Tuesday, January 31

39 வருடகால ஆசிரியர், பிரதிஅதிபர் சேவையிலிருந்து ஓய்வு

மாளிகைக்காடு கமு/அல்-ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் வியாழக்கிழமை (2012.02.௦2) தமது 60 வயதுப் பூர்த்தியுடன் தனது 39 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அவரது சேவையை நினைவு கூருமுகமாக அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய நிகழ்வுகளை இங்கு மேலோட்டமாக நோக்குதல் பொருத்தமானது.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது பள்ளிக்கல்வியை சாய்ந்தமருது கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்திலும், கமு/ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்று 1964ம் ஆண்டு மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொண்ட இவர் 1972ல் மௌலவிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர் 1973.07.01 ம் திகதி மௌலவி உதவி ஆசிரியராக அ/நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கடமையேற்று சேவை செய்தார்.

1975.12.31ல் இடமாற்றம் பெற்ற இவர் 1976.01.01 முதல் கமு/மல்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் மௌலவி உதவி ஆசிரியராக கடமையாற்றும்போதே 1982.02.01 முதல் 31.12.1983 வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் அசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். அதே பாடசாலையில் தனது சேவையைத் தொடர்ந்த இவர் 01.04.1994 முதல் இடமாற்றம் பெற்று கமு/அல்-ஹுசைன் வித்தியாலயத்தில் பிரதி அதிபராக இன்றுவரை கடமையாற்றி வருகிறார். 2004.12.26ல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் கடும் பாதிப்பிற்கு உள்ளான இப்பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கும் பௌதீக வள வளர்ச்சிக்கும் என்னோடு தோளோடு தோள் நின்று உழைத்த ஒருவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இவரது சேவைகள் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. சமய விடயங்களிலும், சமூக சேவைகளிலும் இவரது ஈடுபாடு எந்தளவிற்கு இருந்தது என்பதை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மறைக்காயர் சபை உறுப்பினராகவும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட தலைவராகவும் இன்று வரை சேவையாற்றி வருவது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறந்த ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் தனது சேவைகளைச் செய்து எல்லோரினதும் நன்மதிப்பைப் பெற்று இன்று ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்வுகால வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமும் நிறைந்ததாக அமைய வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.


அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர்
அதிபர்
கமு/அல்-ஹுசைன் வித்தியாலயம்
மாளிகைக்காடு.
thanks: Kalasem

இவ்வருடத்தில் கிழக்கில் பல மாதிரிக் கிராமங்கள் : கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை


கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பின் தங்கிய கிராமங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்து அக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் 9 புதிய மாதிரிக்கிராமங்களை அமைக்க கிழக்கு மாகாணசபை திட்டமிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் ஹிரா கிராமம், பாலமுனை, சாகாமம், ஆலையடிவேம்பு மற்றும் அம்பாறை நவகம்புரவும், திருகோணமலை மாவட்டத்தில் மகாதிவுல்வெவ, ஸாபி நகர், வேதத்தீவு, மூதுர் நிலாக் கேனி கிராமங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலாந்தீவு, உருகாமம், பணிச்சங்கேனி ஆகிய கிராமங்களும் இவ்வருடம் முடிவடைவதற்குல் முன் மாதிரி கிராமங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெறிவித்தார்

காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணம்

ஹகீம் சம்பந்தன் பேச்சு
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது.


மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை !அமைச்சர் அதாவுல்லா தெரிவிப்பு


மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.

கிராம சேவக உத்தியோஸ்த​ர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம சேவக உத்தியோஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு சீபிரீஸ் உணவக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.வை.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் ஸ்தாபகரும் கொம்டெக் கல்வியகத்தின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நழீர் , தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.எச்.ஏ.ஹலீம், பொருளாளர் ஸீ.எம்.ஏ.முனாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நியாயமானது

 


கிழக்கு வளாக துணைவேந்தர் பதவியில் சிங்கள அதிகாரி: கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்து வரும் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்துள்ளார்.

கொம்டெக் நிறுவனத்தில் வெளிவாரி பட்டப் படிப்புக்கான புதிய வகுப்புகள் அங்குரார்ப்பனம்!


imagesசாய்ந்தமருது கொம்டெக் கல்வி நிறுவனத்தின் 2012ம் ஆண்டுக்கான வெளிவாரி பட்டப் படிப்புக்கான புதிய வகுப்புகளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று கொம்டெக் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்றது.

இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் ஊடகங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பது கவலைக்குரியதாகும்

MubarakAMajeed
இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் பற்றி சில ஊடகங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பது கவலைக்குரியதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது

Saturday, January 21

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் தவம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இணைய தயாராகிறார்!

 


அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரச்சை சேர்ந்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.தவம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
 

இது தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்று இரவு அவரது இல்லம் சென்று பேச்சு நடத்தியுள்ளனர் என அறிய முடிகின்றது.

2011ம் ஆண்டில் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்


2011ம் ஆண்டில் கல்விபொது தராதர சாதாரணதர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கொம்டெக் கல்வியகம் வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 250க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கணணி மற்றும் ஆங்கிலப்பயிற்சி பாடநெறியினை ஆரம்பிக்கும் நிகழ்வு கொம்டெக் நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக கொம்டெக் கல்வியகத்தின் பணிப்பாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அட்டையினை வழங்கிவைத்தார்.

Wednesday, January 18

சாய்ந்தமருது 14ஆம் பிரிவு கிராம சேவகர் தாக்கப்பட்டதாக முறைப்பாடு



சாய்ந்தமருது 14ஆம் பிரிவு கிராம சேவகரான எம்.என்.எம்.சஜாவை கடந்த சனிக்கிழமை ஒரு குழுவினர் தாக்கியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடமை நிமித்தம் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் தன்னை தாக்கியதாகவும் குறித்த முறைப்பாட்டில் கிராம சேவகர் குறிப்பிட்டுள்ளார்.