Saturday, March 30

அக்கரைப்பற்றில் வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது - ஒருவர் வபாத்



(ADT) அக்கரைப்பற்று, ஆலின் நகர் பிரதேசத்தில் அயலவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அயலவர்கள் மூவருக்கிடையே நேற்று (29) இரவு 12.30 மணியளவில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 
இதன்போது இருவர் சேர்ந்து ஒருவரை தாக்கியுள்ளனர்.  இதன் காரணமாக காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று அதார வைத்தியசாலையில் நேற்று இரவு உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் 42 வயதான சுலமா லெப்பை ஜெலில் என தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் நிந்தவூர் பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி


"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 13 பள்ளிவாசல்களுக்கு சுமார் 48 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டன.
நிந்தவூர் சமூக  சேவை  அபிவிருத்தி நிலையத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி RU அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அல் ஹாஜ் MCM  பைசால் காசிம் அவர்களினால் பள்ளிவாசல்களுக்கான நிதிக்கொடுப்பனவுக்கான ஆவணங்கள்  பள்ளிவாசல் தலைவர்களிடம் வழங்கப்பட்டது. 

மட்டக்களப்பில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை - வியாபாரிகள் விசனம்


மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்காடி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக அங்காடி வியாபாரிகளில் ஒருவரான ஹயாத்து முகம்மது முகம்மது பாறுக் என்பவர் தெரிவிக்கையில்
நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பஸ் நிலையத்திற்கு முன்னால் மாநகர ஆணையாளர் திரு நவநீதன் அவர்களின் காலம் தொடக்கம் அங்காடி வியாபாரம் செய்து வந்தேன.; அத்துடன் என்னைப்போன்று சுமார் பத்திற்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் அவ்விடத்தில் தினமும் வியாபாரம் செய்து வந்தனர்.

Friday, March 29

அஸாத் சாலிக்கு இருக்கும் தைரியம் ஏன் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை - ரஸ்ஸாக் (ஜவாத்) கேட்கிறார்.

எந்தவித அதிகாரமும் அற்ற அசாத் சாலிக்கு இருக்கும் தைரியங்களும், உணர்வுகளும் ஏன் முஸ்லிம் தலைமைகள் என்று கூறி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இல்லை  என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.சி.யுனைட் தலைமையில் கல்முனையில் நடைபெற்றன. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Thursday, March 28

மதங்கள் மீதான ஒருசிலரின் மனவருத்தமே மதக்குரோதங்களுக்கு காரணம் - கல்முனை விகாராதிபதி



இன, மத பேதமின்ற பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த சிங்கள, முஸ்லிம்களிடையே தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு காரணம் தங்களது மதங்கள் குறித்தான ஒருசிலரின் மனவருத்தமே என்று கல்முனை சுபத்திராம ராம மகா விகாரையின் விகாராதிபதியும் அம்பாறை மாவட்டத்தின் சர்வம சம்மேனத்தின் உபதலைவரும் சமதானத்திற்கான பேரவையின் அம்பாறை மாவட்ட உபதலைவருமான ரன்முத்துகல சங்கரத்ன தேரர் துருவம் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; தங்களது மதத்தின் மீதுள்ள மனவருத்தத்தினால்  வீதிக்கு வந்து மத்த மதங்களைப் புண்படுத்தி போராடுவதற்கு நாங்கள் தயாராகவில்லை. இவர்கள் தங்களது மதங்கள் குறித்து மனவருத்தப்படத் தேவையில்லை. தங்களது மதத்தை மதித்து, மற்ற மதத்துக்கும் மதிப்பளித்து போராட்டத்தில் ஈடுபடாமல் நாட்டில் ஒற்றுமையாக வாழவேண்டும். 
இலங்கை ஒரு பெளத்த நாடு. இதனைக் காப்பாற்றுவது பெளத்தர்களின் கடமையாகும். ஆனால், இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டும் இதர மதத்தவர்களும் அவர்களது மதங்களை பாதுகாக்க வேண்டும். அது அவர்களது உரிமை. இலங்கையில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களைப் பாதுகாப்பதற்கு உரிமை இருக்கின்றது. அதற்காக, தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக ஏனைய மதங்களை குழப்பி, அவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதனை பெளத்தமதம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் இனத்தைக் குழப்பி, மதத்தைக் குழப்பி அதனூடாக தீர்வுகாண முற்படக்கூடாது. நான் ஒரு பெளத்த தேரர் என்ற வகையில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளை நினைத்து வருந்துகிறேன். முஸ்லிம்கள் எல்லாவற்றையும் மறந்து நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழ வழிசமைக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படுமிடத்து எல்லா மதத் தலைவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து அதற்கான தீர்வு குறித்துப் பேசவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
(முஹம்மட் பிறவ்ஸ்)
 
நன்றி: துருவம் 

'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சியை ஏன் தென்கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள்..?



