Thursday, July 28

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள விளம்பர பலகைகளில் அழிக்கப்பட்ட அரபு எழுத்துக்கள்...


o                                                       

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வீதிகளுக்கு நகர சபையினால் பெயரிடப்பட்ட விளம்பர பலகைகளில் அரபு எழுத்துக்கள் இனந்தெரியாதோரினால் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த வீதி விளம்பர பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் வீதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதில் அரபு எழுத்து மாத்திரம் இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் யார் இதை அழித்தார்கள் என்பது தொடர்பில் எமக்கு இன்னும் தெரியவில்லை எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ்  நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். (எம்.சுக்ரி)






சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை நிவர்த்தி செய்து கல்வி வேட்கையைத் தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் போதிய வசதிகளற்ற நிலையில் இயங்குவதனால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரினால் திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 25 வருடகாலம் பழமை வாய்ந்தது. இவ்வாறான கட்டிடம் இதுவரை புனர்
நிர்மாணம் செய்யப்படவில்லை. இதேவேளை சுனாமி பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடற்கரை வீதியிலிருந்து முற்றாக சேதமடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன சிலகாலங்களாக நூலகக் கட்டிடத்தில்   தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் அவை சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படட நிலையில், நூலகக் கட்டிடத்தை குறைந்தது அழகுபடுத்தும் முயற்சிகூட செய்யப்படாமல் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது.

Wednesday, July 27

சம்மாந்துறையில் குடிசைகள் தீக்கிரை

புதன்கிழமை, 27 ஜூலை 2011 12:01
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த 15  குடிசைகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில்  இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

Tuesday, July 26

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் தொழிநுட்ப மாற்றீடு பயிற்சி



(யூ.கே. காலித்தீன்)

தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் தொழிநுட்ப மாற்றீடு பயிற்சி செயல் முறை பட்டறையொன்று சாய்ந்தமருது பிரதேச
செயலகத்திற்குட்பட்ட ”திவி நெகும” பயனாளிகளுக்கு இன்று விதாதா வளநிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


By Afzal On Tuesday, July 26, 2011
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவான 17 பொறியியல் துறை மாணவர்கள் உட்பட 75 பல்கலைக்கழக மாணவர்களையும் மற்றும் விளையாட்டுதுறையில் தேசிய மட்டத்திற்கு தெரிவான 30 மாணவர்களையும் பாராட்டி க.பொ.த.உயர்தர மாணவர் தினத்தில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு

26/07/2011

காத்தான்குடி டீன் வீதியில் கடற்கரையோரமாக அமையப்பெற்றுள்ள MSM. அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின்  நினைவாலயத்தில் அவரது  87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரால்  அன்னதான நிகழ்வு கடந்த சில நாட்களாக  மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த நிகழ்வானது  இசை முழக்கங்களுடன் பாரிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் ஆண், பெண் வித்தியாசமின்றி சகலரும் கலந்து கொண்டிருப்பத்துடன் ஒருசில வெளியூர் முகங்களையும் காணமுடிகின்றது.
இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு முக்கிய உலமாவை காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறினார்,

நிந்தவூர் கசிப்ல் உலூம் அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டமளிப்பு விழா




நிந்தவூர் கசிப்ல் உலூம் அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டமளிப்பு விழா நேற்றையதினம்  கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. 

கல்லூரி நிர்வாக தலைவர் மௌலவி ஏ.எல்.இமாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தலைவர் உட்பட  உலமாக்கள் பலர்
கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு





சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
அதன் தலைவரும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபருமான அல்-ஹாஜ் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக் (ஜவாத்) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மைதானத்திற்கான மண் நிரப்பும் பணியை ஆரம்பித்து வைத்தார்.

Sunday, July 24

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் பிரதேசத்திற்கான அலுவலகம் திறந்து வைப்பு



 
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் பிரதேசத்திற்கான அலுவலகம் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் திறந்து வைக்கும் அண்மையில் பொத்துவில் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

வைபவத்தில்  ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 
அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி




கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2364 வாக்குகள் கிடைத்து்ளது.
வெற்றி பெற்ற மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.பாயிசுக்கு தனது சொந்த ஊரில்  மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Saturday, July 23

கல்முனை நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உதவி




கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை ஜம்மியத்துல் உலமா சபையினூடாக மீன்பிடி உபகரண உதவிகளை வழங்கியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலத்தின் கூட்ட மண்டபத்தில் இஸட். ஏ.நதீர் மெளலவி தலைமையில்  இடம் பெற்ற இன்நிகழ்வில் கல்முனை ஜம்மியத்துல் உலமாவும் மற்றும் நன்நீர் மீன்பிடியாளர்களும் கலந்து கொண்டணர்

இன்நிகழ்வின் போது நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு வலை மற்றும் மீண் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில் இடம்பெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டி!





மாவடிப்பள்ளி வில் ரு வின் ( Will to Win ) விளையாட்டுக்கழகத்தின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில் இடம்பெற்ற
8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை றியல் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் 2.4  ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி! தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில்




இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட  பதில் பீடாதிபதியும் விளையாட்டு ஆலோசனை பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஜௌபரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தாஹிரின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் , பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பிரசன்யமாகி இருந்தார்கள்.

கொம்டெக் கல்வியகத்தில் 2010 ல் வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறியினை பூர்த்தி செய்த பட்டதாரி மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா!






சாய்ந்தமருது கொம்டெக் கல்வியகத்தில் 2010 ல் வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நெறியினை பூர்த்தி  செய்த பட்டதாரி மாணவர்களுக்கும் மற்றும் 2010 ல் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றி
கல்வியகத்தில் கற்கை நெறியினை தொடர்ந்த 400 மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா இன்று கொம்டெக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொம்டெக் கல்வியகத்தின் சிரேஸ்ட பதிவாளர் எம். எம். ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.அஸ்றப் இ கணக்கியலும் நிதியும் துறைசார் தலைவர் கலாநிதி ஏ.ஜௌபர் இ மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி எம்.எஸ்.சிராஜ்இ இறக்காம பிரதேச சபைத் தவிசாளர் ஏ. நைசர் மற்றும் விரிவுரையாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் ஆர்ப்பாட்டம்!




சாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில்  சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது மேற்கு கரைவாகு வட்டையில் நெற் பயிர் செய்கை பண்ண முடியாது கைவிடப்பட்ட நிலத்தை
அந்த நிலத்திறகு உரித்துடைய மக்கள் மண் போட்டு நிரப்பி அவ்விடத்தை மேட்டு நிலமாக மாற்றி மேட்டு நிலப்பயிர் செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்த முயற்சியினை விவசாய திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதனை தொடர்ந்து அக்காணிக்குச் சொந்தக்காரர்களான பெரும் திறளான மக்கள் அவ்வதிகாரிகளுக்கு எதிராக நேற்று வொலிவேரியன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்..

சுற்றுலாத்துறையை மேம்படுத்த கிழக்கு மாகாணத்துக்கு எயார் டெக்ஸி சேவைகள்


[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 03:13.36 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன
இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தமது சேவைகளை கிழக்கின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கவுள்ளது.

Thursday, July 21

எருமை மாட்டிறைச்சி விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு


கல்முனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக எருமை மாட்டிறைச்சிகளை விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு தலா 20,000 ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த கல்முனை நீதிபதி, கைப்பற்றப்பட்ட இறைச்சியை அழிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Tuesday, July 19

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்


July 18, 2011  11:38 am
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படடுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா தெரிவித்தார்.

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி சாதனை


காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி சாதனை


July 19, 2011  08:06 am






























அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவி ஆர்.சனூஜா பேச்சுப் போட்டியில் பிரிவு 01 இல் தங்கப் பதக்கத்தினை வென்றார்.

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி மீண்டும் திறக்கப்பட்டது

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி மீண்டும் திறக்கப்பட்டது


July 18, 2011  08:20 pm





























கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலை மாணவர்களால் இவ்வீதி அமைந்துள்ள பகுதிகளில் சிரமதானம் இடம்பெற்றதோடு அங்கிருந்த அணைகள் அகற்றப்பட்டு பதை திறந்துவிடப்பட்டது.

சாய்ந்தமருது கடற்கரையில் இராட்சத மீன்!


சாய்ந்தமருது கடற்கரையில்  ஞாயிற்றுக்கிழமை (17.07.2011) இராட்சத மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கோழிக்கள்ளச்சுறா என அழைக்கப்படும் இம்மீன் இனம் சுமார் 10 அடி நீளம் கொண்டது. அம்மீனை படத்தில் காணலாம்.



உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாளிகைக்காடு பிரதேசத்தில் பொதுக் கூட்டம்



 காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்  போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று  மாளிகைக்காடு பிரதேசத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், வன்னி பாராளுமன்ற
உறுப்பினர் ஹனைஸ் பாறூக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் உட்பட மேலும் பல அரசியல் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


Wednesday, July 13

பேரணி , பிரகடனம் பிட்போடப்பட்டுள்ளது


தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ”நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்ற பேரணி மற்றும் பிரகடனம் ஏட்பாட்டாளர்களினால் பிட்போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடம்பெறவிருந்தது. இது தொடர்பான விரிவான செய்தி பின்னர் வழங்கப்படும்.

கல்முனை ஸாஹிறா கல்லூரியில் சமபோச ” கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி


 Tuesday, July 12, 2011

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை உதைபந்தாட்ட சங்கமும் , இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கமும் இணைந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய 13வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ” சமபோச ” கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் இடம்பெற்றசது.

என்.நிப்ஸியா பேகம் கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான மத்தியமுகாமின் முதலாவது வரலாற்றுச் சம்பியனுக்கு  ஊர் ஒன்று கூடி பாராட்டு  ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது..

சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்தில் அமைந்துள்ள மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் ( ஜி.எம்.எம்.எஸ் ) தரம் 7ல் கல்வி பயிலும்  என்.நிப்ஸியா பேகம் எனும் மாணவி  கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை மாநகர ஆயுர்வேத வைத்தியசாலை கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில்


கல்முனை மாநகர ஆயுர்வேத வைத்தியசாலை கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர்  செனட்டர் இஸட்.எம்.மசூர்மௌலானாவின் அழைப்பின் பேரில்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வைத்தியசாலைத் திறந்து வைத்தார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயமாக திருமதி நதிக்கா தர்மசிரியுடனான கலந்துரையாடல்



சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின்  அபிவிருத்தி விடயமாக ”நேச்சர் சீக்கிரட்” கொம்பனியின் பென்டா பேபி தயாரிப்பு முகாமையாளர் திருமதி நதிக்கா தர்மசிரியுடனான கலந்துரையாடலொன்று
இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ரி. இப்றாஹிம் தலைமையில் நடைபெற்றது.

வைத்திய சாலையின் பல்வேறு அபிவிருத்தி விடயமாக கலந்துரையாடப்பட்ட இந்நிகழ்வில்  வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


'நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்' - நாளை புதன்கிழமை முஸ்லிம்கள் எழுச்சி அரசியல்-தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில்






இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும், கிழக்கு மாகாண சிவில் சமூகமும் ஒன்றிணைந்து நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்'' எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்

விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள்
































சமூக சேவைத் திணைக்களத்தினால் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோருக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சைக்கிள் தரிப்பிடம்

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சைக்கிள் தரிப்பிடம்




சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கான சைக்கிள் தரிப்பிடம் ஒன்றினை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் மற்றும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை அபிவிருத்தி செய்வதற்கும் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனி முன்வந்துள்ளது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் வேண்டுகோளினை ஏற்று இவ்வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அல்ஹாஜ் எம்.ரீ. இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனியின் உதவி தரப்படுத்தல் முகாமையாளர் திருமதி நதீகா தர்மசிறி, கல்முனை பிராந்திய விற்பனை பிரதிநிதி ஏ.எல். பாஹிம் மற்றும் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் அபிவிருத்தி சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tuesday, July 12

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தபால் மூல வாக்களிப்பு


July 12,2011
இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலுக்குரிய தபால் மூல வாக்களிப்பு இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தேர்தலில் பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11,700 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்டு விழா


By Afzal On Monday, July 11, 2011

கல்முனையில் ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்டு விழா கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நேற்று அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் கௌரவ அதிதியாகவும் , கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவு இணைப்பாளர் எஸ்.சசிதரன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்


Monday, July 11, 2011
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று இடம்பெற்றது.

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச். எம். எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் , கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.பஸீர் அவர்களும் மற்றும் உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அபிவிருத்திக் குழுத் தலைவராக ஹரீஸ் - The gift for the thursdays protest arrangement to harees

அபிவிருத்திக் குழுத் தலைவராக ஹரீஸ்

July 11, 2011  08:21 pm கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் அபிவிருத்திக் குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகளை அபிவிருத்தியின் பால் வழிநடாத்தும் பொறுப்புக்களை அந்தந்த பிரதேச அரசியல் வாதிகளின் கைகளில் ஒப்படைப்பதன் மூலமாக பிரதேச அபிவிருத்திகளை வெற்றிகரமாக அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியும் என்ற நோக்குடனேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகவும் கல்முனை மாநகரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றது.