Friday, May 24

சாய்ந்தமருதில் மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை திறந்துவைக்கப்பட்டது


சாய்ந்தமருது கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட

மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகான சுகாதார

அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய ஏ.சீ.ஹியாகான் மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.

சாய்ந்தமருதில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் முறுகல்


சாய்ந்தமருதில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் இன்று முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. ஆற்று மண் ஏற்றிய வந்த மாட்டு வண்டிகள் இரண்டை பொலிஸார் மடக்கிப் பிடித்ததையடுத்தே   பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் இந்த முறுகல் நிலை  உருவானது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு இன்றுக்காலை கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மணல் ஏற்றிவந்த வண்டிகள் இரண்டையும் பொலிசார் கைப்பற்றினர்.
அவ்வண்டிகளை பொலிஸார் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசென்றனர். வண்டிகளை ஓட்டிச்சென்றவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதான வீதியில் திறந்திருந்த ஒரு வளவுக்குள் குறித்த வண்டிகளை செலுத்தி மணலை கொட்டிவிட்டனர்.
அத்துடன் வண்டிகளிலிருந்து மாடுகளை  அவிழ்த்துவிட்ட  அவ்விருவரும் அங்கிருந்து  தப்பிச்சென்றுள்ளனர் என்றனர். இந்நிலையில் ,அந்த மாட்டு வண்டிகளை ஓட்டி சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மணல்களை ஏற்றிக்கொண்டுவந்த வண்டிகளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் எடுத்துச்செல்ல முற்பட்ட சமயமே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் நிலை எற்பட்டது.
இதனால் அந்த வீதியில் சில மணிநேரத்திற்கு வாகன நெரிசலும் ஏற்பட்டதையடுத்து. இதனையடுத்து மண்வண்டிகளில் இருந்த உடைமைகள் கைப்பற்றிய பொலிஸார் வண்டிகளை அவ்விடத்திலேயே கைவிட்டுவிட்டு வந்துவிட்டனர் என்றனர். 

Wednesday, May 22

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய பூங்காவினை சேதப்படுத்தி மின்குமிழ்களும் திருட்டு


கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பூங்கா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை வளாகத்திலிருந்த மின் குமிழ்களும் திருடப்பட்டுள்ளன. 

பாடசாலையின் மதில்கள் மீதேறிவந்து இந்த திருட்டுச் சம்பவத்தில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பாடசாலை அதிபர் ஏ.எல்.அப்துல் றஸாகினால் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியதாக அதிபர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொத்துவில் முஸ்லிம்களுக்கு பொதுபல சேனா நேரடி அச்சுறுத்தல்..?


பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூவரசடித்தோட்ட முஸ்லிம்களின் காணிகளுக்குள் செல்லத்தடை போட்டார்கள் பொதுபலசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்கள் அடையாளப்படுத்தியவர்கள் என்று தெரிவிக்கிறார்கள் அக்காணிகளின் உரிமையாளர்கள்.
கடந்த 16ம் திகதி வியாழக்கிழமை பொத்துவில் பசறிச்சேனையை சேர்ந்த பொதுமக்கள் மேற்படி தங்களது சொந்தக்காணிக்குள் சென்றவேளையில் அவ் இடத்திற்கு வந்த 5 நபர்கள் தங்களை பாதுகாப்புப்படை என்றும், ஆமுதுறு என்றும், வானபரிபாலன அதிகாரிகள் என்றும் அடையாளப்படுத்தியதுடன் காணிகள் எங்களுக்குச் சொந்தமானது என்றும் இக் காணிகளுக்குள் முஸ்லிம்கள் வருகை தரக்கூடாது என்றும் அப்படி வருகை தரும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வோம் எனக் கூறியதுடன் கடிதம் ஒன்றிலும் கையொப்பம் இடுமாறு கூறி கையொப்பம் வாங்கிச்சென்றுள்ளனர்.

சாய்ந்தமருது புதிய நூலகத்திற்கு மேயரின் தந்தையின் பெயர் சூட்ட முதலமைச்சர் தடை விதிப்பு!

Najeeb-A_Majeed(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ என பெயர் சூட்டப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட விருக்கின்ற நூலகம் தொடர்பிலேயே மாகாண முதலமைச்சர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை முதல்வரினால் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு!


 
 
 
 
 
 
 
 
 
 
 
சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

அல்-கமறூன் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அதிபரினால் வித்தியாலயத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அம்மகஜரிக்கேற்பவே குறித்த ஒலிபெருக்கி சாதனங்கள் முதல்வரினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் புலமைப் பரிசில் பரீட்சையில் 70ற்கும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tuesday, May 21

மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிகசாலை திறப்பு விழா.



