Monday, April 29

நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தின் ஆக்கபூர்வமான பேச்சு; ஊரின் நலன் கருதி வீதி அபீவிருதி வழக்கு வாபஸ்!


SAM_6778நிந்தவூர் மத்திய வீதியின் புணர் அமைப்பு தடைகள் பைசால் காசிம் அவர்களின் முயற்சியினால் நீக்கம்!
வீதி விரிவாக்கத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்கு வாபாஸ் பெறப்பட்டது!
வீதியோர மதில் அமைப்பு பணிகளில் நிந்தவூர் ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகம் களத்தில்!
நிந்தவூர் மத்திய வீதி அபிவிருத்தி திட்டமானது சென்ற வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூரின் பிரதான வீதியில் இருந்து கடற்கரை வரையிலான சுமார் 1.5 கி .மீ .தூரமுள்ள இவ் வீதியின் புனர் அமைப்புக்கு உலக வங்கி நிதியளிப்பு செய்திரிந்தது.

அக்கரைப்பற்று வலயத்தில் ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம்!

Ampara MPC (1)அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட்டதாவது,
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பொத்துவில் பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 97 ஆசிரிய வெற்றிடங்களும் அட்டாளைச்சேனை பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 31 ஆசிரிய வெற்றிடங்களும் அக்கரைப்பற்று பிரதேச கல்விக் காரியாலய பாடசாலைகளில் 5 ஆசிரிய வெற்றிடங்களும் மொத்தமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 133 ஆசிரிய வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் நிலவி வருகிறது.

கல்முனை மாநகர சபை அமர்வை ஆளும் மு.கா. உறுப்பினர்கள் அறுவர் பகிஷ்கரிப்பு

 
கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வை பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உட்பட ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆறு பேர் பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
 
முதல்வர் சிராஸ் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகின்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வை பிரதி முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், ஏ.எம்.றகீப், ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஏ.பஷீர் ஆகியோரே பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
 
நேற்று இரவு இடம்பெற்ற ஆளும் தரப்பு குழுக் கூட்டத்தின் போது  உறுப்பினர் உமர் அலியை முதல்வர் சிராஸ் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தியதைக் கண்டித்தே தாம் இப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.
 
கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முதல்வரிடம் விளக்கம் கேட்டபோதே என் மீது சீறிப் பாய்ந்து தகாத வார்த்தைகளால் முதல்வர் தன்னை அச்சுறுத்தினார் என்று ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உமர் அலி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றையும்  வெளியிட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை முதல்வர் பதவி பகிரப்படுமா ?

கல்முனை மாநகர சபை முதல்வர் பதவி பகிரப்படுமா ? 

கல்முனை  மாநகர சபையின் முதல்வர் பதவி -  நீண்ட இழுபறிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் - தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவியினை சிராஸ் மீராசாஹிப் மற்றும் தற்போதைய பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோரிடையே பகிர்ந்தளிப்பது எனும் உடன்பாடொன்று மு.காங்கிரசினால் எட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில், கல்முனை மாநகர சபையின் முதல்வருக்கான பதவிக் காலத்தின் முதல் அரைவாசிப் பகுதியில் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியினை வகிப்பார் எனவும், அடுத்த அரைவாசிப் பகுதியில் நிஸாம் காரியப்பர் முதல்வராக பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டது.

இதனடிப்படையில், சிராஸ் மீராசாஹிப் - கல்முனை மாநகர சபையின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய முதல்வர் சிராஸ் - தனது பதவியினை ராஜிநாமா செய்தால் மட்டுமே - அந்த வெற்றிடத்துக்கு நிஸாம் காரியப்பரை முதல்வராக நியமிக்க முடியும்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை முதல்வர் பதவிக்கான முதல் அரைவாசிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக, தற்போதைய முதல்வர் தனது பதவியினை ராஜிநாமா செய்வாரா என்பது, உள்ளுர் அரசியல் வட்டாரத்தில் சூடான கேள்வியாக உள்ளது.


கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவி - நீண்ட இழுபறிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் - தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவியினை சிராஸ் மீராசாஹிப் மற்றும் தற்போதைய பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோரிடையே பகிர்ந்தளிப்பது எனும் உடன்பாடொன்று மு.காங்கிரசினால் எட்டப்பட்டிருந்தது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முதலாவது சேர்விலக்கத்திற்குரியவர்...... Index Number 01

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முதலாவது சேர்விலக்கத்திற்குரியவர்...... Index Number 01
கல்முனைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் , உதவி அதிபர் மர்ஹும் எம்.எல்.எம்.முகைதீன்
(07.03.2012 இல் வபாத்தாகி விட்டார். அன்னார் ஜன்னதுல் பிர்தௌஸ் அடைய அனைவரும் பிராத்திப்போமாக...)
Thanx to Azhar sir(media)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முதலாவது சேர்விலக்கத்திற்குரியவர்...... Index Number 01
கல்முனைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் , உதவி அதிபர் மர்ஹும் எம்.எல்.எம்.முகைதீன்
(07.03.2012 இல் வபாத்தாகி விட்டார். அன்னார் ஜன்னதுல் பிர்தௌஸ் அடைய அனைவரும் பிராத்திப்போமாக...)
Thanx to Azhar sir(media)

அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் உற்சாக மாத்திரை - சமூக ஆர்வலர்கள் கவலை


அம்பாரை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களில் இளைஞர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தும் ஒரு வகை மாத்திரை ஒரு குழுவினரால் இரகசியமாக முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த மாத்திரையை பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மாத்திரை நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள சில கழகங்களின் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கபடுகின்றன. ஆதலால், பெற்றோர்கள் தங்களின் ஆண், பெண் பிள்ளைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். 
பாடசாலைகளின் அதிபர்கள் தமது மாணவர்களின் ஒழுக்க விசயங்களில் கவனம் செலுத்துவதில்லை என பெற்றோர்கள் கூறுகின்றார்கள். 

Sunday, April 28

பொதுபல சேனாவிற்கு ஆதரவாக அம்பாறையில் துண்டுப்பிரசுரம்



 


பொது பல சேனாவை ஆதரிப்பதன் மூலமே அம்பாறை மாவட்ட தமிழர்கள் தங்களின் இருப்பை தக்கவைக்க முடியும் எனக் குறிப்பிடும் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 'அம்பாறை மாவட்ட நமக்காக நாம்' எனும் அமைப்பின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்முனையில் தமிழர்களுக்காக இருக்கின்ற ஆதார வைத்தியசாலை, கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம் போன்றவற்றை திட்டமிட்டு சதி செய்து அஷ்ரப் வைத்தியசாலையுடனும் முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகத்துடனும் இணைப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய கல்விமான்கள் எடுத்துவரும் நடவடிக்கையானது உண்மையிலேயே எமக்கு வேதனையைத் தருகிறது.

சாய்ந்தமருதில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட நான்கு வீதிகள் திறக்கும் நிகழ்வு.

சாய்ந்தமருதில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட நான்கு வீதிகள் திறக்கும் நிகழ்வு.

கல்முனை மாநகர முதல்வர்  சிராஸ் மீராசாஹிப் வீதிக்கான
நாடாவினை வெட்டி வீதியினை திறந்து வைப்பதனையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட உயரதிகாரிகளையும்  காணலாம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் வீதிக்கான
நாடாவினை வெட்டி வீதியினை திறந்து வைப்பதனையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட உயரதிகாரிகளையும் காணலாம்.

Sunday, April 14

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



ஜனாதிபதி செயலகமும் சிறுவர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கததையும் ஏற்படுத்தும் அமைப்பும் கல்முனை கிறிஸ்தவ இல்லமும் இணைந்து கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்த ” நம்ம ஊரில் நத்தார் ” நிகழ்வில் கலந்து கொண்டு இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை சித்திரம் வரைதல் மற்றும் ஆக்கத் தொழிற்பாடு மூலம் வெளிப்படுத்திய கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் யு.எல்.எம்.அமீன் , உதவி அதிபர்  எம்.எச்.அன்சார் , சித்திர பாட ஆசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை செஸ்டோ அமைப்பின் ஒன்றுகூடல்



கல்முனை ஸஹிரியன் கல்வி, சமூக அபிவிருத்தி அமைப்பின் (செஸ்டோ) ஆலோசகர்களுடனான ஒன்றுகூடல் நேற்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்ட்டோரன்டில் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செஸ்டோ அமைப்பின் ஆலோசகர்களான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், டாக்டர் யூ.எல்.சராப்டீன், கல்முனை நகர வர்த்தக சங்க தலைவர் கே.எம்.ஹாதிம், கல்முனை ஸாஹிறாக் கல்லூயின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Sunday, April 7

நிந்தவூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

4

நிந்தவூர்ப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேற்று (04.04.2013) நடைபெற்றது.
அபிவிருத்திக் குழுக் கூட்ட இணைத்தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான எம்.ரி.ஹஸன் அலி, எம்.சீ. பைசால் காசீம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பீ.தாவூத், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.தாஹீர், எதிர்க் கட்சித் தலைவர் வை.எல்.சுலைலெவ்வை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க, நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. டாக்டர்.தஸ்லிமா மஜீட், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம்  உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Saturday, April 6

சம்மாந்துறைப் பிரதேசத்தின் வரலாறு


அரசியல் வரலாற்றுப்பின்னணி :

அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தினை ஆட்சி செய்வது என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும். சம்மாந்துறையின் அரசியல் வரலாற்று, பின்புலம் மிகவும் முக்கியமானதாகும். சம்மந்துறை என்பது கிழக்கின் கடல் வாணிபத்தின் மிக முக்கிய துறைமுகமாக மிக நீண்ட காலமாக விளங்கி வந்தமைக்குப் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு வாவிய+டாக உள்நுழையும் வர்த்தகக்கப்பல்கள் தென்புறமாக ஏறத்தாழ 40 கிலோமீற்றர் தூரம் வாவியில் சென்று சம்மாற்துறையை அடைந்தார்கள். இங்கு தரை தட்டிய கப்பல்கள் பொருட்களை இறக்கி இங்கிருந்து கண்டி இராதானிக்கும் உள்நாட்டுக்கும் கொண்டு சென்றார்கள். இங்கிருந்துதான் கண்டிக்கான தரை வழி பாதையும் ஆரம்பமாகின்றது. மட்டுமன்றி இலங்கையின் பெரிய நதிகளில் ஒன்றான கல் ஓயா ஆற்றின் இடப்பக்கமாக அமைந்த (இது பட்டிப்பளையாறு என அக்காலத்தில் அழைக்கப்பட்டது).பரந்து விரிந்த வளமான நிலப்படுக்கையின் நடுவே காணப்பட்டமையால் இப்பிரதேசம் மக்கள் வாழ்க்கைக்கு வசதியாயமைந்தது.
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். வுpவசாயத்துக்கான அனைத்து வளங்களும் இப்பிரதேத்தில் அமைந்து காணப்பட்டன. பண்டைய மக்கள் தங்களுக்கிடையே ஒரு தலைவரைத் தெரிந்து கொண்டு அவரின் கட்டுப்பாட்டிலேயே ஊர் முழுவதும் ஒர் அரசியல் ஒழுக்க விழுமியங்கள் மிக்கதாக கட்டிவளர்க்கப்பட்டது. அந்தத் தலைவரே அவர்களின் முழு ஆட்சியாளராகத் திகழ்ந்தார். அவர் மரைக்காயர் என்று அழைக்கப்பட்டார். அந்த மரைக்காயர் தமக்குச் சிலரை உதவியாளர்களாக வைத்துக்கொள்வது வழக்கம். இந்த அடிப்படையில் அரசியல் ஆட்சியில் நிர்வாக முறை அமைந்தது. அவரின் தலைமையிலேயே ஊரின் பாதுகாப்பு, நிர்வாகம், நீதி, திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிராமத்தின் வசதிபடைத்தவரும் கல்வி அறிவு, புத்திசாதூரியம் போன்றவற்றில் திறமையானவரையும் மரைக்காராக நியமித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு பரம்பரை ரீதியான வாரிசுரிமையாக வந்தமையும் நாம் அவதானிக்கலாம். இப்படியே சம்மாந்துறையிலும் அரசியல் பின்னணி அமைந்து காணப்பட்டது. காலத்துக்குக்காலம் மாறிமாறிப்பலர் ஆட்சி செய்தமை வரலாற்றில் காணப்படுகிறது. இவர்கள் கண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அவர்களுக்குச் சேவகம் செய்துள்ளனர். மன்னனின் பிரதிநிதியாக இவர்கள் இருந்தமையால் மக்களும் மதித்தனர். இது பிற்காலத்தில் போர்த்துக்கேயரை எதிர்க்கவும் ஒல்லாந்தரை ஆதரிக்கவும் இப்பதவிகளே பெரிதும் உதவின. இவர்கள்தான் கிராம ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில் உள்ளுராட்சி சபைகளாகவும், பாராளுமன்ற சட்டசபை-உறுப்பினர்களாகவும் வளர்ச்சி பெற்று காணப்பட்டது என்பதை அறியமுடிகின்றது. இன்று இலங்கையிலேயே அதிக சனத்தொகையையும் அதிக நிலப்பரப்பையும் கொண்ட ஊராக சம்மாந்துறை திகழ்ந்தாலும் அவ்வளவுக்கும் ஒரு நம்பிக்கையாளர் சபையைக்கொண்டே இயங்கி வருகின்றமை இவ்வூரின் ஆட்சியியல் வரலாற்றின் வளர்ச்சியின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். காரணம், இப்பிரதேசத்தின் நிலத்தோற்றமும் நீர்ப்பாசன வடிகால் அமைப்பு முறையுமேயாகும். இப்பிரதேசத்தின் அரசியல் வளர்ச்சி என்பது ஒரு விவசாய சமூகத்தின் பரிணாம வளர்சியை அடிப்டையாகக் கொண்டது என்பதைக் கருத்திற்கொண்டே நோக்கவேண்டியுள்ளது.
நிர்வாக முறைமை
பொதுவாக - தென்கிழக்குப்பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இப்பிராந்தியத்தில் 12ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. என்றாலும் கண்டி மன்னன் செனரத் காலத்திலேயே (1604 – 1635) அதிகமான முஸ்லிம்கள் இப்பிரதேத்துக்குக் குடியேற்றப்பட்டனர். இதன் பின் இப்பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகக் காணப்பட்டு வந்துள்ளது. இம் மக்களின் அரசியல் நிர்வாக முறைமைகள், விவசாயம், வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தன. இங்கு மிக நீண்ட வரலாற்றையும் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட சமூக அமைப்பு முறை காணப்பட்டுள்ளது. நிர்வாகஸ்தர்களாக வன்னியனார், போடிகள், காரியப்பர்கள், மரைக்காயர்கள், உடையார்கள் என்பவர்கள் அல்லது பதவிகள் அக்காலத்து உயர் நிர்வாகப்பதவிகளக காணப்பட்டன. இவர்களின் நீதி முறைமை, சட்டங்கள் என்பனவும் தனித்துவமனதகக் காணப்பட்டமை வரலாற்றின் மூலம் அறியக்கிடக்கிறது. இவர்கள் அனைவரும் கண்டி அரசனின் ஆளுகைக்குக்கீழேயே தமது அதிகாரங்களைப் பெற்று, செலுத்தி வந்துள்ளனர். தென்கிழக்குப் பிராந்தியம் மிக நீண்ட காலமாக கண்டிய இராசதனியின் ஒரு பிரிவாக இருந்து வந்தது.

சமாதானத்திற்கான சமயங்களின் அம்பாறை மாவட்ட பேரவையின் மாநாடு!


convention1
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட பேரவையின் மாநாடு இன்று சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் முதற் பிரதியை தலைவர் ஜெமீல், மட்டு- அம்பாறை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு.ஜோசப் பொன்னையாவிற்கு வழங்கி வைத்தார்.

நிந்தவூரில் நெனசல அறிவகம் திறப்பு (படங்கள் இணைப்பு)




ஜனாதிபதி செயலக  அனுசரணையுடனும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக இன்று (06.04.2013) நிந்தவூரில் நெனசல அறிவகம் திறந்து வைக்கப்பட்டது.  ஐ எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ்  எம்.ரீ. ஹஸன் அலி, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி றிபா உம்மா அப்துல் ஜலில், நிந்தவூர்  கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.எம். சலீம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப்பிராந்திய  நிருவாக உத்தியோகத்தர் எ எல் சித்தீக் மற்றும் நிந்தவூர் அல் மதீனா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எஸ் அகமது மற்றும் அமைப்பின் தவிசாளர் ஊடகவியலாளர் புஹாது  மற்றும் பயனாளிகளின் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர். 

மஹிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் தலை கீழான பல மாற்றங்கள்- பஷீர் சேகுதாவூத்


???????????????????????????????
மஹிந்த ராஜபக்ஷ அரசு பவிக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தலை கீழான பல பாரிய மாற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
இன்று 05.04.2013 முற்பகல் ஏறாவூர் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
பாடசாலை அதிபர் எஸ். அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,
தூர இடத்திற்கு தொழிலுக்காகச் சென்ற கணவர் உயிருடன் திரும்பி வருவாரா வரமாட்டாரா என்று இப்பொழுது மனைவிமார் ஏங்கிக் கொண்டு இருப்பதில்லை.
வீதியில் குண்டுகள் வெடிப்பதில்லை. யாரும் தரையிலிருந்து விமானத்திற்கு சுடுவதுமில்லை விமானத்திலிருந்து தரையை நோக்கி குண்டுகள் போடப்படுவதுமில்லை.

Friday, April 5

மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு திறந்து வைப்பு


கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டிடத் தொகுதி இன்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அகில இலங்கை உதைப்பபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஹெர்லி சில்வீர, அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி



அரச காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமர் 0.4805 ஹெக்டெயர் காணியை அமன்தா பீச் ரிசோட் எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் குச்சவெளி பிரதேசத்திலுள்ள அரச காணியொன்றே அமன்தா பீச் ரிசோட் தனியார் நிறுவனத்திற்கு வழப்படவுள்ளது. இந்த காணி 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் கடந்த புதன்கிழமை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த காணி வழங்கல் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர  திஸாநாயக்கவினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் காணியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பினை கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா


பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது    அல் - ஹாபிழ் கௌரவிப்பு விழா எதிர்வரும் 2013.04.06 ஆம் திகதி சனிக்கிழமை;தொடர்ந்து மாலை 04.00 மணிக்கு  கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் ஏ.எல்.மௌஜூத் (பாகவி) தலைமையில் இடம் பெறவுள்ளது. 

Thursday, April 4

கிழக்கு மாகாண கலாசார விளையாட்டு நிகழ்வு ஆரம்பம்!

7
-KRM.றிஸ்கான்-  2013 ம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட் கிழக்கு மாகாணத்திற்கான பிரதான கலாசார விளையாட்டு நிகழ்வு இன்று காலை திருகோணமலை கடற்கரையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் சமயத் தலைவர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி கொடியோற்றி ஆரம்பித்து வைத்தனர்.
திருகோணமலை கோணலிங்க வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வு நாளையும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இதில் சைக்கிலுலோட்டப் போட்டிகள், பானை உடைத்தல், ஊசி கோர்த்தல் போன்ற கலாச்சார நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9

கல்முனை பஸ் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்


கல்முனை மாநகரத்தில் காணப்படுகின்ற தனியார் பஸ் உரிமையாளர்களே தங்களது பஸ் வண்டிகளுக்கான ஆசனப்பதிவினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பு உறுப்பினர்கள், கல்முனை தனியார் வஸ் நிலைய நேரக் காப்பாளர் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை டிப்போ அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (03.04.2013)  இடம்பெற்ற முதல்வருடனான கலந்துரையாடலின்போதே மேற் குறித்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.     

கல்முனை மேயரால் சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை அன்பளிப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை மற்றும் கை உறை என்பன இன்று(03) முதல்வர் செயலகத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு டெக் லேங் ஆங்கில பாலர் பாடசாலையின் பாவனைக்காக ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளும் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின்போது மாநகர ஆணையாளர்  ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன், கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யப்பானிய பிரதித்தூதுவர் – கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு


??????????????????????????????? யப்பானிய பிரதித்தூதுவர்  - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு:கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்கள் நிதியம் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த யப்பான் உதவவுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் அவரின்  முதலமைச்சர் காரியாலயத்தில் 01.04.2013ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக சந்தித்து கலந்துரையாடிய யப்பானிய பிரதித்தூதுவர் கிரோகி இஸுகா மற்றும் அதிகாரிகளும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தின் போது கிழக்குமாகாணத்தில் 1983ஆம் ஆண்டிற்கு பின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மறுவாழ்வு அளிக்கும் முகமாக பெண்கள் நிதியம் ஒன்றை நிறுவி  உதவி புரிவதற்கு  யப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் பிரதித்தூதுவர் தெரிவித்தார்.

பொதுபல சேனா தடை செய்யப்பட வேண்டும் - கல்முனை மாநகர சபை தீர்மானம்



நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என அரசைக் கோரும் மனுவை கல்முனை மாநகர சபையில் சமர்ப்பித்து எம்.ஐ.பிர்தௌஸ் ஆற்றிய உரை.
மேற்படி பொது பல சேனா என்ற இயக்கம் கடந்த 2012ம் ஆண்டு; மே மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த நாட்டிலுள்ள பௌத்தர்கள் அல்லாத சிறுபான்மை மதங்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலபொல அத்தோஞான சார தேரர் பெருமையாகக் கூறுகின்றார்.
இலங்கை பல் இன மக்கள் வாழ்கின்ற பல இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை இலங்கைப் பிரஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்கின்றோம். 

கிழக்கில் ஆட்சியை மாற்ற 22 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றோம்.சுபைர்


முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவினை மிக விரைவில் எடுக்காவிட்டால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியநிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும்’ என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.

ஏறாவூர் அல் முனீரா பாலிகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியானதும் நன்கு திட்டமிட்டதுமான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

‘இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாகிய எம்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளது. நாம் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது. மக்கள் எங்களை நோக்கி கைகளை நீட்டக்கூடிய நிலை ஏற்படப்போகின்றது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கிழக்கு மாகாண சபையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 22 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றோம். கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் ஒரே நோக்கில் சிந்தித்தால் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும்’ என்றார்.

‘இதேவேளை கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு நல்ல தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, April 3

மட்டு கல்லடி பழைய பாலத்திற்கு தற்காலிக பூட்டு




கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி பழைய பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மட்டு கல்லடி பழைய பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதாலும் அதன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுவதாலுமே இப்பழைய பாலம் மூடப்பட்டுள்ளது.

கிழக்கில் பொதுபல சேனாவின் சூழ்ச்சிகளை பலிக்க விடமாட்டோம் ; நஸீர்


கிழக்கு மாகாணத்தில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு செயற்பட விட மாட்டோம். முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய இனங்களுக்குமிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அவர்களின் சூழ்ச்சிகள் பலிக்க விடமாட்டோம்.
இவ்வாறு கூறினார் விவசாய கால்நடை, உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்.

தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்க்கவே ஹர்தால் அழைப்பு – TNA கூட்டாக அறிக்கை


tna new-
நாளை (4.4.2013) மட்டக்களப்பில் ஹர்தால் செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் வெளியிட்ட பிரசுரமானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்த்து அதில் குளிர்காய நினைப்போரின் சதி நடவடிக்கையாக இருக்குமென சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்ததை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இன்று(3.4.2013) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஹலாலுக்கு ஆதரவாகவும் பொதுபல சேனாவுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் செய்த கடையடைப்புக்கு எதிராக எதிர் வரும் 4ம் திகதி நாளை கடையடைப்பு செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை மீனவர்களுக்கு அச்சுறுத்தல்


ஆழ்கடல் கொள்ளையர்களினால் கல்முனை இயந்திரப்படகு மீனவர்களின்  மீன்கள் வலையுடன் வெட்டப்பட்டு திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்படுவதோடு அச்சுறுத்தல்கள் மற்றும் உயிராபத்துக்களுக்கும் ஆளாகிவருவதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு கூட்டுறவு மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு


2 கிழக்கு மாகாண ஆளுநர்  அலுவலகத்தில் மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு 02.04.2013ஆம் திகதி செவ்வாய்கிழமை (கிழக்கு )ஆளுநர் ரியல் அட்மிரால் மொஹான் விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.
இக்கையேடானது கிழக்கு மாகாணசபையின் வரலாற்றில் முதல் முதல் நிர்வாக நடைமுறைகள் நீதி நடைமுறைகள் சம்மந்தமாக விசேட அறிவித்தல் நூலொன்றை வெளியிட்டிருக்கின்றோம் இது பாராட்டப்படக் கூடிய விடயம் எனவும்  “ கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிர்வாகத்தை செம்மையாக நடைமுறைப்படுத்த செயல்படுத்த உதவும் எனவும் நம்புகிறேன் ” என ஆளுநர் கூறினார்.
மேலும் இலங்கையில் இது மூன்றாவது வெளியீடு எனக் குறிப்பிட்டவர் ஏற்கனவே சப்பிரகமுவ, மேல்மாகாணங்களில் இவ்வகையான கையேடு வெளியிடிட்ருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
“ இதற்கு முன் இந்த நீதி நிர்வாக நடைமுறைகள் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தெரியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை மாகாணத்தில் அனுபவித்து இருக்கிறோம் ஆசிரிய நியமனம் ஏனைய நியமனங்கள், பதவியுயர்வுகள், விசாரனைகள் சம்மந்தமாக பல்வேறு பிரச்சினைகள் அனுபவிக்கவேண்டியிருந்தது ”

Tuesday, April 2

சாய்ந்தமருது வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு


தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடமாடும் வைத்திய சேவை ஆரம்பம்


தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கப்பட்டன. 
இவ்அம்புலன்ஸ் வாகனங்களை வைத்தியசாலையின் பாவணைக்கு விடுமுகமாக அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பயாஸின் ரோபோ தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில்



கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் பேனை மூடிகளினால் தயாரித்துள்ள  மின்கலத்தில் இயங்கும் ரோபோ மற்றும் தன்னியக்க கார் என்பன ”தேசத்திற்கு மகுடம்” கண்கட்சியின் போது முக்கிய இடம்பெற இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களினால் புத்தாக்கமாக தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் கல்வி திணைக்களத்தினூடாக சேகரிக்கப்பட்டு அம்பாறை ஹாடி சிரேஸ்ட தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் இம்மாதம் 23 முதல் 29 வரை இடம்பெறவுள்ள
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எப்.எம்.பயாஸ் என்ற மாணவனின் ஆக்கம் காடசிக்கு வைக்கப்படவுள்ளது.

பொத்துவில் முகுந்து மகா விகாரையில் தீ விபத்து




பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தீவிபத்தினால் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியுள்ள பொருட்களும் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடாபாக பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக ஹர்தால் அனுஸ்டிக்குமாறு தமிழர்களுக்கு அழைப்பு.

மட்டக்களப்பு, தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விழித்தெழுவீர், தமிழ் சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம் எனும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
(விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.)