Tuesday, June 4

சாய்ந்தமருது 'பீச் பார்க்' - தடைகளை தகர்க்க ரவூப் ஹக்கீமின் உதவியை நாடும் மேயர்


    கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் முயற்சியின் பயனாக சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் சுமார் 15 மில்லியன் ரூபா செலவில் கிழக்கின் முன் மாதிரியான  “பீச் பார்க்”  ஒன்று அழகான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
    இதன் முதல் கட்டம் 60 இலட்சம் ரூபா செலவில் தற்பொழுது முடிவடைந்திருப்பதாகவும் இரண்டாம் கட்ட வேலைகள் 90 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
    இவ்வாறு அழகான முறையில் அமைக்கப்பட்டு வரும் இப் பீச் பார்க் வேலைத் திட்டத்தை ஒரு சிலர் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் அது அவர்களின் பகல் கனவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மேயர் சிராஸ் மீராசாகிப் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களிடம்  இப் பீச் பார்க் அமைப்பதற்குள்ள தடைகளை நிவர்த்தி செய்து துரிதமாக இவ் வேலைத் திட்டத்தை முடிப்பதற்கு வழி வகுத்துத் தரல் வேண்டும் என்றதொரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment