Thursday, May 31

வடகிழக்கின் நிறுவனங்கள் யாவும் கணினி மயப்படுத்தப்படுகின்றது.


இலங்கை அரச வலயமைப்பு செயல்திட்டத்திற்கு இணைவாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. வடகிழக்கில் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தகவல்களை திரட்டும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொலை தொடர்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் அரசதிட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முலைத்தீவு, போன்ற மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 75 அரச நிறுவனங்களில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தொலைத் தொடர்பு தொழிநுட்ப முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஆதம்பாவா நியமனம்

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஏ.ஆதம்பாவா இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனையில் கௌரவம் பெற்ற மாநகர முத்துக்கள் :நிகழ்வு

00001
கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைரவிழா மரதன் ஓட்டப் போட்டி


சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைரவிழாவினை முன்னிட்டு மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வு நேற்று காலை இப்படசாலையின் முன்றலில் ஆரம்பித்து கல்முனை பொலிஸ் வீதி ஊடக சென்று இலங்கை வங்கி சுற்று வட்டம், ஹிஜ்ரா சந்தி ஊடாக மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்தது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவராக முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபாவும், செயலாளராக முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எச். அப்துல் பஸீரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற
மரைக்காயர் சபைக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றது.

கல்முனை தேரரின் அறிவுரை

 


மதஸ்தலங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், மனிதநேயமற்ற செயற்பாடுகளை யார் செய்தாலும் அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் எல்லாமதங்களையும் நாம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். என கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கிழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை (29) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Thursday, May 10

ஒலுவில் துறைமுகத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதில் இழுத்தடிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் கண் விழிப்பார்களா?

(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கென இரண்டாம் கட்டமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையை மேலும் தாமதிக்காமல் துரிதமாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் சார்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, றிஷாட் பதியுத்தீன் ஆகியோருக்கு மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாண சபை தேர்தலில் புதுமுகங்களை களமிறக்குகிறது முஸ்லிம் காங்கிரஸ்..!

77
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுமாக இருந்தால் பல புதிய முகங்களை வேட்பாளராக களமிறக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் தெரிவு தொடர்பாக அக் கட்சி மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் இணைந்து கொண்ட ஹாபிஸ் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வர் றஹ்மத் மன்சூரை கல்முனை சார்பாகவும் சம்மாந்துறை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிரையும் சாய்ந்தமருது சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அப்துல் மஜீத்தையும் அட்டாளைச்சேனை சார்பாக கட்சியின் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரையும் களமிறக்குவதற்கு மு.கா.தலைவர் விரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.

” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” ( Career Fair – 2012) - தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிற் சந்தை


” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” ( Career Fair – 2012) எனும் தொனிப்பொருளில் அமைந்த தொழிற் சந்தையொன்று இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சி. சல்பியா தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

சாய்ந்தமருது வொலிவேரியன் வீடமைப்பு திட்டத்தில் புதுவருட நிகழ்வு

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வினையும் சகல இனங்களினதும் கலை கலாசார மற்றும் உணவு வகைகளை மாணவர் மத்தியில் தெளிவுபடுத்தும் வகையில் சாய்ந்தமருது வொலிவேரியன் வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் புதுவருட நிகழ்வொன்று இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கௌரவ அதிதியாகவும் சர்வ மத தலைவர்கள் விசேட அதிதிகளாகவும் பிரதேச பாடசாலை அதிபர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். மாணவர்களாலும் பெற்றோர்களாலும் தயாரிக்கப்பட்ட பலவகையான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதிதிகள் மற்றும் மாணவர்களுக்கும் நிகழ்வின் இறுதியில் இவ் உணவுப் பொருட்கள் பரிமாறவும் பட்டது.

அம்பாறை – தமனை பகுதியில் 400 ஏக்கரில் அன்னாசி செய்கை.


அம்பாறை – தமனை பகுதியில் வர்த்தக அடிப்படையில் 400 ஏக்கரில் புதிய இன அன்னாசி செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த பத்து வருடங்களாக சிறிய அளவில் அன்னாசி செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட அன்னாசிப் பழங்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்ததையும் கருத்தில் கொண்டு அன்னாசிச் செய்கைளை மேற்கொள்ள விவசாயிகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, May 9

