Friday, December 30

கிழக்கு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டம் (படங்கள்


கிழக்கு அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டம் (படங்கள்)மட்டக்களப்பு - காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச அப்பியாசப் புத்தகம் வினியோகிப்பதற்கு ஹிஸ்புல்லா கலாசார மண்டபம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காத்தான்குடியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒருவாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடல்நீர் உட்புகுந்து பாதிப்பு!

Slide2
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த காற்றுடன் கூடிய மழையினாலும் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்துள்ளது.
காத்தான்குடி கடலரிப்பினால் கடல் முன்னோக்கி காணப்படுவதுடன் உட்புகுந்த கடல்நீரை வெளியேற்றுவதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் இயந்திரப் படகுகள் கரையோரங்களில் தரித்து நிற்கின்றன.

A/L பரீட்சையில் கல்முனை ஸாஹிரா மாணவர்களின் சாதனை (படங்கள் இணைப்பு)


2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது.


இதன்படி இறுதியாக வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பொறியியல் பீடத்திற்கு 11 மாணவர்களும் மருத்துவ பீடத்திற்கு 2 மாணவர்களும் முகமைத்துவ பீடத்திற்கு 6 மாணவர்களும் கலைப்பீடத்திட்கு 4 மாணவர்களும் மற்றும் உயிரியல் , பௌதிகவியல் துறைகளுக்கும் கணிசமான அளவு மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.(படங்கள் இணைப்பு)

Thursday, December 29

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீடு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த 'திசை மாறிய பறவை' குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழக கலைபீட திரைக்கூடத்தில் இடம்பெற்றது.


நம்மவர்கள் எங்களை மட்டந்தட்டுகின்றனர்: சாய்ந்தமருது ஜனூஸ்

'தென்னிந்தியாவிற்கு சென்று திரைத்துறை குறித்த விடயங்களை கற்றுவரும் நம்மவர்கள் எங்களை மட்டந்தட்டுவார்களே தவிர, தைரியமாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்க மாட்டார்கள். அப்படியே தைரியமாக ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் ஊக்க மாத்திரையாக இருக்க தயாரில்லை' என்கிறார் இயக்குநர் எஸ்.ஜனூஸ்.

கவிஞர், திரைப்பட இயக்குநர், சிறுகதை எழுத்தாளர், அறிவிப்பாளர், நாடக நெறியாளர் என பல்கோணங்களில் தமது இருப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் எஸ்.ஜனூஸ், அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவை பிறப்பிடமாகக் கொண்டவர்.

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

sazni2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் முஹம்மட் சஸ்னி பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது -16 அஹமட் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஹனீபா சித்தி ஹுஸைமா தம்பதிகளின் மூன்றாவது புதல்வனான சஸ்னி மாவட்டத்தில் முதலாமிடத்தையும் தேசிய ரீதியில் 169 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கல்முனை ஸாஹிராவின் சாதனை வீரர்களுடன் AIMS அமைப்பினரின் ஒரு சந்திப்பு

Meeting with AIMS

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது .
இதன்படி இறுதியாக வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பொறியியல் பீடத்திற்கு 11 மாணவர்களும் மருத்துவ பீடத்திற்கு 2 மாணவர்களும் முகமைத்துவ பீடத்திற்கு 6 மாணவர்களும் கலைப்பீடத்திட்கு 4 மாணவர்களும் மற்றும் உயிரியல் , பௌதிகவியல் துறைகளுக்கும் கணிசமான அளவு மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் .

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மாவட்டத்தில் உயிரியல்துறையில் முதலிடம்

siyatha-1-150x150

வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல்துறையில் 3ஏ க்களைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும்
படங்களில் காணலாம்.


மருதமுனை பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயாராக இருந்த கஞ்சா கலந்த போதைப்பொருள் மட்டு.அம்பாறை மது வரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது.

Monday, December 12

கிழக்கு மாகாணத்தின் தலைநகர் மட்டக்களப்புதான்- அமைச்சர் அதாவுல்லா


By Afzal On Sunday, December 11, 2011
கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்கப்பபு, அம்பாறை என 3மாவட்டங்களை கொண்டிருந்தாலும் மட்டக்களப்புத்ததான் மையப்பகுதியாக காணப்படுகின்றது. எனவே மட்டக்களப்புதான் கிழக்கு மாகாணத்தின் தலைநகர் என உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
இன்று மாகாணத்தின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலமைக்காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது 2 ஆம் பிரிவு பெற்றோ முன்பள்ளி சிறார்களின் கலை கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது 2 ஆம் பிரிவு பெற்றோ முன்பள்ளி சிறார்களின் கலை கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டிட தொகுதியில் சாய்ந்தமருது இல்ஹாம் இளைஞர் கழக தலைவர் ஏ.எம்.நபார் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது முன்பள்ளிகளின் வலைப்பின்னலின் தலைவர் இஸட். ஏ. ஜாபிர்  கௌரவ அதிதியாகவும்
கலந்து கொண்டனர்..

Thursday, December 8

தேசிய ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்



(யு.கே.காலித்தீன்)
பிராந்திய அபிவிருத்தி சம்மந்தமான தேசிய ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
கலை கலாச்சா பீடாதிபதி கே.எம்.எம். பழீல் ஹக் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கானது எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 04.00 மணிவரை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்ஆய்வரங்குக்கு பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் அச்சி எம். இஸ்காக் கலந்து கொள்வதோடு பிரதம அதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கௌரவ போராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Friday, December 2

சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


cims 2
சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

Thursday, December 1

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் பண்பாட்டு விழாவும் கண்காட்சியும்

Slide4
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் எற்பாட்டில் நாளை டிசம்பர் 1ம் திகதி முதல் 4 ம் திகதி வரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்குமான மாபெரும் பண்பாட்டு விழாவும் கண்காட்சியும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று (2011.11.30) பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது. இதில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரப் மாணவர் நலன்புரிப் பிரிவுப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா, திட்டப் பணிப்பாளர் கே.எம். முபாறக் மாணவப் பேரவைச் செயலாளர் ஆர.எம். சஞ்சீவ பண்டார, கலைப் பிட மாணவர் பேரவைத் தலைவர் எம்.எஸ்.எம். சப்ரீன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ்விழாத் தொடர்பாக விளக்கமளித்தனர்.