Friday, February 16

நாம் சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் விடையங்களும், சண்டை பிடிக்க வேண்டிய விடையங்களும்.

நாம் சண்டை பிடித்துக்கொண்டிருக்கும் விடையங்களும், சண்டை பிடிக்க வேண்டிய விடையங்களும். 


உள்ளூராட்சி சபை தேர்தல் முடிந்த கையோடு, யார் யாருடன் சேர்ந்து ஆட்சியமைப்பது, யார் வென்றது தோற்றது,எந்த ஊர் வென்றது என்று நாம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். நாம் நமது கவனயீனத்தின் காரணமாகவும், போட்டி அரசியலின் காரணமாகவும் இழந்தவை அதிகம். இரட்டைத்தோகுதியில் இரண்டு உறுப்பினருமே ஒரு கட்சிக்கே செல்லும் சட்ட ஏற்பாடு நமது தலைமைகள் விட்ட தவறாகும். மேலும் உ.சபைகளில் பெண்களின் Active participation என்பது முஸ்லிம் சமூகத்தில் மிக குறைவாகவே காணப்படுகிறது. எனவே 25% பெண்கள் ஒதுக்கீடு என்பது மற்ற சமூகத்தை விட முஸ்லிம் சமூகத்துக்கு அனுகூலமான ஒன்றாக கருதமுடியவில்லை, சட்டத்தில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பெண்கள் நியமிக்கப்படுகின்றனர், இது உள்ளூராட்சி சபைகளில் inactive membership களை கொண்டு வரும். இவை நாம் சட்ட இயற்றல்களின்போது, கவனயீனமாக இருந்து இழந்தவைகள். இனி... வட்டாரங்களுக்கான எல்லைப்பிரிப்புகளின் போது, நாட்டின் பல பகுதிகளில் பெரும்பான்மையினர், நமது கவனயீனத்தை பயன்படுத்தி அவர்களது தேவைகளுக்கேற்றவாறு தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் சிதைக்கப்பட்டு, அவர்களுக்கேற்றவாறு வட்டாரங்கள் உருவாக்கப்பட்டன. இனிவரும், மாகாண சபை தேர்தலுக்கான எல்லைப்பிரிப்பு எதிர்காலத்தில் இடம்பெற இருப்பதால், இதில் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புகள், ஜம்இய்யதுல் உலமா போன்றவை மிக கூடிய கவனம் செலுத்தி, இனப்பரம்பலுக்கேற்றவாறு எல்லைப்பிரிப்பு செய்வதன்மூலம், நமது மாகாணசபை பிரதிநிதித்துவத்தையும், இருப்பையும் உறுதிப்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாகும். இதிலும் நாம் உட்கட்சி சண்டை பிடித்துக்கொண்டு, கவனயீனமாக இருப்போமானால், அது ஒரு வரலாற்றுத்தவறாக அமையும்.

Women proportional System - KMC

கல்முனை மாநகரசபை, பெண்கள் பிரிப்பு முறை. 
இன்றைய பேசுபொருளாகியுள்ள விடையம்: பிரதமர் ரணிலை ஜனாதிபதி மைத்ரீ பதவி நீக்கலாமா?
19ம் திருத்தம் கொண்டுவரமுன் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 19 இன் பின் இல்லாமல் செய்யப்பட்டது. 19ம் திருத்தத்துக்கு முன் சரத்து 47 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நிபத்தனைகளில், 1ஆவது நிபந்தனையான, ஜனாதிபதியால் பிரதமர் நீக்கப்படலாம் என்ற நிபத்தனை நீக்கப்பட்டு, 19ம் திருத்தத்தின் பின் சரத்து 46(2) இல் இரண்டு நிபத்தனைகள் மட்டுமே காணப்படுகிறது. Snapshots of both articles are attached.
Image may contain: textImage may contain: text

Saturday, July 20

வட, கிழக்கு மாகாணங்களுக்கு புதிதாக 6 ரயில் சேவைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியது.
400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.



கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும்.



மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கில் முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்கள்; ஆளுநருக்கு தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை!

