Tuesday, July 2

சம்மாந்துறையில் மாபெரும் கல்விக் கண்காட்சி; இன்று ஆரம்பம்!


TODAY EXIBITION5

சம்மாந்துறை வலயக் கல்வி பணிமனையும் வலய அதிபர்கள் சங்கமும் இணைந்து நடாத்துகின்ற மூன்று நாள் கல்விக்கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை வலயக் கல்விப் பணிப்பாளர்எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் ஆரம்பமானது.
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுரியில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் த.கலையரசன் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

முன்னதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் த.கலையரசன் ஆகியோர் மாலை சூட்டி வரவேற்கபட்டனர். தேசியக் கொடியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எல்.எ.அமீர், கிழக்கு மாகாணக் கொடியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், வலயக் கொடியை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஆகியோர்  ஏற்றி வைத்தனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்களை அதிதிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அதேவேளை காலை முதல் பெருந்தொகையான மாணவர்களும் பொது மக்களும் சாரிசாரியாக வந்து கண்காட்சியை முண்டியடித்துக் கொண்டு பார்வையிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
மேற்குப்பக்கம் விளினயடிச் சந்தி வரையும் கிழக்கு பக்கம் ஹிஜ்ரா சந்தி வரையும் மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஜனாதிபதியின் இணைப்பாளர் எம்.காதர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.ஜலீல், எஸ்.புவனேந்திரன், எம்.ஜாபீர் எம்.றஹீம் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான ஜ.எ.றசூல், எ.வினாயகப்பிள்ளை, எம்.சித்திக் அதிபர் சங்கத் தலைவர் எம்.அபூபக்கர் உள்ளிட்ட அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் சிறுவர் உரிமைகள் தொடர்பாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை ஒத்துழைப்புடன் மனித அபிவிருத்தித் தாபனம் மிகவும் பயனுடைய இருபெரும் காட்சிக் கூடங்களை ஏற்படுத்தியிருந்தது.
அங்கு உரிமைகள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மனித அபிவிருத்தித்தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் விளக்கமளித்தார்.
ஆரம்ப நெறி கணிதம் விஞ்ஞானம் விவசாயம் தமிழ் இந்து சமயம் இஸ்லாம் சமயம் சுகாதாரம் வர்த்தகம் சிங்களம் முதலுதவி மனையியல் அழகியற்கலை பொது விவேகம் எனப் பல காட்சிக் கூடங்கள் பாடங்கள் வாரியாக சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்களும் பார்வையாளர்களும்  தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்க்கு ருபா. 10 ஏனையோருக்கு ருபா 20 நுழைவுச் சீட்டுக் கட்டணமாக அறவிடப்படுகிறது.
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுரியில்  செவ்வாய்க்கிழமை  முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் 32 காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கண்காட்சி நடைபெறும் அல்மர்ஜான் வளாகம் களைகட்டியுள்ளது.
TODAY EXIBITION1TODAY EXIBITION0 TODAY EXIBITION4 TODAY EXIBITION7 TODAY EXIBITION8 TODAY EXIBITION14 TODAY EXIBITION22jpgTODAY EXIBITION50jpgTODAY EXIBITION114

No comments:

Post a Comment