இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்யாலயத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்யாலயத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் இப்பாடசாலையின் பழைய மாணவரும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவருமான எம்.ஐ.எம்.கலீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Monday, November 21

நிந்தவுர் கோட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

நிந்தவுர் ' பெஸ்ட் ஒப் யங்' அமைப்பின் ஏற்பாட்டில் பொலிஸ் சேவையில் வெள்ளி விழாக்காணும் கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரியும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சமூக சேவையாளருமான தேச
மானிய எஸ்.எம்.சதாத் மற்றும் நிந்தவுர் கோட்டத்தில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

கல்முனையில் கிராமத்துக்கு இல்லமொன்று ' எனும் தொனிப்பொருளில் அமைக்கப்பட்ட வீடுகளை இளைஞர்களுக்கு கையளிக்கும் வைபவங்கள்



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச செயலங்கள் ரீதியாக வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ' இளைஞர் ஆண்டில் - கிராமத்துக்கு இலலமொன்று ' எனும் தொனிப்பொருளில் அமைக்கப்பட்ட 332 வீடுகளை இன்று காலை 10.37 காலையில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள இளைஞர்களுக்கு கையளிக்கும் வைபவங்கள் நாட்டின் பல பாகங்களிலும் சம காலத்தில் இடம்பெற்றன.

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் , பாராளுமன்ற உறுப்பினர் எச்எம்எம்.ஹரீஸின் இணைப்பு செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்.எம்.ஜெஸ்மிர் உள்ளட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Sunday, November 20

பல்வேறு வீதி விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக சர்வதேச ரீதியாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கல்முனை நகரில்


பல்வேறு வீதி விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக சர்வதேச ரீதியாக ஒரு நிமிட மௌன அஞ்சலி (பிரார்த்தனை) செலுத்தும் நிகழ்வு இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இடம்பெற்றது.

இதன்போது காலை 10.05 மணிக்கு வீதியில் பயணித்த சகல வாகனங்களும் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்பட்டது.

மஹ்மூத் மகளிர் கல்லூரி, சாகிரா கல்லூரி

                                                       Mahmud Ladies College Kalmunai
Mahmud Ladies College Kalmunai

                                                 
                                                          Zahira College Kalmunai

கல்முனை - அக்கரைபத்து பிரதான வீதியில் விபத்து. ஒருவர் பலி


 
(படங்கள் இணைப்பு)
கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று காலை செங்கல் ஏற்றிவந்த டிப்பர் வாகனமொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி செங்கல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்டக டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டதால் சம்மாந்துறையைச் சேர்ந்த அலியார் அர்ஸாத்(23) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இதே விபத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த என்.ஜனூஸ்(17) என்பவரின் கால் பாகம் உடைந்துள்ளதுடன் முஹம்மது இஸ்மாயில் நபீர்(38) மற்றும் செங்லடி மல்லியபுரத்தைச் சேர்ந்த தேவராஜா(44) ஆகியோர் பலத்த காயங்களுடனும் யோகநாதன்(51) சிறு காயத்துடனும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சிங்கம் ஒன்று புறப்பட்டதே- கல்முனைக்கு மேர்வின் சில்வா விஜயம்


(மருதமுனை சஜீத்)
அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா நேற்று சனிக்கிழமை மாலை கல்முனைக்கு விஜயம் செய்தார். அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளையொட்டி விசேட ஆசிவேண்டி கல்முனை பெளத்த விகாரை, பள்ளிவாசல், கோவில் போன்றவற்றுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
 

கல்முனை மாநகரை தென்னாபிரிக்க மாநகரமொன்றுடன் இணைப்பது தொடர்பில் பேச்சு



(எம்.எம்.ஜெஸ்மின்)
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கhவின் அவிபிருத்திக்கான பிரதி அமைச்சர் இப்றாஹிம் இஸ்மாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் இன்று சனிக்கிழமை பேச்சு நடத்தியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போது, தென்னாபிரிக்காவிலுள்ள மாநகர சபையொன்றுடன் கல்முனை மாநகர சபையை இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்

Saturday, November 19

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களுக்கும் சிரேஸ்ட மாணவர்களுக்குமான இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களுக்கும் சிரேஸ்ட மாணவர்களுக்குமான இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல் உலக வங்கியின் திட்டத்தின் அனுசரணையுடனும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் வழிகாட்டலிலும் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
HETC திட்டத்தின் பணிப்பாளர் கே.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது மூவின மாணவர்களுக்கிடையிலான இனநல்லுறவையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் நோக்கிலயே இடம் பெற்றது. இதன்போது மூவினகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலாச்சார ரீதியிலான உணவுகளும்
பரிமாறப்பட்டன.

ஜனாதிபதி பிறந்ததினத்தையிட்டு சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜூம்மா பள்ளி வாசலில் விஷேட துஆப் பிராத்தனையும், முஸ்லீம் சமய அனுஷ்டானமும்- அப்படி என்னதான் கேக்கிறீங்களோ?


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் 66வது பிறந்ததினத்தையிட்டும் இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாவது வருட பூர்த்தியினையுட்டும் அம்பாரை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு நீல் த சில்வா வின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாரை மாவட்ட மட்டத்திலான விஷேட துஆப் பிராத்தனையும், முஸ்லீம் சமய அனுஷ்டானமும் இன்று (19) காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெற்றது.

Friday, November 18

சாய்ந்தமருதில் இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா

 
Slide6கலாசார மரபுரிமைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கிராஅத் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பிரதேச மட்ட இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி என்.எம்.முஜீப், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கணக்காளர் திருமதி. எம்.எம். உசைனா உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலையில் மரம் நடும் நிகழ்வு



Slide5ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது

கலை கலாச்சார பீடத்தின் சமூக விஞ்ஞான தினைக்களத்தின் தலைவர் எம்.ஏ.எம் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழகக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளார். அல்ஹாஜ் எச்.எம்.சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது மொழித்துறை தலைவர் டாக்டர் ரமிஸ் அப்துல்லா, புவியியற்துறை தலைவர் எம்.எல்.எப். பௌசுல் அமிர், சிரேஸ்ட பதிவாளர் சிவக்குமார், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனையில் ஜனாதிபதிக்காக துஆப் பிரார்த்தனை - ரொம்ப முக்கியம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை அல் - அஷ்ஹர் வித்தியாலயத்தில் கூட்டமும், ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனையும் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.றஸாக் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஜனாதிபதியின் சிறப்பம்சங்கள், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகள் பற்றி பாடசாலையின் பிரதி அதிபர் எம்.மசூட், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் செயலாளர் தேசமான்ய யூ.எல்.எம்.பைஸர், இணைப்புச் செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோர்கள் உரையாற்றினர்.

கல்முனை பிரதான வீதியில் உள்ள கடை உடைக்கப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கொள்ளை


அம்பாறை நகரப்பகுதியில் இரண்டு மதுபானசாலைகள் உட்பட மூன்று கடைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு; உடைக்கப்பட்டு ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பிரதான வீதியில் உள்ள மதுபானசாலைகள் இரண்டும் பலசரக்கு கடை ஒன்றையும் உரிமையாளர்கள் வழமை போல் பூட்டிவிட்டு சென்றதாகவும் இன்று காலை வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு மதுபானசாலையொன்றில் வைக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் பலசரக்கு கடையில் இருந்த 5 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளi மேற்கொண்டு வருகின்றனர்

Thursday, November 17

ஒலுவில் ஊடாக மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு புதிய புகையிரத வீதி


மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு வரை புதிய புகையிரத வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திட்டப்பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான புதிய புகையிரத வீதியை நிர்மாணிப்பதற்காக ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தறை, பெளியத்த, ஹம்பாந்தோட்டை ஊடாகவும் மொனராகலை, அம்பாரை ஒலுவில் ஊடாகவும் மட்டக்களப்பு வரையிலான இந்த புதிய புகையிரத வீதியை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீதியை நிர்மாணிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைளை மேற்கொள்ள இலங்கை புகையிரத சேவையும், போக்குவரத்து அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு சிறந்த புகையிரத சேவையை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

அஷ்ரப் நகர் உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப் படமாட்டார்கள்

 

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சி னையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களை யும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவ ருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்





இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற எதுவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சக்தி, வசந்தம், நேத்ரா செய்திகளின் தொகுப்பு 16.11.2011