Wednesday, June 29

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கடந்த பலவருடங்களாக ஆசிரியர்களாக பணியாற்றி மாணவர்களின் கல்வி வளர்சியில் பெரும் பங்காற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை




கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கடந்த பலவருடங்களாக ஆசிரியர்களாக பணியாற்றி மாணவர்களின் கல்வி வளர்சியில் பெரும் பங்காற்றி  ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவமொன்று கல்லூரியன் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

Monday, June 27

சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் சிறுவர் மதரஸா மாணவர்களுக்கான வருட்ந்த பரிசளிப்பு நிகழ்வு





Monday, June 27, 2011 :
சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் சிறுவர் மதரஸா மாணவர்களுக்கான வருட்ந்த பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.


பொறியியளாலர் எம்.ஐ.ஐ.ஜெஸீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது அல்-இஸ்லா ஜும்ஆ பள்ளித் தலைவர் சதக்கத்துள்ளாஹ் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளித்தலைவர் எம்.ஹக்கீம் உட்பட அமமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதில் இரண்டு கவிதை நுல்களின் வெளியீட்டு நிகழ்வும், எழுத்தாளர்களை கௌரவிப்பு நிகழ்வும்


Monday, June 27, 2011


இரண்டு கவிதை நுல்களின் வெளியீட்டு நிகழ்வும்,  எழுத்தாளர்களை கௌரவிப்பு நிகழ்வும் இன்று சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்றன.

சாய்ந்தமருது லக்ஸ்டோ அமையகமும் தடாகம் கலை இலக்கிய வட்டமும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் மருதுர் அன்சார் தொகுத்தளித்த ”உன்னை நினைப்பதற்கு” என்ற கவிதை நுலும் சப்னா அமினின் ”நிலாச்சோறு”  கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டன.


இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமில்இ கே.எம்.ஏ.றசாக் ஆகியோர் பிரதம அதிதிகலாக கலந்து கொண்டனர். 









உலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


Sunday, June 26, 2011

உலகில் மிகவும் செல்வாக்குள்ள  500 முஸ்லிம் பிரமுகர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் ஜுலை 2 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

Sunday, June 26

யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று இன்று முதல் புதிய பஸ் சேவை


யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான பஸ் சேவை இன்று வெள்ளிக்கிழமை முதல் அக்கரைப்பற்று வரையும் நீடிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வடக்கு பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் இந்த பஸ் இன்று முதல் தினமும் மாலை 7.30 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு சேவையை ஆரம்பிக்கும்.

கல்முனை சஹிரா கல்லூரியில் "அறிவியல் உலகை சூழ்ந்திருக்கும் அறியாமை இருள்" தலைப்பில் சொற்பொழிவு


  அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சாய்ந்தமருது மற்றும் கல்முனை கிளைகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள ”அறிவியல் உலகை சூழ்ந்திருக்கும் அறியாமை இருள் ” எனும் தலைப்பிலான  சன்மார்க்க சொற்பொழிவொன்று 
நாளை  (26.6.2011) மாலை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ”மஸ்ஜிதுல் ஸாஹிரா ” பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

15 வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்றப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் தட்டிக்கொண்டது....


சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகத்தின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்றப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்நதமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் விழ்ப்பபுணர்வு கருத்தரங்கு





தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட சாய்ந்நதமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் விழ்ப்பபுணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் இலவசமாக மரக்கறி விதைகள்

அம்பாறை மாவட்டத்தில் இலவசமாக மரக்கறி விதைகள்

 

 

அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையை ஊக்குவிக்க உலக உணவு விவசாய ஸ்தாபனம் கிழக்கு மீள்எழுச்சி திட்டத்தின் கீழ் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக மரக்கறி விதைகளை வழங்கி வருவதாக உலக உணவு விவசாய ஸ்தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.மார்க்கண்டு தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத் தர்களினால் தெரிவு செய்யப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு தலா 700 ரூபா பெறுமதியான பாகல், தக்காளி, மிளகாய், பயிற்றை, கீரை ஆகிய 5 வகையான விதைகளை பிரதேச செயலக ரீதியாக வழங்கி வருகின்றதாக தெரிவித்தார்.

இதேவேளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 52 மேட்டு நிலபயிர் செய்கையாளர்களுக்கு கால் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்வதற்காக 900 பேருக்கு சோளம், 435 பேருக்கு பாசிப்பயறு, 67 பேருக்கு உழுந்து, 1500 பேருக்கு கௌவ்பி, 150 பேருக்கு நிலக் கடலைகளுக்கான விதைகளை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக உலக உணவு விவசாய ஸ்தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.மார்க்கண்டு தெரிவித்தார்

அம்பாறையில் காரைதீவு மற்றும் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்கள் பூட்டு

அம்பாறையில் விசேட அதிரடிப்படை முகாம்கள் பூட்டு
அம்பாறை மாவட்டத்தில் நாளைய தினம் இரண்டு விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள காரைதீவு பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமும் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுமே இவ்வாறு மூடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு மூடபபடும் இந்த விசேட அதிரடிப்படையினர் வவுனியாவுக்கும், மல்வத்தைக்கும் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பகுதியில் தனியார் கட்டடம் மற்றும் அரச கட்டடம் என்பவற்றை உள்ளடக்கி இயங்கி வந்த விசேட அதிரடிப்படை காரியாலயம் நாளைய தினம் மூடப்படும் அதேவேளை தனியாரின் உடைமை கையளிக்கப்படவுள்ளதாகவும் அரச கட்டடத்தில் இராணவத்தின் தங்க வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
அத்துடன் இப்பகுதியை அண்டி மூடப்பட்டிருந்த வீதியும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Friday, June 24

"முஸ்லிம் பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடாததால் நீரிழிவால் பெரிதும் பாதிப்பு'

உடற்பயிற்சியில் ஈடுபடாமையின் காரணமாக நீரிழிவு நோயினால் முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார். பொதுவாக எமது நாட்டில் நகரப்புறங்களில் வாழும் அறுபது சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூற்றாண்டு விழாக்காணும் ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் முதலாவது விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் எம்.ஜே.றபியுதீன் தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெயினுதீன்,நகர சபைத் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா, தனுஜா மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மரம் நடும் நிகழ்வு



உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு “பசுமை நிகழ்வு” எனும் தலைப்பில் மரம் நடும் நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக் கழக ஒலுவில் வலாகத்தில் சமூக விஞ்ஞான தினைக்களத் தலைவர் கே.எம்.எம் பழில் ஹக் தலைமையில் நடைபெற்றது.


Thursday, June 23

உலகின் அதிசிறந்த 50 ஆசிரியர்களுள் ஒருவராக சம்மாந்துறை மத்திய கல்லூரி ஆசிரியர் ஹஸீன்


இதுவரை கண்டிராத சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பழைய புகைப்படங்கள்




1961  ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட பள்ளிவாசலின் தோற்றம்


                          பழைய பள்ளிவாசலின் உட்புற தோற்றம்



                         பழைய பள்ளிவாசலின் முன்புற கதவு
 










                                               பழைய பள்ளிவாசல் மினாரத் 
                                                  பழைய நிர்வாக கட்டிடம் 



                                                    பழைய ஹவ்ழ் தடாகம் 



                                   கட்டிட நிர்மாணத்தின் போது (ரசாக் மௌலவி, செயலாளர்)