VT
கிழக்கு மாகாண கல்வியமைச்சின்  தீர்மானத்திற்கிணங்க  கடந்த 01.07.2013 ஆம் திகதி முதல் 2013 டிசம்பர் வரை சகல ஆசிரியர்களது இடமாற்றங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிலசில வலயங்களில் ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெற்று வருவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை அனுப்பவுள்ளது.
உடனடியாக இப்பழிவாங்கல் இடமாற்றங்கள் நிறுத்தப்படுவதுடன் குறிப்பிட்ட காலப்பகுதியினுள் செய்யப்பட்ட இடமாற்றங்களை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

Friday, July 19

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இப்தார்



கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஏற்பாட்டில் இன்று (19) ஐக்கிய சமூக ஒற்றுமையை வலியுறுத்தும்  இப்தார் நிகழ்வு சற்று முன்னர் வைத்தியசாலையில் வைத்திய அத்தியேட்சகர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் மூவின மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சர்வமத தலைவர்களான கல்முனை சுபத்திரா ராம விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மௌலவி முஹம்மட் முஸ்தபா மற்றும் முன்னாள் கார்மல் பற்றிமா கல்லுாரியின் அதிபர் பிரதர் மத்தியூ மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இளங்ககோன் மற்றும் வைத்தியசாலையின் வைத்தியர்களான வை.எல்.எம். யூசுப், ஏ.எல்.எம். பாறுாக், எம். மாஹீர், உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்த இப்தார் நிகழ்வில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய  மௌலவி முஸ்தபா, அவர்கள் பல்லின மக்கள் வாழும் இலங்கைத்திருநாட்டில் மூவினங்களும் அவரவர் மத அனுஸ்டானங்களை சிறப்பாக செய்வதற்கான விட்டுக்கொடுப்புக்களை சகோதர மதத்தவர்கள் செய்ய முன்வரவேண்டும். அத்துடன் எல்லா மதங்களும் ஐக்கியம் சகோதரத்துவம், சமாதானத்தையே வலியுறுத்துவதாகவும் கூறினார்.


தென்கிழக்கு ப.கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார் தெரிவு



இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கலை கலாச்சார பீடத்தின் முன்னால் பீடாதிபதி பலிலுல்ஹக்கின் மறைவினை அடுத்து ஏற்பட்ட இடைவெளிக்கு  புதிய பீடாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு இன்று பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
பீடாதிபதி தெரிவுகளுக்காக மொழித்துறைத் தலைவர் கலாநிதி  எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வும் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பாரும் போட்டியிட்டனர். மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வுக்கு 12 வாக்குகளும், சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பாருக்கு 15 வாக்குகளும் கிடைத்தன மேலதிக மூன்று வாக்குகளினால் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வாக்களிப்பதற்கு 31 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவ்வாக்களிப்பின் பிரகாம் 28 பேர் வாக்களித்திருந்தனர் அதில் ஒருவாக்களிப்பு நிராகரிப்பட்டதுடன் ஏனைய மூன்று பேர் வாக்களிப்புக்கு சமுகம் அளிக்கவில்லை இதன் காரணமாக மூன்று மேலதிக வாக்குகளினால் புதிய பீடாதிபதியாக  எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் இன்றிலிருந்து தொடர்ந்து  மூன்று வருடங்களுக்கு பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார்கடமை பொறுப்பினை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பீச் பாக், வாசிகசாலை சுற்றுமதில், மீனவர் மண்டபம் என்பவற்றை உடைக்குமாறு CCD உத்தரவு!

Slide6
சாய்ந்தமருதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் வாசிகசாலை மற்றும் பீச் பாக் என்பவற்றின் சுற்று மதில்களையும் மீனவர் ஓய்வு மண்டபம் உள்ளிட்ட மூன்று கட்டிடங்களையும் ஏழு நாட்களுக்குள் உடைத்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது மீனவர் வாசிகசாலை அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரையில் அமைக்கப்பட்டு, இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீச் பாக்கின் சுற்றுமதில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

Wednesday, July 17

பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டன

கொழும்பில் இருந்து பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டவரப்பட்ட ஒருதொகை சட்டவிரோத சிகரட்டுகள் இன்று புதன்கிழமை கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
kalmunai
இன்று அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை பிரதான வீதியிலுள்ள தேநீர் கடை ஒன்றின் அருகே பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட பொதிகளை இறக்கும்போது பொலிஸாரினால் இந்த சட்டவிரோத சிகரட்
கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் போதே இந்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைக்கு செல்லவேண்டிய பயணிகளை கல்முனையில் இறக்கிவிட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்துச்சென்றனர். இதனால் கொழும்பில் இருந்துவந்த பயணிகள் செய்வதறியாது தெருவோரத்தில் நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
பஸ்ஸுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டும், சாரதியும் கல்முனை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதுடன் இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, July 2

சம்மாந்துறையில் மாபெரும் கல்விக் கண்காட்சி; இன்று ஆரம்பம்!