 அம்பாறையில்  'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி கடந்த சனிக்கிழமை மாலை ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு  இன்று வியாழக்கிழமையுடன் 6 தினங்கள் கடந்த நிலையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்  இந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம் கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்பாறையில் பாடசாலைகளை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள் (படங்கள்)


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை வற்புறுத்தி, அடாத்தாக 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இன்று வியாழக்கிழமை காலை ராணுவத்தினர் ஈடுபட்டதையடுத்து பாடசாலைகளில் இன்று 28-03-2013 குழப்பமானதொரு சூழ்நிலை காணப்பட்டது. 
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முக்கிய சில பாடசாலைகளுக்கு இன்று காலை சென்ற ராணுவத்தினர் - அப்பாடசாலை மாணவர்களை அம்பாறையில் இடம்பெறும் 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லப் போவதாக அதிபர்களிடம் கூறியுள்ளனர். 
ஆனாலும், பெற்றோர்களின் அனுமதியின்றி மாணவர்களை அவ்வாறு அனுப்பி வைக்க முடியாது என்று குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் கூறியதாகத் தெரியவருகிறது.

கண்காட்சியை பார்வையிட வருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு!


sri-lankan-north-east-muslims
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட அச்சமின்றி வருமாறு முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
கண்காட்சிக்கு வரும் சகல மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்..

அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட தினமும் பெருமளவு மக்கள் வருகை தருகின்றனர்.இங்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட செல்லும் முஸ்லிம்களை சிலர் அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமின்றி கண்காட்சியை பார்வையிட வருமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார்.

பயமுறுத்தல்களுக்கும் பொய் பிரசாரங்களுக்கும் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, March 26

ஹர்த்தாலின்போது ரயர் எரித்த இருவருக்கு விளக்கமறியல்: பஸ் மீது கல்லெறிந்த ஆசிரியர் கைது

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஹர்த்தாலின் போது வீதியில் ரயர் வைத்து எரித்து அமைதிக்கு பங்கம் விளைவித்த இருவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.

நேற்று மாலை குறித்த நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தேசத்துக்கு மகுடம்: முஸ்லிம்கள் புறக்கணிப்பு குறித்து அதிகாரிகள் ஆராய்வு


தேசத்தற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு முஸ்லிம்கள் செல்லாதது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

அம்பாறையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

இக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் மூன்று தினங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் எவரும் இக் கண்காட்சியினை பார்க்க செல்லாததால் கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், பொலிஸ் அதிகாரிகளும் முஸ்லிம்கள் இக்கண்காட்சியினை பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

இது விடயமாக உயரதிகாரிகள் பலரிடமும் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

சாதரண பொஸன் நிகழ்ச்சியினை கூட பார்ப்பதற்கு பெருமளவில் செல்லும் முஸ்லிம்கள் ஏன் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு செல்லவில்லை என்று விணா எழுப்பப்படுகின்றது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி - காட்சிக்கூடத்தை திறந்தார் அமைச்சர் அதாஉல்லா


அம்பாரையில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தினதும் காட்சிக் கூடங்களை தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருக்கும் ஆவணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். 
இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் காட்சிக் கூடத்தில் உள்ளுராட்சி சபைகளின் நிதி, நிர்வாகம் மற்றும் சட்டப்புத்தகங்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் காட்சிக்கூடத்தில் அமைச்சினால் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திட்டங்கள் சம்பந்தமான விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு ஈரானிலிருந்து மாபிள்கள் இறக்குமதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீதியை அழகுபடுத்தும் விஸேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி குட்வின் சந்தி குர்ஆன் சதுக்கமாக மாற்றம் பெற்று வருகின்ற அதே வேளை அங்கு பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) நிறுவப்பட்டு வருகின்றது. 

தயட்டகிருலவை முன்னிட்டு கிழக்கில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.


இதனால் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை ரீதியாக நடத்தப்படும் முதலாம் தவணை பரீட்சைகளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கும்படி அறிவுறுத்தப்படுள்ளது என எம்.ரீ.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட முடியும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (2013.03.24) அம்பாறை ஆரியவன்ச ஹோட்டலில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கி வைப்பதையும், அருகில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனை சாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல்



ZCK2கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற வைத்தியர்களின் ஒன்றுகூடல் வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்றது.
கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலில் கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்று தற்போது கொழும்பில் வைத்தியர்களாக கடமையாற்றுபவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 15 வைத்தியர் கலந்துகொண்ட இந்த ஒன்றுகூடலின்போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் வைத்தியத்தர்களின் அரங்கமொன்றும் இதன்போது உருவாக்கப்பட்டது.

Monday, March 25

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால்முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு. படங்கள்

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஶ்ரீ சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலைக்கு ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரை, மேசை மற்றும் புத்தகப்பை என்பன இன்று (25.03.213) காலை வழங்கிவைக்கப்பட்டது.

சுபோத்ராராம முன்பள்ளி பாடசாலை பொறுப்பாளர்  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல்வரின் செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்



கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் மற்றும் மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்களை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட்டிற்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வும் நேற்று (24.03.2013) மாலை சீ பிறீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

முஸ்லிம் மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் இன்று கண்டனக் கூட்டம்!

bodubalasenaமுஸ்லிம்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் இனவாத செயற்பாடுகளை கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இன்று திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் இக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

கல்முனையில் ஹர்த்தாலை கைவிடும்படி பொலிசார் வேண்டுகோள்

கல்முனை பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் முழு கடை அடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு கல்முனை பொலிசார் பள்ளிவாசல்கள், வர்த்தக சங்கப் பிரதிநிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான விசேட கூட்டம் இன்று காலை கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ். ஏ. கப்பார் தலைமையில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள்
பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புகளை கல்முனை பிரதேசத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன்  நடாத்தவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால்

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து தனியார் வர்த்தக நிலையங்களும் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது. இதற்கமைவாகவே இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாது என பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு அழுத்தங்களும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவரினதும் சமயங்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களது கலாசாரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். சம்மாந்துறையில் ஜனாதிபதி.

நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமது மதம், கலாசாரம் தனித்துவத்தைப் பாதுகாப்பது போன்றே நாட்டிற்கே உரித்தான பொது கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.முன்னேறிச் செல்லும் உலகத்தோடு நாமும் இணைந்து முன்னோக்கிச் செல்வது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி; மாணவர்கள் நவீன உலகிற்குள் பிரவேசிக்கத் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல. சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப் பாளருமான ஏ. எம். எம். நெளஷாட் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
சம்மாந்துறைக்கு விஜயம் செய்து அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் கணனி மையத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
உலகம் முன்னோக்கிச் செல்லும்போது அதனோடு இணைந்து நாமும் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்பதை நான் மாணவர் சமுதாயத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

பொது பலசேனாவையும், முஸ்லிம் கட்சிகளையும் கண்டிக்க பொதுகூட்டம்



முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நாளை 25ந் திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனையில் நடைபெறவள்ளது. 

உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சாய்ந்தமருதை சேர்ந்த எம்.ஸி. ஆதம்பாவா நீதியரசர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான எம்.ஸி. ஆதம்பாவா கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் நான்கு நீதியரசர்கள் முன்னிலையில் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தனது 76 வது வயதில் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எம்.ஸி.ஆதம்பாவா கல்முனைக்குடியை பிறப்பிடமாகவும் காரைதீவு மாளிகைக்காடு பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பயிற்சிபெற்ற கணித பாட ஆசிரியரும் பேரதெனிய பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த முஹம்மது காசிம் ( கணக்கப்பிள்ளை) செமிலத்தும்மா தம்பதிகளின் தலைமகனுமாவார்.

Saturday, March 23

சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தின் சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு


சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தின் இரண்டாவது சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22.03.2013) மாலை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர பிதா கலாநிதி சிராஸ் மீராசாஹிப்,
விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனையில் பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களை கண்டிக்கும் கூட்டம்



முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் எதிர்வரும் 25 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில் இக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் நடைபெறவள்ளது.


இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியினர் கேட்டுக்கொள்கின்றனர்.

கிழக்கின் பெருமை காத்த கல்முனைக் கல்வி வலய மாணவர்களுக்குப் பாராட்டு


கல்வி அமைச்சு தேசிய ரீதியில் நடாத்திய 'ஆரோக்கியப் புதிர் போட்டியில்' முதலிடம் பெற்று, கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனைக் கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்த மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு நேற்றைய முதல் நாள் காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற,கிழக்கு மாகாண கல்முனை வலய மாணவர்கள் ஐவர்  கல்வி அதிகாரிகளால் பாராட்டி , கௌரவிக்கப்பட்டனர்.

Friday, March 22

கல்லடி புதிய பாலம் மக்கள் பாவனைக்கு : ஜனாதிபதி திறந்து வைத்தார்


மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில், நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக இன்று திறந்து வைத்து  மக்கள் பயன்பாட்டுக்கு கையளித்தார்.

1970 மில்லியன் ரூபா செலவில், 289மீற்றர் நீலமும் 14மீற்றர் அகலமும் கொண்ட, இந்தப் பாலம் ஜனாதிபதியால் இன்று மாலை 4.30 அளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், உட்பட பல பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சம்மாந்துறை பாடசாலைக்கு கல்விச் செயலாளர் திடீர் விஜயம்!

Sec VISIT (4)
(வி.ரி.சகாதேவராஜா)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கணணி நிலையத்தை திறக்கவிருக்கும் சம்மாந்துறை அல் அஸ்கர் வித்தியாலயத்திற்கு இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர்  புஸ்பகுமார  திடீர் விஜயம் செய்து வேலைகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
அங்கு இரவோடிரவாக கார்ப்பட் வீதி இடப்படுவதையும் பாடசாலை வளாகம் கல்லால் நிரப்பப்டுவதையும் திறக்கவிருக்கும் கணணிக் கூடத்தை கல்வி அதிகாரிகள் பார்வையிடுவதையும் செயலாளர் அறிவுறுத்தல் வழங்குவதையும் படங்களில் காணலாம்.

ஜும்மா பள்ளிகளை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுகிறது

இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிகளை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுகிறது. இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் "பொய் பிரசாரங்களைக் கண்டு ஏமாருவோமா? உண்மையயரிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா?" எனும் துண்டுப்பிரசுரமொன்ரையும் விநியோகித்தனர்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...


அட்டாளைச்சேனை பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)





அட்டாளைச்சேனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப்பரிவு மற்றும் மனித எழச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை  வெளியிடும் போது 'அரச அறிவித்தல்-பெண்களுக்கு எதிரான வன்முறை தண்டனைக்குரிய குற்றம்' என காட்சிப்படுத்தல் வேண்டும் எனக் கோரி அமைதி ஊர்வலமும், மகஜர் கையளிப்பும் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது. இதன் போது பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பதாதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கக் கோரும் சுலூக அட்டைகளுடன் ஊர்வலாமாகச் செல்வதையும், உதவி பிரதேச செயலாளர் எஸ். ஜெயரூபனிடம் மகஜர் கையளிப்பதையும், மகளிர் அபிவிரத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.சுஹிறா மற்றும் மனித எழுச்சி நிறுவனத்தின் உத்தியொகத்தர் எம்.பவானி, மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ஜனுசா உள்ளிட்டோர் முறையிடுவதையும் காணலாம்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களை பயிற்சிக்காக அனுப்புவதில் பாரபட்சம்?

questian19_CI(கல்முனை செய்தியாளர்)
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும் தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும் திணைக்களங்களிதும் நேர்முகப் பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக் கூறி வருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் காட்டப்படும் பாரபட்சமானது மன வேதனையளிப்பதாகவும் சுட்டிக்காட்டுவதுடன், இந்நிலை தொடருமாக இருந்தால் பாதிக்கப்படும் பட்டதாரி பயிலுனர்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Thursday, March 21

கிழக்கில் ஆசிரிய ஆலோசகர்களது கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை துரித நடவடிக்கை!


