Monday, May 20

சாய்ந்தமருது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

(ஹாசிப் யாஸீன்)

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் வறிய மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது சமுர்;த்தி மகா சங்க ஏற்பாட்டில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 
சாய்ந்தமருது மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் விஷேட அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். 
இதன்போது திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது சமுர்;த்தி வங்கி முதலிடம் பெற்றமைக்காக அதன் உத்தியோகத்தர்களும், கடந்த வருட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையில் கூடுதல் நிதியினை சேகரித்த உத்தியோகத்தர்களும் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 
திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்திலும், சர்வதேச புகைத்தல் எதிர்;ப்பு தின கொடி விற்பனையிலும் தனிநபர் சேமிப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் ஆகக்கூடுதலான நிதியினை சேகரித்து சாய்ந்தமருது – 04ம் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் முதலிடத்தை பெற்றுள்ளதுடன் மாவட்டத்தின் முதல் பத்து உத்தியோகத்தர்களில் ஆறாம் இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment