Showing posts with label பிராந்திய செய்திகள். Show all posts
Showing posts with label பிராந்திய செய்திகள். Show all posts
Friday, February 16
இன்றைய பேசுபொருளாகியுள ்ள விடையம்: பிரதமர் ரணிலை ஜனாதிபதி மைத்ரீ பதவி நீக்கலாமா?
19ம் திருத்தம் கொண்டுவரமுன் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 19 இன் பின் இல்லாமல் செய்யப்பட்டது. 19ம் திருத்தத்துக்கு முன் சரத்து 47 இல் குறிப்பிடப்பட்ட ுள்ள மூன்று நிபத்தனைகளில், 1ஆவது நிபந்தனையான, ஜனாதிபதியால் பிரதமர் நீக்கப்படலாம் என்ற நிபத்தனை நீக்கப்பட்டு, 19ம் திருத்தத்தின் பின் சரத்து 46(2) இல் இரண்டு நிபத்தனைகள் மட்டுமே காணப்படுகிறது. Snapshots of both articles are attached.
Saturday, July 20
கிழக்கில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள்; ஆளுநருக்கு தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை!
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் தீர்மானத்திற்கிணங்க கடந்த 01.07.2013
ஆம் திகதி முதல் 2013 டிசம்பர் வரை சகல ஆசிரியர்களது இடமாற்றங்களும்
இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிலசில வலயங்களில்
ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெற்று வருவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை அனுப்பவுள்ளது.
உடனடியாக இப்பழிவாங்கல் இடமாற்றங்கள் நிறுத்தப்படுவதுடன் குறிப்பிட்ட
காலப்பகுதியினுள் செய்யப்பட்ட இடமாற்றங்களை ரத்துச் செய்ய வேண்டும் எனவும்
கேட்டுள்ளது.
Friday, July 19
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார்
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
ஏற்பாட்டில் இன்று (19) ஐக்கிய சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார்
நிகழ்வு சற்று முன்னர் வைத்தியசாலையில் வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எம்.
நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் மூவின
மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சர்வமத தலைவர்களான கல்முனை
சுபத்திரா ராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மௌலவி
முஹம்மட் முஸ்தபா மற்றும் முன்னாள் கார்மல் பற்றிமா கல்லுாரியின் அதிபர்
பிரதர் மத்தியூ மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
இளங்ககோன் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்களான வை.எல்.எம். யூசுப்,
ஏ.எல்.எம். பாறுாக், எம். மாஹீர், உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள்
ஊழியர்களும் பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்வில் விசேட உரை ஒன்றை
நிகழ்த்திய மௌலவி முஸ்தபா, அவர்கள் பல்லின மக்கள் வாழும்
இலங்கைத்திருநாட்டில் மூவினங்களும் அவரவர் மத அனுஸ்டானங்களை சிறப்பாக
செய்வதற்கான விட்டுக்கொடுப்புக்களை சகோதர மதத்தவர்கள் செய்ய
முன்வரவேண்டும். அத்துடன் எல்லா மதங்களும் ஐக்கியம் சகோதரத்துவம்,
சமாதானத்தையே வலியுறுத்துவதாகவும் கூறினார்.
தென்கிழக்கு ப.கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார் தெரிவு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை
கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்
எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கலை கலாச்சார பீடத்தின் முன்னால்
பீடாதிபதி பலிலுல்ஹக்கின் மறைவினை அடுத்து ஏற்பட்ட இடைவெளிக்கு புதிய
பீடாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு இன்று பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்
கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
பீடாதிபதி தெரிவுகளுக்காக மொழித்துறைத்
தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வும் சமூக விஞ்ஞானத்துறைத்
தலைவர் எம். அப்துல் ஜப்பாரும் போட்டியிட்டனர். மொழித்துறைத் தலைவர்
கலாநிதி எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வுக்கு 12 வாக்குகளும், சமூக
விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பாருக்கு 15 வாக்குகளும் கிடைத்தன
மேலதிக மூன்று வாக்குகளினால் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக
சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்
வாக்களிப்பதற்கு 31 பேர் தகுதி
பெற்றிருந்தனர். அவ்வாக்களிப்பின் பிரகாம் 28 பேர் வாக்களித்திருந்தனர்
அதில் ஒருவாக்களிப்பு நிராகரிப்பட்டதுடன் ஏனைய மூன்று பேர் வாக்களிப்புக்கு
சமுகம் அளிக்கவில்லை இதன் காரணமாக மூன்று மேலதிக வாக்குகளினால் புதிய
பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்
பிரகாரம் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு
பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார்கடமை பொறுப்பினை மேற்கொள்வார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Wednesday, July 17
பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டன
கொழும்பில் இருந்து பயணிகள் பஸ்ஸில்
கல்முனைக்கு கொண்டவரப்பட்ட ஒருதொகை சட்டவிரோத சிகரட்டுகள் இன்று
புதன்கிழமை கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை
பிரதான வீதியிலுள்ள தேநீர் கடை ஒன்றின் அருகே பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட
பொதிகளை இறக்கும்போது பொலிஸாரினால் இந்த சட்டவிரோத சிகரட்
கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு
பயணிகளை ஏற்றிச்செல்லும் போதே இந்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறைக்கு செல்லவேண்டிய பயணிகளை கல்முனையில் இறக்கிவிட்டு பொலிஸார்
பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்துச்சென்றனர். இதனால் கொழும்பில்
இருந்துவந்த பயணிகள் செய்வதறியாது தெருவோரத்தில் நின்றிருந்ததை அவதானிக்க
முடிந்தது.
பஸ்ஸுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத
சிகரட்டும், சாரதியும் கல்முனை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு
விசாரிக்கப்படுவதுடன் இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
Tuesday, July 2
ஒலிவ் பவுன்டேசன் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு; ஜெமீல் பிரதம அதிதி!

அக்கரைப்பற்று ஒலிவ் பவுன்டேசன் ஏற்பாட்டில் உயர் கல்வி கற்கும் மாவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (02.07.2013) செவ்வாய்கிழமை சாய்நதமருத பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்று.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ்
குழுத்தலைவரும் கொம்டெக் கல்வி நிறுவன பணிப்பாளருமான ஏ.எம். ஜெமீல் பிரதம
அதிதியாக கலந்து கொண்டு மாணர்களுக்கு புலமைப் பரில்களை வழங்கி வைத்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பால்நிலை தொடர்பான அறிவூட்டல்
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பால்நிலை தொடர்பான அறிவூட்டல்
செயற்பாட்டை முன்னெடுப்பது பற்றிய கலந்துரையாடல் பல்கலைக்கழக
உபவேந்தருக்கும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின்
இவ்வேலைத்திட்டம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்குமிடையில் இன்று
02-07-2013 தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீலின்
ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலுடன்
இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில்
மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இருநாள் சாரணர் பாசறை

இன நல்லுறவுக்கு பாலமாக அமையும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 130
வருட பூர்த்தியினை முன்னிட்டு அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணியர்
சங்கம் ஒழுங்கு செய்திருந்த இருநாள் சாரணிய பாசறையின் இறுதிநாள் நிகழ்வு
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும்,
சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூமின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி
மற்றும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்
பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
அக்கரைப்பற்று-கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத், கௌரவ சாரண
ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Monday, July 1
நாவலடியில் அந்நூர் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல்
அந்நூர் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால்
உடைக்கப்பட்டுள்ளது.
.
பள்ளிவாசலில் நேற்று இரவு இஷாத் தொழுகை முடிந்து பள்ளிவாயலை இரவு 09
மணியளவில் மூடிவிட்டு சென்ற பின், இன்று காலை பள்ளிவாயலில் கடமை செய்பவர்
சுபஹ் தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்த போது பள்ளிவாயல்
உடைந்து காணப்பட்டதாக இப் பள்ளிவாயலில் கடமை புரியும் மௌலவி
எச்.எம்.இர்பான் தெரிவித்துள்ளார்.
.
பள்ளி வாயலில் உள்ளுக்கு இருக்கும் உண்டியலும், வெளியில் இருக்கும்
உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி
உடைக்கப்பட்டு அதனுல் இருந்த பொருட்களை வெளியே எறியப்பட்டுள்ளது.
.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம் பாடசாலையில் திடீரென முளைத்த புத்தர் சிலை (படங்கள் இணைப்பு)
ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்தரைச்சேனை அஸ்ஹர்
வித்தியால விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (30.06.2013) திடீர் என
புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை
பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா
வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம் மைதானமாகும்
இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு
நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை
கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
கடந்த 01.03.2010ம் திகதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி
ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி
புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும்
விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால்
வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இது தொடர்பாக வாழைச்சேனை
நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன்
பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம்
என்று சுற்றிக் காட்டி 25.06.2013ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின்
விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை
வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில்
முறைப்பாடு செய்துள்ளனர்.
விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார்
தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர்
எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்
சீன அரசினால் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்திட்டத்தின் கீழ்
தெரிவுசெய்யப்பட்டு சீனா பீஜிங் தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி
மாணவனாக இணைந்து கொண்ட இவர் அங்கு மேற்கொண்ட மிகச்சிறந்த ஆய்வுகள்மற்றும்
வெளியீடுகளுக்காக 2010மற்றும்2011ஆண்டுகளில் மிகச்சிறந்த கலாநிதி
மாணவனாகவும் தெரிவு செய்யப்பட்டார்
நற் பிட்டிமுனையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை
கார்மல் பாத்திமாக்கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும்
மேற்கொண்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மர்ஹூம் அல்ஹாஜ்
எஸ்.எச்.முகம்மது மற்றும் ஹாஜியானி எஸ்.மீரா உம்மா ஆகியாரின் புதல்வராவார்.
நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும பொருட்களை அகற்றும் பணியில் கல்முனை பொலிஸார்!
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரம், கல்முனைக்குடி,
சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு பிரதேசங்களின் பிரதான
வீதியிலுள்ள வர்த்தகக் கடைகளினால் நடைபாதைகளில்; வைக்கப்பட்டிருக்கும
விற்பனைப் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச வர்த்தக கடைகளினால் நடைபாதைகளில்
வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸ் நிலைய
பதில் பொறுப்பதிகாரி வசந்தகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று
மேற்கொண்டனர்.
கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூடப்படுமா..?
கல்முனையில் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் தமிழ் மொழி பேசும் மக்களின்
நன்மை கருதி திறந்து வைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார
சபையின் மாவட்ட அலுவலக நடவடிக்கைகளில் பெரும்பாலானவை மெல்ல மெல்ல
நிறுத்தப்பட்டு இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளில் பெரும்பாலானவை அம்பாறை
மாவட்ட அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் திட்டமிட்ட சதி போன்று கல்முனை
மாவட்ட அலுவலகம் தற்போது உப அலுவலகமாக படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது
குறித்து இம் மாவட்ட தமிழ் மொழி பேசும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சதி செயல்பாடுகள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம்,
தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எவரும் இல்லையா? எனவும் கேள்வி
எழுப்புகின்றனர்.
Saturday, June 29
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்புவிழா
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திறப்புவிழா இன்று 29 06 2013
ஆம் திகதி காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ரிபா ஜலீல்
அவர்களது தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் WDJ
செனெவிரெட்னெ அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற
உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் ,திருமதி சிரியாணி,மாகாண சபை அமைச்சர்
உதுமாலெப்பை,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசனயாக ,மாகாண சபை
உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் L D அல்விஸ்
மற்றும் அம்பாறை மாவட்ட உதவியாரசாங்க அதிபர்களும்,நிந்தவூர் பிரதேச சபை
தவிசாளர் ,பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர் பிரதேசமானது கிட்டத்தட்ட 31000 மக்கள் தொகையையும்,25 கிராம
சேவகர் பிரிவுகளையும் கொண்ட ஒரு புராதன கிராமமாகும் இங்கு
நெற்செய்கையும்,மீன்பிடியுமே பிரதான தொழில்களாக காணப்படுகின்றன .நவீன
முறையில் வடிமக்கப்பட்டு சுமார் 45 மில்லியன் ரூபா செலவில்
நிருமாநிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதிபயன்பாட்டுக்கு வருவதிலிருந்து
இட நெருக்கடியால் இதுவரை காலமும் சேவை வழங்குவதில் ஏற்பட்ட இடர்பாடுகள்
நீக்காபட்டிருப்பதால் மக்களுக்கு சிறந்த சேவை எதிர்காலத்தில்
கிடைக்கப்பெறும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர்
தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் புதிய பயிலுனர் அனுமதி
2013-2015 கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர் அனுமதி எதிர் வரும்
03.07.2013 ந் திகதி புதன் கிழமை காலை 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை தேசிய
கல்வியியல் கல்லூரியில் நடைபெறுமென பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஊடகங்களுக்கு
தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் படி 190 பயிலுனர்கள் பின்வரும் 07 கற்கை நெறிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
1. விஞ்ஞானம் – 30
2. கணிதம் – 30
3. வர்த்தகமும்கணக்கியலும்- 20
4. ஆரம்ப நெறி – 50
5. இஸ்லாம் – 15
6. தமிழ் – 30
7. விசேட கல்வி -15
2. கணிதம் – 30
3. வர்த்தகமும்கணக்கியலும்- 20
4. ஆரம்ப நெறி – 50
5. இஸ்லாம் – 15
6. தமிழ் – 30
7. விசேட கல்வி -15
மேற்படி பயிலுனர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் தபாலில் இடப்பட்டுள்ளன.
கடிதம் கிடைத்தவர்கள் மாத்திரம் ஜுலை 03 ம் திகதி கல்லூரிக்கு உரிய
ஆவணங்களுடன் வருகை தந்து அன்றைய தினம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு
பீடாதிபதி வேண்டிக்கொள்கின்றார்.
புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
பல பெண்களை ஏமாற்றிய மன்மதன் கல்முனையில் சிக்கினார் !
பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரே
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்
8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில்
நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை
ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை
அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Friday, June 28
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பல்கலைக்கழக வாளகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை
விதிக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த மாணவனை மீண்டும் கற்றல்
செயற்பாடுகளுக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் இந்த
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பகிடி வதை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து
முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தபோது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை
பொலிஸார் மறித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனால் பல்கலைக்கழக ஊழியர்களும் விரிவுரையாளர்களும் நுழைவாயிலுக்கு
வெளியே நீண்டநேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுடன் தொடர்பினை
ஏற்படுத்துவதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.
அடிக்கல் விழாக்களை நடத்தி காலம் கடத்தும் கல்முனை அரசியல்வாதிகள்!
கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச்
சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் தற்போதய
அரசியல்வாதிகள் எவரும் செய்வதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.
அபிவிருத்தி என்ற பேரில் அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன
நிகழ்வுகள் என்பன மிகக் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர
திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாக இல்லை
எனவும் கூறுகின்றனர்.
அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன வைபவங்கள் என்பனவற்றிற்கு
கல்முனையிலிருந்து சாய்ந்தமருது வரை மற்றும் மருதமுனை பிரதான பாதைகள்
பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு பச்சை நிறப் பொலித்தீன்களாலும் பல
நிற பல்புகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
பொது மேடை ஒன்று போடப்பட்டு கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம்
தலைவர் வரை நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும் தாங்கள் பொறுமை
காத்திருப்பதையும் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்
சரியான நேரத்தில் சரியான முடிவையும் எடுப்போம் எனவும் கூறுகின்றனர்.
Thursday, June 27
கல்முனை சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் (படங்கள்)
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி பிரதேசங்களின் கிராம சேவகர்
பிரிவுகளிலுள்ள 14 பிரிவுகளை அடக்கிய சிவில் பாதுகாப்புக்குழுக்கூட்டம்
26-06-2013 கமு அல்- பஹ்றியா மகாவித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி ஏ. டப்ளியூ. ஏ. கபார் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலைய சிவில்
பாதுகாப்பு குழுக்களுக்கான பொறுப்பதிகாரி வசந்த ஐ.பி., கல்முனை உதவி பொலிஸ்
அத்தியட்சகர் ஏ.எல்.ஏ.வாஹிட், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். றஸாக் மற்றும்
சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள் கிராம சேவகர்கள் எனப்பலரும் கலந்து
கொண்டனர். இங்கு கிராம சேவகர் சார்பாக கிராம சேவகர் ஏ.ஏ. அலாவுதீன்
இக்குழு உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக
எடுத்துக் கூறினார்.
Subscribe to:
Comments (Atom)
