காரைதீவில் பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு

காரைதீவின் முதல் குறுந் திரைப்படமான பட்டறிவு திரைப்பட வெளியீட்டு நிகழ்வு ஞாயிறன்று காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது அதிதிகள் வரவேற்கப்படுவதையும், திரைப்படத் தயாரிப்பாளர் கே.ரமேஸ் குத்துவிளக்கேற்றுவதையும், திரைப்பட இயக்குனர் இ.கோபாலசிங்கம் திரைப்பட இறுவட்டை பிரதம அதிதியான ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.புஸ்பகுமாரிடம் வழங்கி வைப்பதையும், பின்பு அவர் உரையாற்றுவதையும், பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் உரையாற்றுவதையும் படத்தின் சில காட்சிகளையும் படங்களில் காணலாம்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு


கல்முனை பிரதேச கிராமிய சிவில் பாதுகாப்பு உத்தியோஸ்தர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யு. வசந்த குமார , பொலிஸ் பொது மக்கள் தொடர்பு உத்தியோஸ்தர் ஏ.எல்.நபீல் உட்பட கிராம சேவை உத்தியோஸ்தர்கள் பவலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தென்னிலங்கை மீனவர்களுக்கு உதவிய கல்முனை சட்டத்தரணிகள் மீது கண்டனத் தீர்மானம்!

தென் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி வலைத் திருடர்களை பிணையில் செல்வதற்கு உதவிய கல்முனைமாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகளுக்கு எதிராக சாய்ந்தமருதில் கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடற்றொழில் திணைக்களம் தயாரில்லை என்ற குற்றச்சாட்டும் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tuesday, May 8

கல்முனை மாநகரத்தை அமெரிக்காவின் மாநகரம் ஒன்றுடன் இணைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி. பேச்சு

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அமெரிக்காவிலுள்ள பல தொண்டர் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தற்போது அமெரிக்காவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
 
 
 

மருதமுனை வேன் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்; இருவர் ஆபத்தான நிலையில்!

 

(செயிட் ஆஷிப்)
மருதமுனையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வேன் ஒன்று ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளானதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுள் இருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஹசன் மௌலவியின் இளைய புதல்வரான அல்-ரஸ்ஸான் (வயது35) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரே வாகனத்தை செலுத்திச் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Monday, May 7

சாய்ந்தமருதில் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுத் தோட்ட முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் , பயிர் விதைகள் மற்றும் பயிர்க்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது கமநலசேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.ஆர்ஏ. லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண தேர்தலை நடத்துவது குறித்து நாளை ஜனாதிபதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம்!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

எதிர்வரும் 09ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிற் சந்தை நிகழ்வு

Picture1
(அப்துல் அஸீஸ்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடாத்தப்படவுள்ள 2012ஆம் ஆண்டிற்கான தொழிற் சந்தை நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி புதன்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
தொழில் வாய்ப்புக்களை தேடிக்கொள்ளல், பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளல், உள்நாட்டு நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்ளல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த தொழிற் சந்தை நடைபெறவுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுயவிபரக் கோவை மற்றும் ஆவணங்களுடன் வருகை தருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

kalmunai-wd-2
கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி சுகாதார பிரிவு ஊழியர்களுடன் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (03.04.2012) கலந்துரையாடினார்.
இதன்போது திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை திறன்பட மேற்கொள்வதில் சுகாதார பிரிவு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு முதல்வரினால் அவற்றிற்கான தீர்வுகள் பெறப்பட்டன.

கல்முனை மாநகர முதல்வருக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். வலீத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் சம்மந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இதுவிடயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஐக்கிய வணிகர் அமைப்பினரால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

செப்டம்பரில் கிழக்கு மற்றும் இரு மாகாண சபைகளுக்கான தேர்தல்

கிழக்கு மாகாண சபை, சம்பிரகமுவ மாகாண மற்றும் வடமத்திய மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்தார்.

Saturday, May 5

ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா சட்டத்தரணி பரீட்சையில் சித்தி

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு வாழ்த்து

பிரபல கல்விமானும் சமூகசேவையாளருமான ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா, சட்டத்தரணி பரீட்சையில் சித்தி பெற்றமையை சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு பாராட்டி வாழ்த்துத் தெரிவிததுள்ளது.

கல்வித்துறையிலும் சமூகசேவையிலும் இனநல்லுறவிலும் மிகுந்த அர்ப்பணிப்புடனும்,தியாகத்துடனும், நேர்மையுடனும் செயற்பட்டுவரும் அல்ஹாஜ் எம்.சீ.ஆதம்பாவா அவர்களின் விடாமுயற்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு ஓரு முன் உதாரணமாக
விளங்கும் என சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தம்புள்ள பள்ளியை அகற்ற முயன்றமைக்காக பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்


எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன் என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார்.
உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே. உண்மையில் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கமாகும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி அண்மையில் வரிப்பத்தான்சேனைஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர்.