Tuesday, April 2

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடமாடும் வைத்திய சேவை ஆரம்பம்


தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கப்பட்டன. 
இவ்அம்புலன்ஸ் வாகனங்களை வைத்தியசாலையின் பாவணைக்கு விடுமுகமாக அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், டாக்டர் வை.எல்.எம்.யூசுப் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
திடீரென வீடுகளில் ஏற்படும் சுகயீனங்களுக்கு வைத்தியசாலைக்கு அறிவிக்கப்படின் நடமாடும் மருத்துவ சேவை மூலம் வீட்டிலிருந்தவாறே அம்புலன்ஸ் வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் தூர இடங்களிலுள்ள அரச, தனியார் வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் சுகாதார அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். 
இதன்போது வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் வைத்தியசாலையில் பாவணைக்கு உதவாத தளபாட பொருட்களை திருத்தம் செய்து அவ் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.



No comments:

Post a Comment