Sunday, July 8

அழுத்தங்களுக்கு அடிபணிந்து சேவையாற்றவேண்டியுள்ளது - பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்


சம்மாந்துறை பிரதேச இளநிலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் இரண்டாவது தடவையும் உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்கும் நிகழ்வு  06. 07.2012ல் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர்; எஸ்.எம்.எம். இஸ்மாயில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம் இரத்தங்களோடு போராட வேண்டியுள்ளது. அத்துடன், நூற்றுக்கு மேற்பட்ட கல்விமான்களோடு எங்களது கருத்துக்களை மெய்பித்து அதனை செயற்படுத்திக் காட்டவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதற்கு மேலாக நிருவாக ரீதியான சில அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் அங்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களோடு ஒரு இயல்பு நிலையான தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. இதற்கு மேலாக, சமூக அழுத்தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மேலாதிக்க செயற்பாட்டாளர்களின் அழுத்தங்கள் போன்றவற்றுக்கு நாங்கள் அடிபணிந்து அல்லது அவர்களது அழுத்தங்களின் மத்தியில் தான் தொழிலாற்ற வேண்டியுள்ளது.

Saturday, July 7

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு செயற்பட மூன்று முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

Rauf Hakeem
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை 06.07.2012) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடை பெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபை – யுனெப்ஸ் ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்



666கல்முனை மாநகர சபையானது யுனப்ஸ் நிறுவனத்துடன் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றை யுனப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நேற்று கைச்சாத்திட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே. லியாகத் அலி,  யுனப்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்திட்ட முகாமையாளர் வி.சீலியா மாகர்ஸ், யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் நிபுணர் சி.சிவா, யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் செயற்பாட்டு முகாமையாளர் குருபரன், முதல்வரின் செயளாலர் இன்சாட் மற்றும் மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு பொறுப்பாளர் என்.எம்.அக்றம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுபான அனுமதி பத்திரம் கோரினேனா? என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் வாதிகளினால் பரப்பப்பட்ட கட்டுக் கதையே என்கிறார் பைஸால் காஸிம்!


மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காஸிம் அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது;
பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொத்துவிலில் உள்ள ரெஸ்டுரன்ட், ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிகை விடுத்ததாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் குறித்த செய்திகளை மையப்படுத்தி என்னை மட்டுமல்லாமல் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருதலைப்பட்சமான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களும் விமர்சனமும் எமது கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் எனது சுயகௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு கூட பாரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

Friday, July 6

கிழக்கு மாகாண சபையின் ஆட் சியை நாம் கைப்பற்றுவோம் : TNA






கிழக்கு மாகாண சபையின் ஆட் சியை இம்முறை தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கைப்பற்றும் அதற் கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கி அர்ப் பணிப் போடு பாடு படும் ௭ன்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கேட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேலும் தெரிவித்ததாவது, நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இது மிக முக்கியமான தேர்தலாகும். ஆகையால் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மிக முக்கியமான தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைய வுள்ளது.

சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் முபாறக் மௌலவி காலமானார்!


சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி இன்று மாலை தனது 56 வது வயதில் கொழும்பில் காலமானார்.
ஜனாசா நாளை காலை சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்படும்.

கல்முனையில் “திறமைக்கு மரியாதை” விருது வழங்கும் விழா


121


சாய்ந்தமருது கலை, கலாசார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமையம் ஏற்பாடு செய்துள்ள “திறமைக்கு மரியாதை’” விருது வழங்கும் விழா எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, எஸ்.ஜீ.ஏ. நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.ஜனூஸின் எழுத்து ஆக்கத்தில் உருவான “வை திஸ் கொலவெறி” குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும்- மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் ௭ன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார் .
கிழக்குத் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா ௭ன்று கேள்வியெழுப்பப்பட்டபோது . அதற்கு மேலும் பதிலளிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகும். அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார் .

Thursday, July 5

சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் சிரமதான நிகழ்வு


75765ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் யுனொப்ஸ் நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவும் இல்ஷாம் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் இடம்பெற்றது.
இதில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமாகிய அப்துல் பஷிர் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர்,சாய்ந்தமருது சகாதார வைத்திய அதிகாரி சகியா இஸ்ஸடீன், அதிபர் எம்.நசார் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜவ்பர், இல்ஹாம் இளைஞர் கழகத்தலைவர் ஏ.எம். நவ்பான் சாய்ந்தமருது சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்


ஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. நாம் இத்தகையவர்களையா நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கின்றோம் ௭ன்று சமூக ஆர்வலர்கள் பலரும் நொந்து கொண்டுள்ளனர் .