cm3
-காரைதீவு நிருபர்-
வடக்கு மாகாணத்தைப் போல் கிழக்கு மாகாணத்திலும் ஆசிரிய ஆலோசகர் மற்றும் ஆசிரிய உதவியாளர்களது மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை வாரியத்தின் மூலம் துரித நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் எ மஜீத் தன்னைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திய இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கத்திடம் உறுதியளித்தார்.
முதலமைச்சருடனான இக்கன்னிச் சந்திப்பு திருகோணமலையிலுள்ள முலமைச்சர் காரியாலயத்தில் நேற்று (20.03.2013) புதன்கிழமை மாலை ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. கிழக்கில் நிலவும் கல்வி தொடர்பான நீண்டகால பிரச்சினைகள் பல கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் சமுகமளித்திருந்தார்.
இலங்கைத் தமிழர்ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா நிருவாகச்செயலாளர் கே.நல்லதம்பி துணைப் பொதுச் செயலாளர் எஸ்..சசிதரன் பட்டிருப்புவலயச் செயலாளர் எஸ்.கமலேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எஸ்.அருணாசலம்  மட்டு.மேற்கு கோட்டச் செயலாளர் எஸ். தியாகரெட்ணம் போரதீவுக் கோட்டச் செயலாளர் கே.தனுராஜ் பட்டிருப்புவலயப் பொருளாளர் எஸ்.வரதராஜன் திருமலைப் பிரதிநிதி கே.யோகநாதன் மற்றும் யோ.கோபிகாந் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் சம்மாந்துறை விஜயம்!


02
-முஹம்மட்-
நீதிமன்றங்களில் நீதிபதிகள் தமது பணிகளை சிறப்பாக செய்வதனாலும் சட்டத்தரணிகள் தமது சட்டத்திறமைகளால் மக்களுக்கு பணியாற்றுவதனாலும் மாத்திரம் நீதிமன்றங்களின் பணிகள் முழுமை பெற்றுவிட முடியாது அங்கு பணியாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களினதும் சிறந்த அற்பணிப்புக்களும் சேவைகளும் உள்வாங்கப் படுகின்ற போதே நீதித்துறையின் பணிகள் முழுமை பெறுகின்றது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் அழைப்பை ஏற்று அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று (20) மாலை விஜயம் செய்த போதே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்த கருத்த தெரிவிக்கையில்;

பொத்துவில் ஹர்த்தால் கைவிடப்பட்டது


 Harththaal-கல்முனை நிருபர்-
பொத்துவில் பிரதேசத்தில் தூபி அமைக்கும் இடம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்களால் இன்று  (2013.03.21) முதல் நான்கு நாட்களுக்கு தொடராக அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் சுமுகமான தீர்வு பெறப்பட்டதையடுத்து கைவிடப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அம்பாரை அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், உலமா சபையினர், புத்திஜீவிகள் ஆகியோர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஹர்த்தாலை கைவிடுவதென இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Wednesday, March 20

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் தமிழ், முஸ்லீம் மக்கள்!


alt
இம்முறை அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒதுக்கீடானது, தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குறைவாகவும் சிங்கள மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கூடுதலாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தில்லை அரசன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் 20பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் 13பிரதேச செயலாளர் பிரிவுகள் தமிழ் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களாகும்.
இப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக சுமார் 572மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் 7பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 791.85மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே நிதி ஒதுக்கீடு பாரபட்சமான முறையில் நடைபெற்றுள்ளது என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இம்முறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மார்ச் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அம்பாறையில் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் காணிகளிலிருந்து கடற் படையினரை விரைவில் வெளியேற்றுவேன் – நஜீப் ஏ மஜீத்


Land-Issue0(முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)
புல்மோட்டை கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிக்கச்சேரி மூலம்
தெரிவிசெய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ள சகல மக்களுக்கும்
அவர்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு கிழக்குமாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெளத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் தொடர் ஹர்தால்



அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரப்புச்செய்து கொண்டுவரும் பௌத்த ஆதிக்கத்திற்க்கு எதிராகவும், மண்மலையில் நிறுவப்பட இருக்கும் சுமார் 350 அடி உயரமான சிலை நிர்ணயிப்பிற்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழைமைகளில் பொத்துவில் பிரதேசத்தில் பூரண ஹர்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த நான்கு நாட்களிலும் தங்களின் வியாபார தளங்கள், அரச காரியாலயங்கள், பாடசாலைகளை மூடிவிட்டு   பொத்துவில் மண்னை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சாத்வீக எதிர்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த பெளத்த ஆதிக்கத்தையும், சிலை நிர்ணயிப்பையும் நிறுத்துவதற்கு வெளிநாட்டு வாழ் பொத்துவில் மக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பினை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.