 

ல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிகசாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் நாளை (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நீதி அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் நாளை (22.05.2013) நடைபெற உள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதனால் இந்நிகழ்வானது ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 23.05.2013 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)

கிழக்கு மாகாணசபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாணசபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (21ம் திகதி) செவ்வாய்க்கிழமை காலை சபை அமர்வு தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானபோது எதுவித காரணமும் இன்றி சபை அமர்வு அடுத்தமாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

எதுவித காரணமும் இன்றி தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்ட அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பொத்துவில் காணிப்பிரச்சினைத் தீர்வுகளில் அதிரடிப்படையினரை தொடர்புபடுத்தி அச்சுறுத்த வேண்டாம்


பொத்துவில்  பூவரசயடித்தோட்டக் காணியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணிச் சொந்தக்காரர்களை வனஇலாகாவினரும் விசேட அதிரடிப்படையினரும் காணிகளை விட்டு வெளியேறுமாறு விரட்டப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டை யடுத்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி அம்பாறை மாவட்ட வன இலாக அத்தியட்சரிடம உடனே தொடர்பு கொண்டு தனது ஆட்சேபனையை தெரிவித்தார். 
காணிப்பிரச்சினைகளை முறையாகக் கையாள வேண்டும் என எச்சரித்த அவர், விவசாயிகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஆயுதப்படையினரை அணுகுவது பற்றி ஆட்சேபித்தார். மக்களைப் பயமுறுத்தி அடிபணிய வைப்பதைவிடுத்து அரச நிறுவனங்கள் மூலமாக பிரதேச சபை அல்லது பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக உங்கள் பிரச்சினைகளை முன்வையுங்கள் என அவர் வேண்டினார். இதனையடுத்து தான் உடனடியாக பொத்துவில் சென்று இவ்விடயம் பற்றி இன்று விசாரணை செய்வதாக உறுதியளித்தார். மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடு பின்வருமாறு :  

மின் கட்டண உயர்வை கண்டித்து சம்மாந்துறையிலும் எதிர்ப்பு நடவடக்கைகள்

2
நாட்டின் மின் கட்டண உயர்வை கண்டித்து  சம்மாந்துறையிலும்  மக்கள் விடுதலை முன்னணியினால் எதிர்ப்பு நடவடக்கைகள்  2013.05.19 அன்று ஹிஜ்ஜிரா சந்தியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எஸ்.புகாரி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி தொடர்பாடல் குழுத்தலைவர் எம்.முஸ்தபா லெப்பை உட்பட பலர் இன் நிகழ்வில் கந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குகள் ஏந்தியும் பதாதைகளை கொண்டும் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டியதோடு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. மேலும் மின் கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்றது.
1 2

அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வுகள்

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய மற்றும் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளை தொழிற்பயிற்சி கற்கைளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விழிப்பூட்டல் செயமர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளன. இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழியங்கும் இலங்கை மனித வள அபிவிருத்தி மன்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. 
இம்மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூல இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் திகதி புதன் கிழமையும், சிங்கள மொழிமூல இளைஞர்களுக்கான செயலமர்வு அம்பாறை நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளது. 

கல்முனையில் வீதியால் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு


கல்முனை ஆதார வைத்தியசாலை அருகில் வீதியால் நடந்துசென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த1 இலச்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிளியை மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த இருவர் அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.


கல்முனை எல்லை வீதியைச் சேர்ந்த பெண் சம்பவதினமான நேற்று மாலை 6.00 மணியளவில் உறவினர் வீடு ஒன்றிற்கு செல்வதற்காக ஆதார வைத்தியசாலை அருகில் உள்ள வீதியின் 2ம் குறுக்குத் தெருவீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போது  பின்னால் பள்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்தில் இருந்த சங்கிலியை அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெண் கூச்சல் இட்டதையடுத்து அயலவர்கள் வந்தபோது தனக்கு நேர்ந்த கதியினை கூறிய பின்னர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை  கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, May 20

கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டி (படங்கள்)

கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகள் மூதூர் சேனையூர் மத்திய மாகாணத்தில் கடந்த 2013.05.19 அன்று நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பதையும், அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண தமிழ் மொழிக்கான கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எஸ். ஆனந்தன் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் புடைசூழ மாலையிட்டு அழைத்வருவதையும் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் முகமாக மங்கள விளக்கு ஏற்றுவதையும், மாணவர்களினால் தேசிய தமிழ் மொழிப்பாட்டிசைப்பதையும், கலந்து கொண்ட விசேட அதிகள், மாகாண அதிகாரிகள் ஆகியோரையும் படங்களில் காணலாம்.

பாலமுனையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

 
அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். 
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாலமுனை 3ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய பார்த்திமா பர்வின் என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
குறித்த பெண் சனிக்கிழமை இரவு வீட்டில் ஏற்பட்ட வாய்த் தர்கத்தையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று இரவு தங்குவதற்கு அனுமதிகேட்டு அறையில் நித்திரைக்குச் சென்றுள்ளார். 
 
இந்நிலையில் பெண்ணின் கணவன் இரவு 10.20 மணிக்கு மனைவியை தேடி பெரிய தகப்பனார் வீட்டிற்குச் சென்று அறைக்குச் சென்றபோது அறையின் கூரையில் அப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார். 
 
பின்னர் கல்முனை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி 10 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஹரீஸ் எம்.பி யினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது



கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிறீன் பீல்ட் பூங்காவிற்கான வீதி அபிவிருத்தி வேலைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார். 

கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் செல்லும் குளத்தினை சுத்தப்படுத்தி அதனை மக்கள் பொழுது போக்கு இடமாக பயன்படுத்தக் கூடியவாறு இவ்வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்போது இவ்வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு தடையாகவிருந்த தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன் கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.

சாய்ந்தமருது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

(ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் வறிய மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது சமுர்;த்தி மகா சங்க ஏற்பாட்டில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 
சாய்ந்தமருது மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் விஷேட அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். 
இதன்போது திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது சமுர்;த்தி வங்கி முதலிடம் பெற்றமைக்காக அதன் உத்தியோகத்தர்களும், கடந்த வருட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையில் கூடுதல் நிதியினை சேகரித்த உத்தியோகத்தர்களும் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

Sunday, May 19

அம்பாறையில் ஜே.வி.பி. கையொப்பம் சேகரிக்கிறது (படங்கள்)



அம்பாறையில் 19-05-2013 இன்று காலை முதல் ஜே.வி.பியினர் திருக்கோயில் பிரதேசத்தில் மின்சாரக் கட்டணத்தைக் கண்டித்தும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறும் வேண்டியும் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டார்கள். அதேவேளை பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்கள்.
அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ (ஜே.வி.பி) தலைமையில் நடைபெற்ற இக்கையெழுத்திடும் வைபவத்தில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒப்பமிட்டார்கள்.

ஒலுவில் கடலில் மீட்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்

ஒலுவில் கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி மாதம் கடற்படையினரால் மீட்கப்பட்ட 61 பங்களாதேஷ் நாட்டவர்கள் இன்று தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டிலேயே இவர்கள் இன்றைய தினம் மிஹின் லங்கா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து படகு மூலம் மலேசியா நோக்கிப் பயணித்த பங்களாதேஷ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த  138 பேர்  அப் படகு கவிழ்ந்ததன் காரணமாக இலங்கையின் ஒலுவில் கடற்பரப்பில் தத்தளித்தபோது இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
பின்னர் இவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் பூசா மற்றும் மிரிஹான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் பங்களாதேஷ்வாசிகள் 61 பேர் மாத்திரம் அந்நாட்டு தூதரகத்தால் அடையாளம் காணப்பட்டு இன்றைய தினம் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை மீட்கப்பட்ட மியன்மாரைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மாருக்கு அறிவித்தபோதிலும் அங்கிருந்து இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வருடங்களுக்கென மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை

siraz meyor kalmunaiகல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் நவமணிக்கு வழங்கிய செவ்வி
கேள்வி: எப்போது அரசியலில் பிரவேசித்தீர்கள்?
பதில்: 2011 ஆம் ஆண்டில் நான் திடீரென அரசியலில் பிரவேசித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரிலும் மேலும் பிரமுகர்கள், பொதுமக்களின் வேண்டுகோளினை அடுத்தும் அரசியலில் பிரவேசிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டேன். க.பொ.த சாதாரண தரம் படிக்கும் போதே எனக்கு சமூக சேவையில் ஆர்வமிருந்தது.
எனது ஆசான்கள் அப்போது நான் அரசியலில் பிரவேசிப்பது பற்றியும் பேசினார்கள். அது 2011 இல் நனவாகியது. கட்சிக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இளம் அரசியல்வாதிகள் தோற்றம் பெற வேண்டுமென கட்சித் தலைவர் அப்போது விரும்பினார். அதேநேரம் அக்காலத்தில் சம்மாந்துறைக்கென பிரதிநிதியொருவரும் இருக்கவில்லை. இதனால் மக்களின் பெரு விருப்புடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.
கேள்வி: தேர்தல் வெற்றி பற்றி?
பதில்: 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினைக் கட்சித் தலைமைத்துவம் எனக்குப் பெற்றுத் தந்தது. கட்சி எனக்கு வழங்கிய மிகப் பெரும் கௌரவமாக நான் இதனைக் கருதினேன். அரசியலில் பிரவேசித்து 45 நாட்களுக்குள் 16800 என்ற மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றியீட்டினேன். 2011 ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல்வராகவும் பதவியேற்றேன்.

Saturday, May 18

மர்ஹூம் H.L. ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ; கல்முனை சனி மௌண்ட் காலிறுதிப் போட்டிக்கு தெரிவு

 இன்று (17.05.2013)  மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றில் மருதமுனை ஒலிம்பிக் அணியை எதிர்த்து கல்முனை சனி மௌண்ட் விளையாட்டுக் கழகம் விளையாடியது.

இப் போட்டிக்கு சிறப்பதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் அவர்களும் அதிதியாக கணக்காளர் றிஸ்வி அவர்களும் கலந்து கொண்டனர். 
இதில் ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1 கோலையும் சனிமென்ட் அணி 3 கோல்களையும் புகுத்தி   சனி மௌண்ட்  விளையாட்டுக் கழகம் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.