அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் தமது உறவினர் ஒருவரை கொலை செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியினால் வெட்டியும் கொலைசெய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் அல்லது ரசாக் என்றழைக்கப்படுபவரை கடந்த 2002 ஆம் ஆண்டு அதேபிரதேசத்தில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.





