Showing posts with label மாகாண செய்திகள். Show all posts
Showing posts with label மாகாண செய்திகள். Show all posts

Saturday, July 20

வட, கிழக்கு மாகாணங்களுக்கு புதிதாக 6 ரயில் சேவைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக ஆறு ரயில் சேவைகளை தொடங்கவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் கூறியது.
400 மில்லியன் ரூபா முதலீடு தேவையான இந்த புதிய ஆறு ரயில் சேவைகளும் அடுத்த ஏப்ரலில் அல்லது மே மாதம் தொடங்கலாம் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.



கொழும்பு – ஓமந்தை, மதவாச்சி – மடு ஆகிய இரண்டு ரயில் சேவைகளும் போரின் போது அழிந்த ரயில் பாதைகளை திருத்தி அமைக்கப்பட்டவையாகும்.



மக்களின் பயண வசதியை அதிகரிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் புதிய ரயில் சேவைகள் அவசியமாகின்றன என பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, July 1

கிழக்கில் புதிய முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்!



கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி புதிய முஸ்லிம் அரசியல் கட்சியொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பகரமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அரசாங்கத்தில் கபினட் அமைச்சுப் பதவி வகிக்கும் ஒருவரின் தலைமையில்தான் புதிய முஸ்லிம் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாம்.

இந்தக் கட்சிக்குரிய முக்கிய பொறுப்புக்களுக்கு யார்? யாரை நியமிப்பது என்பது தொடர்பில் நீண்ட ஆலோசனைகள் மேல் மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றதாம். குறிப்பாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சியொன்று அரசை விட்டு வெளியேறினால் அடுத்த கணமே இன்னும் பலரையும் தமது அணிக்குள் இழுத்தடுக்கலாம் என்கின்ற நினைப்போடு தலைவராக வரவிருக்கின்றவர் உலாவருவதாகவும் கேள்வி.

தனித்துவத் தலைவர் தனது கட்சிக்குள் இருக்கின்ற ஒற்றரை கண்டுகொண்டதால் இனிமேலும் தனது பருப்பு வேகாது என்ற முடிவுக்கு வந்ததன் காரணத்தினாலேயே புதிய கட்சிக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றத்தில் உயர் பதவி வகிக்கின்ற ஒருவரையும் புதிய கட்சியில் இணைத்துக்கொ

ண்டு போவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாம். இதற்கு அரச உயர்மட்டம் பச்சைக் கொடி காட்டியுள்ளதாம். இதேவேளை தனித்துவத் தலைவரோ? ஓற்றர் வேலை பார்க்கின்றவரை பெரியதொரு ஆளாகக் கணக்கே எடுக்கவில்லையாம் மிக விரைவில் அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளாராம். தனித்துவத் தலைவரின் முடிவிற்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பெருத்த ஆதரவை தெரிவித்துள்ளனராம்.

அதிகார பதவி ஆசைக்கு இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகின்றார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்.


Tuesday, June 25

கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றம்..?

 
 
 
 
 
 
 
 
 
கிழக்கு மாகாண அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
கிழக்கு மாகாண ஆளுனருக்கும், அமைச்சர்கள் மற்றும் மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்தே, இந்த மாற்றம் இடம்பெறலாம் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 
கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மாகாண ஆளுனர் வைஸ் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம, மற்றும் கிழக்கு முதல்வர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று முன்தினம் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

கிழக்கு மாகாண சபையை கலைத்து தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை

கிழக்கு மாகாண சபை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் முரண்பட்டுள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதா அல்லது கலைத்து விட்டு தோ்தல் ஒன்றை நடத்துவதா என்பது தொடா்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதலமைச்சா் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையினான குழுவினா் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அறிய முடிகின்றது.

அதேவேளை நேற்றிரவு நடத்தப்பட்ட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாண சபை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தமிழத் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைத்தால் மாகாண சபையை கலைக்கப்பது எனவும் ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

Saturday, June 22

கிழக்கு ஆளுநரையும், முதலமைச்சரையும் மாற்றுவதென்றே பேச்சுக்கே இடமில்லை - மஹிந்த



கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் வீனான பிரச்சனைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஐனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடிய போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஆளுனருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்பரிப்பிலும் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே மேற்படி ஐனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போதைய ஆளுனரும், முதலமைச்சரும் தான் தொடர்ந்து இருப்பார்கள். அதில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது.ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் முரண்பாட்டை தோற்றுவிக்கும் பிண்ணனியில் உள்ளவர்களை நான் அறிவேன். அவர்களின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது எனவும் ஐனாதிபதி தெரிவித்தார்.
அதே வேளை விமலவீர திஸாநாயக்க வீணாண முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றார். ஆளுனர் முதலமைச்சர் மாறாவிட்டாலும் கல்வியமைச்சசை வேரொருவருக்கு வழங்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று ஐனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவையும் விசேடமாக அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Wednesday, June 19

கிழக்கில் முஸ்லிம்கள் தொடர்பில் அரசுக்கு அச்சமாம்


unp-logo_CI1வடக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதற்கான சட்டமூலம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வட-கிழக்கை இணைக்கும் நடவடிக்கையொன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சம்  அரசாங்கத்திடம் உள்ளது. என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே மாகாண சபைகளை இணைக்கும் தீர்மானத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் இணைந்து போக நினைத்தாலும் அங்குள்ள சிங்கள மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வரும் அமீர் அலி முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, April 5

அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி



அரச காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமர் 0.4805 ஹெக்டெயர் காணியை அமன்தா பீச் ரிசோட் எனும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் குச்சவெளி பிரதேசத்திலுள்ள அரச காணியொன்றே அமன்தா பீச் ரிசோட் தனியார் நிறுவனத்திற்கு வழப்படவுள்ளது. இந்த காணி 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் கடந்த புதன்கிழமை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த காணி வழங்கல் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர  திஸாநாயக்கவினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை, 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய நீண்ட கால வரி வழங்கல் அடிப்படையில் காணியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பினை கிழக்கு மாகாண அமைச்சரவை பேச்சாளரான எம்.எஸ்.உதுமாலெப்பை நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.