Wednesday, March 20

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் புறக்கணிக்கப்படும் தமிழ், முஸ்லீம் மக்கள்!


alt
இம்முறை அம்பாறையில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஒதுக்கீடானது, தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குறைவாகவும் சிங்கள மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கூடுதலாகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தில்லை அரசன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் 20பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் 13பிரதேச செயலாளர் பிரிவுகள் தமிழ் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களாகும்.
இப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக சுமார் 572மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் 7பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 791.85மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே நிதி ஒதுக்கீடு பாரபட்சமான முறையில் நடைபெற்றுள்ளது என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இம்முறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மார்ச் 23 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அம்பாறையில் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment