Friday, June 29

கல்முனை பிரதேச செயலக கலாசார விழா!




கல்முனை பிரதேச செயலக கலாசார விழா செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ‘முனைமலர்’ என்ற கலாசார மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்


கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதினால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை எம்.பி. மேலும் கூறினார்.

முதலமைச்சர்களாக இருந்தவர்களையே முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் கட்சி அறிவிப்பு, கிழக்கு மாகண முதலமைச்சராக சந்திரகாந்தனுக்கு மீண்டுமொரு வாய்ப்பு


மாகாணசபைகள் நேற்று கலைக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர்களாக இருந்தவர்களையே தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கமைய கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க ஆகியோர் தத்தம் மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அணிகளுக்கு தலைமை தாங்குவர்.
ஐ.ம.சு.கூட்டமைப்பில் ஆகவும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த தேர்தலுக்காக புனரமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய சுசில் பிரேமஜயந்த, முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களே மீண்டும் பிரதம வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் அவற்றுக்காக ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Thursday, June 28

2013 கிழக்கில் இடம்பெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான திட்டமிடல் பணிகள் ஆரம்பம்


2013 தேசத்திற்கு மகுடம் கண் காட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் மட்டக்களப்பு, பொலநறுவை, திருகோ ணமலை அம்பாறை, மாவட்டங் களிலும் அமுல்ப்படுத்த, திட்டமிடல் அமைச்சு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, இந்த அபிவிருத்தி பணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்பப்டுத்த வேண்டிய திட்டங்களை திட்டமிடும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்சேழியன், மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் மற்றும் உள்ளுர் திணைக்கள தலைவர்கள், திட்டமிடல் அதிகாரிகள் என பலரும், பிரசன்னமாகியிருந்தனர்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அழகான ரம்மியமான சூழலில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளுமுகமாகவும் கல்லூரி வளாகத்தினை இப்பிரதேசத்திலேயே மிகவும் அழகிய பிரதேசமாக மாற்றுமுகமாக  மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இந்த நடவடிக்கையினை துரிதப்படுத்தியுள்ளனர்.

கல்லூரியின் ஆங்கிலப்பிரிவில் இத்திட்டத்தின் முதல் கட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

”கிராமத்திற்கு ஒரு வீடு ” திட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும்கிராமத்திற்கு ஒரு வீடுதிட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் , சாய்ந்தமருது ஜும் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி
எஸ்.எம்..லத்தீப் , உலமா சபையின் தலைவர் என்.எம்.முஜீப் , சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் .சி.நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் .ஜி.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வேட்புமனுக்களுக்கான திகதிகள் அறிவிப்பு


கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 12 முதல் 19 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடத் தீர்மானித்துள்ளது மக்கள் விடுதலை முன்னணியானது எந்தக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடமாட்டாதெனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோமெனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதெனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

Wednesday, June 27

சாய்ந்தமருது ஒராபிபாஸா வீதிக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்



கிழக்கின் உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சாய்ந்தமருது ஒராபிபாஸா வீதியினை நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணி அன்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு தெற்கு புறமாக அமைந்துள்ள மேற்படி வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள்,பாதசாரிகள் ஆகியோர் பல இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனை கவனத்திற் கொண்ட கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்
முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தில் நிர்மாணிப்பதற்காக முன்மொழிந்தார். அதன் அடிப்படையில் மேற்படி வீதியானது ரூபா 5,708,848.20 செலவில் நிர்மாணிப்பதற்கான நிர்மாணப் பணியினை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆரம்பித்துவைத்தார்.

கல்முனை வலய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல்


கல்முனை  மனித உரிமைகள் ஆனைக்குழுவும் மனித அபிவிருத்தி தாபனமும் இணைநது கல்முனை வலய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல் கூட்டத்தினை  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ரீ.. தௌபீக் அவர்களின் தலைமையில் நடாத்தியது. இதற்கு ஆலோசகர்களாக மனித உரிமைகள் ஆனைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் .. சறுக் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ். ஜாபிர் ஆகியோருடன் மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் பீ. ஸ்ரீகாந்தா மற்றும் உதவி இணைப்பாளர் எம்..றியால் ஆகியோர் கலந்து கொணடனர். இதற்கு கல்முனை வலய பாடசாலை ஒழுக்காற்று குழு, அதிபர் ஆசிரியர் உட்பட 32 பேர் கலந்து கொண்டனர்.

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படும்?

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் இன்றிரவு கலைக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வறட்சி மற்றும் ரமழான் நோன்பு காலத்திற்கு மத்தியில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளை கலைப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது இம்மாகாண சபைகளை கலைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இம்மாகாண சபைகளை கலைத்து செப்டெம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது ஆளும் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக இருந்தது.

Monday, June 25

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச தரத்திற்கு முன்னேறி வருகிறது - பேராசியர் இஸ்மாயில்



தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14 வருட பரிணாம வளர்ச்சியில் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு முன்னேறி வருவதாக உபவேந்தர் பேராசியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.




தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் முகம்மது இஸ்மாயில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றுகையில் பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மகஜர்



அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மகஜர்நாட்டிலுள்ள ஏனைய ஏழு (07) மாகாணங்களில் 2012 காலப்பகுதி வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 2009ஆம் ஆண்டு காலப்குதியை வரையறை செய்து நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனை தளர்த்தி 2012 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்குமாறு அரசைக் கோரும் தீர்மானமொன்று அம்பாறை மாவட்ட பட்டதாரிகளால் நிறைவேற்றப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று (24) நடைபெற்றது. அதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sunday, June 24

அமைச்சர் றிஷாதின் அனுசரணையுடன் என்னால் முடியுமான அபிவிருத்திகளை மேற்கொள்வேன்!- ஏ.சி.யஹ்யாகான்



அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல சமூகங்களையும் அரவணைத்துக் கொண்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சினூடாக இந்த மாவட்டத்தில் என்னால் முடியுமான பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளேன் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளருமான ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
கல்முனையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் வடக்கு மாகாணத்தில் செய்துள்ள அபிவிருத்தியுடன் அம்பாரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தியை ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் அபிவிருத்தியில் எவ்வளவோ பின்னிற்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.