TODAY EXIBITION5

சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனையும் வலய அதிபர்கள் சங்கமும் இணைந்து நடாத்துகின்ற மூன்று நாள் கல்விக்கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் ஆரம்பமானது.
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுரியில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் த.கலையரசன் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

ஒலிவ் பவுன்டேசன் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு; ஜெமீல் பிரதம அதிதி!


OLIWES (4)
அக்கரைப்பற்று ஒலிவ் பவுன்டேசன் ஏற்பாட்டில் உயர் கல்வி கற்கும் மாவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (02.07.2013) செவ்வாய்கிழமை சாய்நதமருத பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்று.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவரும் கொம்டெக் கல்வி நிறுவன பணிப்பாளருமான ஏ.எம். ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணர்களுக்கு புலமைப் பரில்களை வழங்கி வைத்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பால்நிலை தொடர்பான அறிவூட்டல்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பால்நிலை தொடர்பான  அறிவூட்டல் செயற்பாட்டை முன்னெடுப்பது பற்றிய கலந்துரையாடல் பல்கலைக்கழக உபவேந்தருக்கும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் இவ்வேலைத்திட்டம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்குமிடையில் இன்று 02-07-2013  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீலின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.

எம்.சி.எம்.சி.ரிழா (J.P) அவர்கள் "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிப்பு








கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராகவும் நீரிழிவு பிரிவின் பொறுப்பாளராகவும்  கடமை புரியும் சாய்ந்தமருதை சேர்ந்த எம்.சி.எம்.சி. ரிழா  அவர்கள், அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2013 க்கான "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது பிராந்தியத்தில் சமூக, மத கலாச்சார சமூக இணக்கப்பாடு போன்றவற்றில் அளப்பெரிய பங்காற்றுபவர்கள்  இனங்காணப்பட்டு, அவர்களுக்காக வழங்கி கௌரவிக்கப்படுவர். இவ்விழா அண்மையில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானாக பல வருடமாக சேவையாற்றி வருகிறார்.இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் இவரது தாதி பட்டப்படிப்பை  (BSc Degree in Nursing) பூர்த்தி செய்து பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் அண்மைக்காலமாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில், அளப்பெரிய சேவைகளை ஆற்றிவரும் ZESDO (Zahirians' Education and Social Development Organization) அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 






கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இருநாள் சாரணர் பாசறை

இன நல்லுறவுக்கு பாலமாக அமையும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 130 வருட பூர்த்தியினை முன்னிட்டு அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணியர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த இருநாள் சாரணிய பாசறையின் இறுதிநாள் நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது சிங்கர் ஷோ றூமின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி மற்றும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அக்கரைப்பற்று-கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத், கௌரவ சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

Monday, July 1

கிழக்கில் புதிய முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்!



கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி புதிய முஸ்லிம் அரசியல் கட்சியொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அரசாங்கத்தில் கபினட் அமைச்சுப் பதவி வகிக்கும் ஒருவரின் தலைமையில்தான் புதிய முஸ்லிம் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாம்.

இந்தக் கட்சிக்குரிய முக்கிய பொறுப்புக்களுக்கு யார்? யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நீண்ட ஆலோசனைகள் மேல் மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றதாம். குறிப்பாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சியொன்று அரசை விட்டு வெளியேறினால் அடுத்த கணமே இன்னும் பலரையும் தமது அணிக்குள் இழுத்தடுக்கலாம் என்கின்ற நினைப்போடு தலைவராக வரவிருக்கின்றவர் உலாவருவதாகவும் கேள்வி.

தனித்துவத் தலைவர் தனது கட்சிக்குள் இருக்கின்ற ஒற்றரை கண்டுகொண்டதால் இனிமேலும் தனது பருப்பு வேகாது என்ற முடிவுக்கு வந்ததன் காரணத்தினாலேயே புதிய கட்சிக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றத்தில் உயர் பதவி வகிக்கின்ற ஒருவரையும் புதிய கட்சியில் இணைத்துக்கொ

ண்டு போவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாம். இதற்கு அரச உயர்மட்டம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம். இதேவேளை தனித்துவத் தலைவரோ? ஓற்றர் வேலை பார்க்கின்றவரை பெரியதொரு ஆளாகக் கணக்கே எடுக்கவில்லையாம் மிக விரைவில் அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாராம். தனித்துவத் தலைவரின் முடிவிற்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பெருத்த ஆதரவை தெரிவித்துள்ளனராம்.

அதிகார பதவி ஆசைக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகின்றார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்.