May 8, 2013 02:41 pm
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டுவந்த முறுகல்
நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதன் வைத்திய அத்தியட்சர்
இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பொன்.செல்வராசா, பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி
ஒருவரை தற்காலிகமாக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சு
உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த பல மாதங்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுவந்த வைத்திய நிர்வாக சீர்கேடு தொடர்பில் பொதுமக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலையின் நிலை தொடர்பில் நான் அந்த கூட்டத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் செயலாளர் நிகால் ஜயதிலக ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அது தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்றை வைத்தியசாலைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.
இதனடிப்படையில் இருவாரங்களுக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மகிபால ஹேரத் தலைமையில் சென்ற குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது.
எனினும் விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் அதுதொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து தெரிவித்தேன்.
விசாரணை முடிந்துள்ளதால் மருத்துவ அத்தியட்சரை இடமாற்றம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். எனினும் இதன் காலம் குறித்து நான் கேட்டபோது ஒரு வார காலத்துக்குள் அந்த இடமாற்றத்தை செய்வதாகவும் அதற்கு பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட வைத்திய அதிகாரி ஒருவரை தற்காலிக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கையெடுத்த சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment