Saturday, April 6

சம்மாந்துறைப் பிரதேசத்தின் வரலாறு


அரசியல் வரலாற்றுப்பின்னணி :

அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தினை ஆட்சி செய்வது என்ற அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும். சம்மாந்துறையின் அரசியல் வரலாற்று, பின்புலம் மிகவும் முக்கியமானதாகும். சம்மந்துறை என்பது கிழக்கின் கடல் வாணிபத்தின் மிக முக்கிய துறைமுகமாக மிக நீண்ட காலமாக விளங்கி வந்தமைக்குப் பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு வாவிய+டாக உள்நுழையும் வர்த்தகக்கப்பல்கள் தென்புறமாக ஏறத்தாழ 40 கிலோமீற்றர் தூரம் வாவியில் சென்று சம்மாற்துறையை அடைந்தார்கள். இங்கு தரை தட்டிய கப்பல்கள் பொருட்களை இறக்கி இங்கிருந்து கண்டி இராதானிக்கும் உள்நாட்டுக்கும் கொண்டு சென்றார்கள். இங்கிருந்துதான் கண்டிக்கான தரை வழி பாதையும் ஆரம்பமாகின்றது. மட்டுமன்றி இலங்கையின் பெரிய நதிகளில் ஒன்றான கல் ஓயா ஆற்றின் இடப்பக்கமாக அமைந்த (இது பட்டிப்பளையாறு என அக்காலத்தில் அழைக்கப்பட்டது).பரந்து விரிந்த வளமான நிலப்படுக்கையின் நடுவே காணப்பட்டமையால் இப்பிரதேசம் மக்கள் வாழ்க்கைக்கு வசதியாயமைந்தது.
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். வுpவசாயத்துக்கான அனைத்து வளங்களும் இப்பிரதேத்தில் அமைந்து காணப்பட்டன. பண்டைய மக்கள் தங்களுக்கிடையே ஒரு தலைவரைத் தெரிந்து கொண்டு அவரின் கட்டுப்பாட்டிலேயே ஊர் முழுவதும் ஒர் அரசியல் ஒழுக்க விழுமியங்கள் மிக்கதாக கட்டிவளர்க்கப்பட்டது. அந்தத் தலைவரே அவர்களின் முழு ஆட்சியாளராகத் திகழ்ந்தார். அவர் மரைக்காயர் என்று அழைக்கப்பட்டார். அந்த மரைக்காயர் தமக்குச் சிலரை உதவியாளர்களாக வைத்துக்கொள்வது வழக்கம். இந்த அடிப்படையில் அரசியல் ஆட்சியில் நிர்வாக முறை அமைந்தது. அவரின் தலைமையிலேயே ஊரின் பாதுகாப்பு, நிர்வாகம், நீதி, திருமணம், விவாகரத்து, சொத்துப்பிரிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிராமத்தின் வசதிபடைத்தவரும் கல்வி அறிவு, புத்திசாதூரியம் போன்றவற்றில் திறமையானவரையும் மரைக்காராக நியமித்தார்கள். இது பிற்காலத்தில் ஒரு பரம்பரை ரீதியான வாரிசுரிமையாக வந்தமையும் நாம் அவதானிக்கலாம். இப்படியே சம்மாந்துறையிலும் அரசியல் பின்னணி அமைந்து காணப்பட்டது. காலத்துக்குக்காலம் மாறிமாறிப்பலர் ஆட்சி செய்தமை வரலாற்றில் காணப்படுகிறது. இவர்கள் கண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அவர்களுக்குச் சேவகம் செய்துள்ளனர். மன்னனின் பிரதிநிதியாக இவர்கள் இருந்தமையால் மக்களும் மதித்தனர். இது பிற்காலத்தில் போர்த்துக்கேயரை எதிர்க்கவும் ஒல்லாந்தரை ஆதரிக்கவும் இப்பதவிகளே பெரிதும் உதவின. இவர்கள்தான் கிராம ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில் உள்ளுராட்சி சபைகளாகவும், பாராளுமன்ற சட்டசபை-உறுப்பினர்களாகவும் வளர்ச்சி பெற்று காணப்பட்டது என்பதை அறியமுடிகின்றது. இன்று இலங்கையிலேயே அதிக சனத்தொகையையும் அதிக நிலப்பரப்பையும் கொண்ட ஊராக சம்மாந்துறை திகழ்ந்தாலும் அவ்வளவுக்கும் ஒரு நம்பிக்கையாளர் சபையைக்கொண்டே இயங்கி வருகின்றமை இவ்வூரின் ஆட்சியியல் வரலாற்றின் வளர்ச்சியின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். காரணம், இப்பிரதேசத்தின் நிலத்தோற்றமும் நீர்ப்பாசன வடிகால் அமைப்பு முறையுமேயாகும். இப்பிரதேசத்தின் அரசியல் வளர்ச்சி என்பது ஒரு விவசாய சமூகத்தின் பரிணாம வளர்சியை அடிப்டையாகக் கொண்டது என்பதைக் கருத்திற்கொண்டே நோக்கவேண்டியுள்ளது.
நிர்வாக முறைமை
பொதுவாக - தென்கிழக்குப்பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இப்பிராந்தியத்தில் 12ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் பரவலாக வாழ்ந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. என்றாலும் கண்டி மன்னன் செனரத் காலத்திலேயே (1604 – 1635) அதிகமான முஸ்லிம்கள் இப்பிரதேத்துக்குக் குடியேற்றப்பட்டனர். இதன் பின் இப்பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகக் காணப்பட்டு வந்துள்ளது. இம் மக்களின் அரசியல் நிர்வாக முறைமைகள், விவசாயம், வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தன. இங்கு மிக நீண்ட வரலாற்றையும் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட சமூக அமைப்பு முறை காணப்பட்டுள்ளது. நிர்வாகஸ்தர்களாக வன்னியனார், போடிகள், காரியப்பர்கள், மரைக்காயர்கள், உடையார்கள் என்பவர்கள் அல்லது பதவிகள் அக்காலத்து உயர் நிர்வாகப்பதவிகளக காணப்பட்டன. இவர்களின் நீதி முறைமை, சட்டங்கள் என்பனவும் தனித்துவமனதகக் காணப்பட்டமை வரலாற்றின் மூலம் அறியக்கிடக்கிறது. இவர்கள் அனைவரும் கண்டி அரசனின் ஆளுகைக்குக்கீழேயே தமது அதிகாரங்களைப் பெற்று, செலுத்தி வந்துள்ளனர். தென்கிழக்குப் பிராந்தியம் மிக நீண்ட காலமாக கண்டிய இராசதனியின் ஒரு பிரிவாக இருந்து வந்தது.

ண்டிய இராசதானியும் சம்மாந்துறைப் பிரதேச வன்னிமைகளும் :
முஸ்லிம்கள் கண்டி இராஜ்யத்தின் மன்னனுக்கு மிகவும் விசுவாசமாகவே இருந்து வந்துள்ளனர். கண்டி மன்னன் செனரத் (1604 – 1635) காலத்தில் தென் இலங்கையில் ஒல்லாந்தரும் முஸ்லிம்களும் நம்பிக்கையிழந்து முஸ்லிம்கள் அப்பிரதேங்களிலிருந்து இடம் பெயர்ந்தனர் அல்லது முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர். அப்போது செனரத் மன்னன் 4000 முஸ்லிம் குடும்பங்களை தற்போதைய அம்பாறை மட்டக்களப்புப்பகுதிகளில் குடியமர்த்தினான். அவர்களுக்குத் தேவையான நிலம், இருப்பிடம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்ததோடு மட்டுமன்றி முன்பிருந்த பழங்குடிகளையும் புதிய குடியேற்றக்காரரையும் ஆட்சி செய்வதற்காக பதவி வழித்தலைவர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு காரியப்பர் என்ற அதிகாரிகளை நியமித்தான். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பள்ளிவாசல்கள், கோயில்களின் காணி உறுதிகளான செப்பேடுகளில் “ மட்டக்களப்பு இஸ்லாமியர்களின் தலைமை இஸ்மாலெவ்வைக் காரியப்பரும் தம்பி நெயிந்தைக் காரியப்பரும் ஆகியவர்கள் “ என்ற வாசகம் காணப்படுகிறது. இக்காரியப்பர்கள் கண்டி வெல்லசக் கலவரத்தில் கொல்லப்பட்ட ஹஜ்ஜுமரைக்காரின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
கண்டி இராசதானிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து யானைகள், தேன், மெழுகு, பாக்குஇ புகையிலை பேன்றவைகளை திறையாக அனுப்பிவைத்தனர். அது மட்டுமன்றி போர்க்காலங்களில் போர் வீரர்களைத்திரட்டீக் கொடுக்க வேண்டியதும் இவர்களின் கடமையாகும்;;. இராஜ்ய பரிபாலனத்தில் இவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அரசன் தீர்மானங்களை எடுத்தமையும் அப்படியான ஆலோசனைக் கூட்டங்களில் இவர்கள் பங்கு பற்றியும் வந்தனர். இன்னும் கண்டி தலதா மாளிகை தியவதன நிலமே தெரிவின் போது சம்மாந்துறை வன்னிமைக்கும் ஒரு வாக்கிருந்தது இதற்கான சான்றாகும். அரசன் காலத்திலேயே சம்மாந்துறைப்பற்று வன்னிமை இவ்வாறு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தமைக்கு இது சான்றாகும். கண்டி மன்னனுக்கு பொருட்களை தவளங்கள் மூலம் கொண்டு சென்றவர்களும் யானைகளைப் பிடித்து வழங்கியவர்களும் சம்மாந்துறையிலும் இருந்துள்ளனர்.
பின்பு போர்த்துக்கேயரின் ஆதிக்கம் கிழக்கில் வீழ்ச்சி கண்ட போது அவர்களுக்கெதிராக ஒல்லாந்தருடன் இணைந்து பல போர்களில் சுதேசிகளும் பங்கு கொண்டனர். அவ்வாறான உள் நாட்டுப் படைகளுக்கு வன்னியர்களே தலைமை தாங்கினர். திருகோணமலையில் உள்ள போர்த்துக்கேயரின் கோட்டையை ஒல்லாந்த கடற் படைத் தலைவனான வெஸ்டர் வேல்ட் என்பவன் 12 கப்பல்கள் அடங்கிய படையுடன் 1639ல் முற்றுகையிட்டான். இதற்கு உதவியாக கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை என்ற பகுதிகளிலிருந்து உள்நாட்டுப்படைகள் சென்றன. இது ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா 500 போர் வீரர்கள் சென்றதாக கூறப்படுகிறது. சம்மாந்துறை வன்னிபமும் படைகளும் மட்டக்களப்பு வழியாகச் சென்றமைக்குச் சான்றுகள் உள்ளன. இச்சம்பவம் 1639 ல் சம்மாந்துறையில் ஒரு வன்னிபம் பலம் பெற்றிருந்தமையை எடுத்துக் காட்டுகிறது.

பிரித்தானியர் காலம் (1796 - 1948) :
சம்மாந்துறை அரசியல் வரலாற்றில் பிரித்தானியர் காலம் மிகவும் முக்கியமானது. மட்டக்களப்புப் பிரதேசம் வெருகல் முதல் பொத்துவில் வரையும் பிரித்தானியர் வசமான போது 1796 முதல் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களும் தமது நலனுக்காக முஸ்லிம்களில் பலரை உயர் உத்தியோகங்களில் நியமித்தனர். இதில் வன்னியனார், உடையார், பிஸ்கால் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், விதானைமார் போன்ற உயர் பதவிகளை வழங்கினர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நியமி;ப்பது அவர்களது ஆட்சிக்கும் வரி அறவீட்டுக்கும் இலகுவானதாயிருந்தது. இந்த வழியில் பல உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
1854ல் சம்மாந்துறையைச் சேர்ந்த அல்லிலௌவ்வை உடையார் பிரித்தானிய தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. இதே காலத்தில் பல தமிழர்களும் உடையார்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்பும் இருந்திருக்கின்றனர். அவர்களது பெயர்கள் சரியாக அறிய முடியவில்லை. இதே பதவிகள் ஒல்லாந்தர் காலத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த உடையார்களின் கடமை பற்றி ஒரு செப்பேட்டுக் குறிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது.
“ உடையார்களாக இருக்கப்பட்ட பேர்கள் இந்த ராச்சியத்தின் அந்தக் குடியானவர்களிடமாகத் தாங்கள் தலைக் கடமை முதலாக நிலங்கள், தோட்டங்கள், மரங்களுக்கு வாங்கப்பட்ட கடமைப் பணங்களுக்குத் திட உறுதிhன கைச்சாத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது. அந்தப்படியாகத்தானே இறைசுவதோரமாருந் தங்கள் கீழாகிய உடையார்கள் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட நிலக்கடமை, தலைக்கடமை முதலான பணங்களுக்கும் தாங்கள் ஒப்புக்கொண்ட படிக்கு கைச்சாத்துக் கொடுக்க கடனாளியாயிருக்கிறார்கள்………” என நீண்டு செல்கிறது.
இதில் உடையார்களின் பொறுப்புக்கள், கடமைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரியை அறவிட்டு அதிகாரியிடம் கொடுத்து பற்றுச்சீட்டுப் பெறல், அறவிடுவோருக்கு பற்றுச்சீட்டு வழங்குதல் இவை பட்டோலையாயிருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இவர்களின் மற்றைய பிரதான பொறுப்பு ஊர்க்காவல் பற்றியதாகும். களவு, கொள்ளை, கற்பளிப்பு, போன்ற சமூக விரோத செயல் புரிவோரை அறுக்கை பண்ணுவது(கட்டுப்படுத்துவது) அமைதியை நிலைநாட்டுவது, மக்களை அரசுக்கு விசுவாசமாக இருக்கச் செய்வது, நீதியை நிலை நாட்டுவதில் உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இதில் இவர்களது அதிகாரமும் அரசியல் பலமும் தெளிவாக விளங்குகிறது.
சம்மாந்துறையைச் சேர்ந்த பலர் இவ்வாறு பிரித்தானியரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணிக்கப்போடி வன்னியன்மஜீது வன்னியனார் அலி வன்னியனார்சங்கநாத பிள்ளை உடையார்வேலுப்பிள்ளை உடையார்உமறுலெவ்லைவப்போடி உடையார்அல்லிலெவ்வை உடையார்மீராலெவ்வைப்போடி உடையார்முகம்மதுலெவ்வை உடையார்அகமதுலெவ்வை உடையார்முகைதீன்வாவா உடையார்இப்றாலெவ்வை உடையார்பிஸ்கால் உடையார்
பிஸ்கால் என்பது காணி சார்ந்த வேலைகளைக் கவனி;ப்பவர் எனப்பொருள்படும். இவர்களது ஆட்சிக்காலம் சரியாக வரையறுத்துக் கூற முடியாவிட்டாலும் பல சம்பவங்கள், குறிப்புக்கள் இவர்கள் கடமை புரிந்தமையை எடுத்துக்காட்டுவனவாயுள்ளன.
கொஸ்தாப்பர் என்ற ஒரு அதிகாரப் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. இது பொலிஸ் கடமைகளைச் செய்யும் ஒரு பதவியாகும். குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதி மன்றத்துக்குச் சமர்ப்பிப்பது இவர்கள் பொறுப்பாயிருந்துள்ளது.



கண்டி மன்னன் விசுவாசிகள்
பலர் ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாக இருந்து பல பதவிகளைப் பெற்றிருந்தது போல கண்டிய மன்னனுக்கும் மற்றொரு சாரார் விசுவாசமாயிருந்துள்ளனர். குறிப்பாக அந்நியர்கள் கண்டி இராஜ்யத்துக்கு ஆபத்தை அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்திய போது சுதேசிகளான முஸ்லிம்களும் தமிழர்களும் அந்நியப்படைகளைத் தடுத்துப் போராடினர். அதற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஓந்தாச்சி மடம் என்ற இடத்தில் பிரித்தானியப்படைகளின் - கண்டி நோக்கிய முன்னேற்றத்தைத் தடை செய்த சுதேசிகளைப் பிரித்தானிய அரசு தேசத்துரோகிகள் என்ற பிரகடனம் செய்தது. இது பிரகடனப்படுத்தப்பட்டது 04 – 06 – 1804 ம் திகதியாகும். பின் குறிப்பிடப்படுவோர் 01 – 09 – 1804 ம் திகதிக்கு முன்னர் சரணடையாவிட்டால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனப் பிரகடனப்படுத்தியது. அப்போதைய தேசாதிபதி றொபட் நோட் என்பவராவார்;. இதில் மொத்தம் 169 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவர்களில் 7 பேர் முஸ்லிம்கள் அவர்களில் 3 பேர் திருகோணமலை மாவட்டத்தையும் 4 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் பின்வருபவர்களாவர்.
1. ஹசன் அபுபக்கர் உதுமாலைவ்வை - கல்முனை2. அனுஸ்லெப்பை மரைக்கார் - மருதமுனை3. ஈசா முகாந்திரம் - சம்மாந்துறை4. மீராலெவ்வை முகாந்திரம் - ஏறாவுர்

சம்மாந்துறையில் கண்டி மன்னனின் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தும் ஒரு சக்தி படைத்தவராக இந்த ஈசா முகாந்திரம் திகழ்ந்தார். இதில் குறிப்பிடும் முகாந்திரம் என்பது ஒரு குழுவின் தலைவரைக் குறிக்கும். இன்று கூட முகாமை என்ற சொல் வழக்கில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது சபையின் அல்லது இயக்கத்தின் தலைவரையே முகாந்திரம் என்று குறிப்பிட்டமை வழக்காகும். ஈசாலெவ்வை என்பது இவரின் இயற்பெயராகவும் முகாந்திரம் என்பது தலைமைப்பதவிக்கான அடைமொழியாகவும் கொண்டு அமைந்த பெயரே ஈசா முகாந்திரம்.

வன்னியனார் என்பது ஆட்சி அதிகாரம் மிக்க பதவியாகக் காணப்பட்டது. இவர்கள் மிகப் பரந்த நிலப்பரப்புக்குப் பொறுப்பாயிருந்தனர். இவர்களுக்குக் கீழ் சிறு நிலப் பரப்புக்கு பொறுப்பாக உடையார்கள் இருந்து செயலாற்றியுள்ளனர் மக்களின் தேவைகள் அனைத்தையும் இவர்கள் கவனித்து வந்துள்ளனர். விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம், நீதி, குற்றத்தடுப்பு, வரிஅறவீடு, வனபரிபாலனம் போன்ற அனைத்து விடயங்களிலும் இவர்கள் பணியாற்றினர். மன்னனின் கீழ் குறுநில மன்னன் போலும், பிரித்தானிய அரசின் கீழ் ஒரு தேசாதிபதி போலவும் இவர்கள் கடமையாற்றினர். இதனால் தமது பிரதேச அபிவிருத்தியில் இந்த வன்னியர்கள் மிக கண்ணும் கருத்துமாயிருந்து கடமையாற்றியுள்ளனர்.

உதுமாலெவ்வைப்போடி உடையார் :

இவர் சம்மாந்துறையை மீக நீண்ட காலம் நிர்வகித்தமைக்கான பல சான்றுகள் உள்ளன. உடையாரகவும் பள்ளிவாசல் தலைவராகவும் இருந்து மக்கள் நலனுக்குத் தன்னாலான சேவைகளைச் செய்து வந்துள்ளார். இவர் 1800ம் ஆண்டளவில் வாழ்ந்ததாகக் கருத முடிகிறது. இவரதுவாழ்விடம் மல்கமபி;ட்டியாயிருந்துள்ளது. அக்கால விவசாயச் செய்கை, நீர்ப்பாசன வசதி சுவாத்தியம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் அக்கிராமத்தில் அடங்கப்பட்ட அவுலியாவின் சிறப்பைக்கொண்டும் அங்கு நடைபெற்ற சில விசேட அதிசயங்களைக் கொண்டும் மல்கம்பிட்டி, பிரதான கிராமமாகக் திகழ்ந்தது. இங்கு வாழ்ந்த உமறுலெவ்வைப்போடி உடையார் சம்மாந்துறைப்பற்று பிரதேச உடையாராகவும் பள்ளிவாசல் பரிபாலகராகவும் இருந்துள்ளார். இன்னும் சம்மாந்துறை, மல்கம்பிட்டி, கொண்டவட்டுவான், பள்ளிவாசல்கள், சேத்திரங்கள் பராபரிப்பு சபை என்றே எமது பள்ளி பரிபாலனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பரந்த பிரதேசத்தை தன்னகத்தே கொண்டிருப்பதும் இச் சபைக்குச் சொந்தமான காணி மல்கம்பிட்டி பள்ளிவாசலை அண்மித்துப் பெருமளவு காணப்படுவதும் மல்கம்பிட்டியை மிக முக்கிய இடமாகக் காட்டுகிறது. இந்த உமறுலெவ்வைப்போடி உடையாரும் மல்கம்பிட்டியிலேயே தமது இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஊரின் தலைவரின்றி இங்கு எந்த வேலையும் நடைபெறமாட்டாது. ஜும்ஆத்தொழுகை கூட தலைவர் வராமல் ஆரம்பிக்கப்படமாட்டாது. அக்காலத்தில் தொழுகைக்கான நேரம் முக்கியமல்ல தலைவரின் பிரசன்னமே முக்கியமாயிருந்தது. இவர் தனது மகன் சுலையுமாலெவ்வையை இந்தியாவில் மார்க்கக்கல்வி கற்பதற்காக அனுப்பி கற்பித்தார். மிக நீண்டகாலம் கல்வி கற்றுத்தேறியபின் சுலையுமாலெவ்வை, ஆலிமாக வெளியாகி ஊர் வந்திருந்தார். அப்போது இவர்களுக்கு சம்மாந்துறையிலும் வீடு இருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகை நாள் எல்லோரும் வந்திருந்தனர். குறிப்பிட்ட இமாமும் வந்துவிட்டார் ஆனால் உமறுலைவ்வைப்போடி உடையார் வரவில்லை@ உரிய நேரம் கடந்து செல்கிறது. சுலையுமாலெவ்வை ஆலிம் “ஏன் இன்னும் ஜும்ஆ ஆரம்பிக்கவில்லை” எனக்கேட்டார். அதற்கு இமாம் “உங்கள் தந்தையான ஊர்த்தலைவர் வரவில்லை” எனக் கூறினார். “நான் கூறுகிறேன் நீங்கள் ஜும்ஆவை ஆரம்பியுங்கள்” என்று கூறி தொழுகையும் முடிந்த பின்புதான் உமறுலெவ்வைப்போடி உடையார் வந்தார். மக்கள் கலைந்து செல்வதைப்பார்த்த அவர் “ஏன்”; என்று விசரித்தார். “உங்கள் மகன் சுலையுமாலெவ்வை ஆலிம் உரிய நேரத்துக்கு தொழுகை நடாத்தக்கூறினார்”; என்ற விடயம் கூறப்பட்டது. “இன்றிலிருந்து எனது மகன் சுலையும்லெவ்வை ஆலிமே ஊர்க் கடமைகளுக்குப் பொறுப்பாயிருப்பார்”; எனக் கூறிச் சென்றார். இங்கு இரு விடயங்களைக் காணமுடிகிறது.
1. மார்க்கப்புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளது உரிய நேரம் முக்கியம் என்பதும் தலைவர் முக்கியமில்லை என்பதும் உணர்த்தப்படுகிறது.
2. ஊர்ப் பொறுப்புக்கள் தந்தை வழியாக மாற்றப்படுகிறது. இது அன்றிருந்த அரச பரம்பரையும் இவ்வாறு தந்தை வழி மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

AL. காரியப்பர் (1900)
முன்பு கூறியது போல பிரித்தானியர் தமது நிர்வாக உத்தியோகத்தர்களாக காரியப்பர்களை நியமித்தனர். 1900ம் ஆண்டில் AL. காரியப்பர் சம்மாந்துறைப் பற்று வன்னிபமாக நியமிக்கப்பட்டார். இவர் பற்றி விரிவான விளக்கங்கள் கிடைக்கப்பெறாவிட்டாலும் இவர் ஆங்கிலம் பேசக் கூடியவராக இருந்துள்ளார். விவாகம், விவாகரத்து, சொத்துப்பிணக்குகள் தீர்த்தல், கல்வி, தொழில், விவசாயம், நீர்ப்பாசனம், வனபரிபாலனம், கட்டாக்காலி மாடுகள் பராமரிப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு, வேறு பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதி வழங்குதல், வரி அறவீடு, காணி அபிவிருத்தி போன்ற கடமைகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

மீராலெவ்வை முகம்மதலி (அலிவன்னியார்)
இவர் சம்மாந்துறைப் பற்று வன்னியனாராக இருந்துள்ளார். 1933ம் ஆண்டில் இவர் மரணித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு இவர் வன்னியனராகக் கடமையாற்றியுள்ளார். இவர் நீர்ப்பாய்;சல் வன்னியனராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது காலத்தில் பல அபிவிருத்தி வேலைகள் சம்மாந்துறைப்பற்றில் நடைபெற்றுள்ளது. வீதிகள் அமைத்தல், பல புதிய வாய்க்கால்கள் அமைத்தல், புதிய நிலங்கள் விவசாயத்துக்குட்படுத்தப்படல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மிசனறிப் பாடசாலைகள் அமைப்பதிலும் இவர் முன்னின்றுழைத்துள்ளார்.

KM. மஜீது வன்னியனார் (1933க்குப் பின்)
இவர் சம்மாந்துறையில் திருமணம் செய்தவர். சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். முன்னாள் ஆP யு.ஆ. மேர்சாவின் தந்தை. ஆ.யு. அப்துல் மஜீது ஆP யின் தாயின் தந்தையும் இவரே. இவரும் சம்மாந்துறைக்குப் பல சேவைகளைச் செய்துள்ளார். உணவு உற்பத்தியில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகக் காணக்கிடக்கிறது. இவர் 1936ம் ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார்.
இம் மூவரது காலத்திலும் பல உடையார்களும் இங்கு இவர்களுக்குக் கீழ் சேவையாற்றியுள்ளனர்.

ஆ. ளு. காரியப்பர்
இவர் பொத்துவில் பாணமைப்பற்று வன்னியராகவும், கரைவாகுப்பற்று வன்னியராகவும், பின் சம்மாந்துறைப்பற்று வன்னியராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது காலத்தில் மஞ்சள் உடையார், (இவர் சிவசம்பு விதானையின் தந்தை) என்பவரும் உடையாராகக் கடமையாற்றியுள்ளனர். இதே காலத்தில் சோலை வரி அறவீட்டாளர்களாக பின்வருவோர் கடமையாற்றினர்.

பள்ளித்தெருப் பகுதிக்கு சாமித்தம்பி
வீரமுனைப் பகுதிக்கு காளிக் குட்டி
1ம் குறிச்சி சக்கர விதானை
2ம் குறிச்சி முகம்மது யாசீன்
3ம் குறிச்சி வெள்ள விதானை
4ம் குறிச்சி தொப்பியர் விதானை மீ. முகம்மதுத் தம்பி

சம்மாந்துறையின் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் பெரும்சிரமும் வியாபாரிகளின் சுரண்டலுக்கும் உள்ளாகித் தவித்தனர். அதனை நிவர்த்தி செய்ய ஊர் பிரமுகர்களான முகம்மதலி போஸ் மாஸ்டர், இப்றாலெவ்வை போன்றவர்களுடன் இவர் இணைந்து “ஐக்கிய விளைபொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கம்” எனற பெயரில் ஒரு கூட்டுறவுச் சங்கத்தினைப் பதிவு செய்து அதன் மூலம் மக்கள் நன்மையடையச் செய்தார். இதற்குப் பிரதி உபகாரமாக ஆ.ளு. காரியப்பர் 1947ம் ஆண்டு கல்முனைத் தொகுதிப் பாராளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்ட போது அவரை வெற்றி பெறச் செய்தனர். 1952ம் ஆண்டு வரை ஆP யாக இருந்து சம்மாந்துறைக்குப் பல சேவைகளைச் செய்துள்ளார். 1952ம் ஆண்டு தேர்தலில் யு.ஆ. மேர்சா(இப்தி மேர்சாவின் தந்தை) என்பவரிடம் தோல்வி அடைந்தார். பின் 1956ல் ஆ.யு. அப்துல் மஜீத் கல்முனைத் nhகுதிக்குப் போட்டியிட்டார். அதில் ஆ.ளு. காரியப்பர் வெற்றியீட்டினார்.
AM. மேர்சா :
இவர் மஜீது வன்னியனாரின் தந்தையாவார். சம்மாந்துறையைச் சேர்ந்தவர்@ சாய்ந்தமருதில் திருமணம் செய்தார். 1952ம் ஆண்டு தேர்தலில் ஆ.ளு. காரியப்பரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் விவசாய உற்பத்தியிலும் கால் நடை வளர்ப்பிலும் மிகக் கூடிய கவனம் செலுத்தினார். இவர் பதவியிலிருக்கும் போதும், பின்பும் உயிருடன் இருக்கும் வரை அம்பாறை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் ஒன்றை ஒதுக்கிக் கொள்வதற்குப் பெரிதும் பாடுபட்டார். அது கைகூடவில்லை. இவரது பதவிக் காலத்தில் சம்மாந்துறை ஹிஜ்றா வீதியில் அரச தேவைக்காகப் பெரும் நிலப் பகுதியை ஒதுக்கி வைத்ததன் மூலம் வைத்தியசாலை, பிரதேச செயலகக் காரியாலயம், பொலிஸ் நிலையம், தபாற்கந்தோர், உரக்களஞ்சியம், கல்விக்காரியாலயம் போன்றவை ஒரே பகுதியில் அமைவதற்குக் கர்த்தாவாக இருந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஜப்பான் நாட்டுக்குச் சென்று நவீன விவசாய முறைகளைப் பார்வையிட்டுப் பயிற்சி பெற்று வந்து எமது மக்களுக்கு எடுத்துக் காட்டினார். பின்பு வாழைச் சேனை காகித ஆலையில் முகாமையாளராக இருந்தும் எமது மக்களுக்குச் சேவையாற்றியுள்ளார். 1956ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்த போது சம்மாந்துறையைச் சேர்ந்த MA. அப்துல் மஜீத் அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பியமையால் தான் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் தனது சகோதரியின் மகனான அப்துல் மஜீதுக்கு இடம்விட்டு விலகிக் கொண்டார். இது இவரது மிகப் பெருந் தன்மையைக் காட்டுகின்றது. இத் தேர்தலில் அப்துல் மஜீத் MS. காரியப்பரிடம் தோல்வி கண்டார்.

MS. அப்துல் மஜீத்
1960 ம் ஆண்டுத் தேர்தலில் மார்ச் - ஜுலை ஆகிய மாதங்களில் நடைபெற்ற இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பல தேர்தல்களிலும் வெற்றி பெற்று 1994 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் தமது காலத்தில் சம்மாந்துறையில் காணப்பட்ட அரசியல் பிரிவினைகளைப் பெருமளவு களைந்து ஒற்றுமைப்படுத்தி வைத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது. அவரது காலத்தில் கூடுதலாக கல்வித் தேவைகளை நிறைவு செய்வதில் மிகக் கூடிய கவனம் செலுத்தினார்.
கல்முனை, பொத்துவில் என இரு தொகுதிகளாக்கப்பட்ட போதும் பொத்துவில் தொகுதியின் உறுப்பினராக இருந்து பின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் எனப்பிரிக்கப்பட்ட போது சம்மாந்துறைத் தொகுதிக்கும் உறுப்பினராக இருந்தார். இந்தப் பிரதேசத்தில் மிக நீண்;ட காலம் (34வருடம்) பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தமை இவரது நற்பண்புகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இக்காலத்தில் காணி விவசாய பிரதிஅமைச்சராகவும், மின்சார பிரதிஅமைச்சர், தபால்தந்தி பிரதிஅமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர், நெசவுக்கைத்தொழில் பிரதிஅமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். சம்மாந்துறை ஒரு விவசாயக் கிராமம் என்பதனாலும் அதிக மக்கள் விவசாயத்தில் தந்கியிருப்பதனாலும் விவசாய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இவர் கூடிய முக்கியத்துவமளித்துள்ளார். பல நீர்ப்பாசன அணைகளையும் சம்மாந்துறை, மல்வத்தை, சவளக்கடை, இறக்காமம் விவசாய விஸ்தரிப்பு நிலையங்களையும் அமைத்தார். சம்மாந்துறை தபாற்கந்தோர், வைத்தியாலை விடுதிகள் எனபவற்றைக் கட்டுவித்தார். சம்மாந்துறையின் விஸ்தரிப்புக்குப் பெரிதும் உதவினார். 10 வீட்டுத்திட்டம், 60 வீட்டுத்திட்டம், 100 வீட்டுத்திட்டம், வீரமுனை 30 வீட்டுத்திட்டம், சம்புமடு 150 வீட்டுத்திட்டம் எனப் பல வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அவைகளுக்குத் தேவையான பாதை, மின்சாரம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார். மஜீட்புரம் பேரின மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு கிராமமாகும். இதனை நடுநிசியில் சென்று அங்கிருந்த பேரின மக்களை விரட்டி முஸ்லிம் மக்களைக் குடியமர்த்தியமையால் இது இவரது பெயரில் மஜீட்புரம் என அழைக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்பக் கல்லூரியை ஏற்படுத்தியமை, பல பாடசாலைக் கட்டடங்களை அமைத்தமை யாவும் இவரது கல்வியின்பால் இருந்த ஊக்கத்தைக் காட்டுவனவாகும். இவர் தனது வீட்டில் ஒரு வாசகம் எழுதிவைத்திருந்தார். “எனது கூலி, விவசாயியின் மகன் எனது நிலைக்கு உயர உழைப்பதே எனது வேலையாகும், அதனையே நான் விரும்புகிறேன்.” இது அவரது தாராள மனதுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சட்டம் வந்த போது பல- ப.நோ. கூ.ச. களை ஏற்படுத்தினார். இதனால் மக்கள் பெரிதும் நன்மை பெற்றார்கள். 32 ஏக்கர் பரப்புடைய மிகப்பெரிய மையவாடியை ஏற்படுத்தி அதற்குச் சுற்றுமதிலும் அமைத்திருந்தார். சுனாமியின் போது ஒரே நாளில் 3000க்கு மேற்பட்ட ஜனாசாக்களை அடக்கக்கூடிய வாய்ப்பு இதனாலேயே ஏற்பட்டது. இது இவரின் தூரப் பார்வைக்கு உதாரணமாகும்.
இவரது காலத்தில் இன உறவு பெரிதும் பேணப்பட்டு வந்தது. தமிழ் மக்களுடன் மிக நெருங்கிய உறவு வைத்திருந்தார். பல தேர்தல்களில் சுயேச்சை உறுப்பினராகவே போட்டியிட்டார். இவரை ஒரு முஸ்லிம் பிரேரித்தால் ஒரு தமிழர் ஆமோதிப்பார். அந்தளவு அவர் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார். வாக்காளர்களில் பெரும்பாலான தமிழ் வாக்காளர்கள் இவருக்கு வாக்களித்தனர். அதே போல தமிழ் பிரதேசங்களுக்குத் தன்னாலான உதவிகளை செய்வதில் பின்னிற்கவில்லை. இவர் தமிழரசுக் கட்சியில் சேர்ந்ததில்லை. ஆனால், 1956ம் ஆண்டு சத்தியாக்கிரக காலத்தில் இவரும் சத்தியாக்கிரகம் செய்வதற்கு பங்கு கொண்டார். மேலும் சிங்கள மக்களுடனும் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இவரது தொகுதி மக்கள் மட்டுமன்றி எல்லா பிரதேசங்களிலும் எல்லா இனத்திலும் மிகக் கூடிய நண்பர்களைக் கொண்டிருந்தார். சுயேச்சை உறுப்பினராக இருந்து கொண்டு பெருமளவு சேவை செய்வதற்கு இவரது உயர்மட்ட அறிமுகத்தன்மையே காரணமாயிருந்தது. எதிரியிடமும் இன்முகத்துடன் பழகும் சுபாவமுடையவராக இருந்தார்.

MHM. அஷ்ரஃப்
மிக நீண்ட காலமாக சுயேச்சை அரசியல் பெரும்பான்மைக் கட்சி அரசியல் நிலவி வந்த எமது பிராந்தியத்தில் ஒருகட்சி அரசியல் புகுத்தப்பட்டது. முஸ்லிம்காங்கிரஸ் என்ற அழகிய பெயருடன் ஒரு கட்சி தோன்றியது. இதன் தாபகத்தலைவராக எம்.எச்.எம். அஷ்ரஃப் இருந்தார். அவர், இதுவரை இருந்து வந்த அரசியல் அம்சங்களளையும் கலாச்சாரங்களையும் புறந்தள்ளி மிகக் கூடிய சமுக நம்பிக்கையை மக்களுக்கூட்டி தனித்தனி மனிதர்களால் பெற்ற செல்வாக்கு எமக்கு பயன்தராது என்றும் நாம் ஒன்றுபட்டால் எமது உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தினையும் பெறமுடியும் என்ற கோசத்துடன் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சார உத்திகளும் வேறாக இருந்தன. அரசியலில் மார்க்கம் புறம்பானதல்ல என்ற உயர்ந்த கருத்தை முன்வைத்தார். முஸ்லிம்களின் ஒற்றுமையின் அவசியத்தை அவர்கள் இழந்திருக்கின்ற உரிமைகளை அடிப்படையாகச் சுட்டிக்காட்டி மக்களை மிகவும் உணர்வுப+ர்வமாக ஒன்றுபடுத்தினார். மக்கள் இது எமது கட்சி இந்தக்கட்சியின் மூலம்தான் எமது உரிமைகளைப் பெறமுடியும் என்று மிகத் தீவிரமாக ஒன்று திரண்டனர். அவரால் மக்கள் மிகவும் கவரப்பட்டனர். இந்த அடிப்படையில் 1987ல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் பிரதேசங்களில் மிகக் கூடிய வெற்றியைப்பெற்றது. அதில் சம்மாந்துறையில் இருந்த இரு உறுப்பினர்களில் ஒருவர் ஜனாப் ஆ.ணு. முனாஸ்காரியப்பர், மற்றையவர் ஆ.லு.ஆ. மன்சூர். இவர் பின்னர் டுவுவுநு யினரால் சுடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டார். இன்று வரை இவரது உடல் கிடைக்கவில்லை. இவர்களும் தங்களாலான பங்களிப்பை மாகாணசபை ஆட்சியின் போது செய்தனர் என்பது திருப்திப்படக்கூடியதே.
இந்த வழியில் 1989ம் ஆண்டு முதன்முதல் பாராளுமன்றத் தேர்தல், தொகுதி முறையின்றி மாவட்ட அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவ ரீதியாக நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு மிகக் கூடிய வாக்குகளைப் பெற்ற போதும் முன்பிருந்த பெரும்பான்மைக் கட்சிகளைச் சார்ந்த தனிப்பட்ட செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் பிரிவினையினால் 1341 வாக்குகளினால் மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இழந்து ஒரு உறுப்பினர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டார். அந்த உறுப்பினர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களாவார்;. இவர், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்தது என்றாலும் பாராளுமன்றத்தில் இவரது உரை காத்திரமாக அமைந்தது. முழுப் பாராளுமன்றத்தையும் இவர் தமது ஆளுமை மூலம் கைக் கொண்டிருந்தார் என்றே கூறலாம். தினமும் வானொலியிலே பாராளுமன்றத்தின் இன்று என்ற நிகழ்ச்சியைக் கேட்பதில் முஸ்லிம் மக்கள் மிகத் திருப்தியினைப் பெற்றிருந்தனர். இக்காலத்தில் கட்சி மிகக் கூடிய வளர்ச்சியைப் பெற்றது. இவர் 1994 மார்ச் மாதம் நடைபெற்ற பிரதேசசபைத் தேர்தலில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவ+ர், அட்டாளச்சேனை, அக்கறைப்பற்று, பொத்துவில் ஆகிய ஆறு பிரதேச சபைகளில் ஒன்றைத் தேற்றால் கூட எனது பாராளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்வேன் எனச்சபதமிட்டார். அன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் மிகக் கூடிய போட்டி நிலவிய காலம். ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்ர்களாக இருந்த இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் மிகப்பலமான எதிர்ப்பைக் காட்டினர். இதனாலேயே இச்சபதத்தைச் செய்தார். ஈற்றில் நிந்தவ+ர் 150 வாக்குகளாலும், பொத்துவில் 530 வாக்குகளாலும் தோல்வியுற்றது. இதனால் உடனடியாகத் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து அடுத்த வாக்கினைப் பெற்றிருந்த ரு.டு.ஆ. முகைதீன் அவர்களுக்கு அதனை வழங்கினார். இதன் மூலம் அவரது வாக்குறுதியின் உண்மைத் தன்மை முழு உலகுக்கும் எடுத்துக் காட்டக்கூடியதாக இருந்தது.

பின்பு 1994 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதே போல இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒருவர் தலைவர் அஷ்ரப் அவர்கள் மற்றவர் சட்டத்தரணி ரு.டு.ஆ. முகைதீன் அவர்கள். இந்த பாராளுமன்றத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அமைச்சரவையில் மிக முக்கியமான கப்பல் துறை துறைமுகங்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வ புனரமைப்பு அமைச்சராக நியமனம் பெற்றார். அன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பாராளுமன்றத்தை அமைப்பதற்கு உதவியது, அது இல்லாவிட்டால் தமது பெரும்பான்மையை இழந்து விடும் நிலை இருந்தது. அத்துடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கும் அஷ்ரப் அவர்களும் ளுடுஆஊ யும் மிகக்கூடிய உதவியைச் செய்தது. இவைகளால் அன்று அஷ்ரப் ஜனாதிபதியால் மிகவும் மதிக்கப்ட்டார்.

இவரது காலத்தில் மிகக் கூடிய இளைஞர்களுக்குத் துறைமுகத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் பல துறைகளில் முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமன்றி தமிழர் சிங்களவர்களும் வேலைவாய்ப்பினைப் பெற்றனர். இக்காலத்தில் ஒலுவில் துறைமுகத்திட்டம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், கல்முனை தெற்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகாபொல பயிற்சிநிலையம் என்பவற்றையும் மேலும் பல பாடசாலைகள் வைத்தியசாலைகள் என்பவற்றுக்கு பலமாடிக்கட்டிடங்கள் போன்றவற்றையும் செய்ததுடன் கட்சி அரசியலின் கட்டாயத்தையும் ஸ்திரத்தன்மையையும் வலியுறுத்தி வந்தார். இவருக்குப்பின் சுயேச்சையாக ஒருவர் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத ஒரு சூழ்நிலை எற்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யு.ஆ.நௌசாட் அவர்கள் மிகப் பெரிய அரசியல் பின்னணியுடனும் பல ஊர்களின் பங்கு பற்றுதலுடனும் போட்டியிட்ட போதும் கூட வெற்றிபெற முடியாமற் போய்விட்டது என்பதைக் குறிப்பிடலாம். மேலும் அஷ்ரப் அவர்கள் மக்கள் பாதிக்கப்டுவதை மிகவும் விசனத்துடன் எதிர்த்து வந்தார். இதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நட்டயீடு வழங்கினார். புனர்வாழ்வு அமைச்சின் மூலம் பல தமிழ் முஸ்லிம் கிராமங்களை மீளமைப்புச் செய்தார். இதில் சம்மாந்துறை ஹிஜ்ராபுரம் ஒன்றாகும். இவர் அரசியல் சட்டம் போன்றவற்றில் உயர்ந்து விளங்கியது போல இலக்கியத்திலும் சிறந்து விளங்கினார். “நான் எனும் நீ” என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு வைத்தார். இது 600 பக்கங்களைக் கொண்டிருந்தது. இப்படிப் பல்வேறு கோணங்களில் தமது ஆளுமையை நிலை நிறுத்தி நாட்டின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் சக்தியாக வந்த போது அவர் 2000 ம் ஆண்டு செப்டம்பர் 16 ம் திகதி கொலை செய்யப்பட்டார். இதனால் முழு நாடுமே அழுதது. குறி;ப்பாக முஸ்லிம் சமூகம் தமது அரசியல் அந்தஸ்தை இழந்தது என்றே கூற முடியும்.

ரு.டு.ஆ. முகைதீன்
சம்மாந்துறையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹ{ம் ரு.டு.ஆ. முகைதீன் அவர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களுடனேயே பாராளுமன்றத்தில் இருந்தார்.இவர் தனது பாராளுமன்றப் பணியை மிகச் சிறப்பாகச் செய்தார் என்று அஷ்ரப் அவர்களே புகழ்ந்து கூறியுள்ளார். முஸ்லிம்களின் அடையாளமான துருக்கித் தொப்பியுடன் கோட்டும் சூட்டுமாக பாராளுமன்றம் செல்வார். இவரது தோற்றமும் உடையும் இவருக்கு ஒரு கௌரவத்தை அளித்தது. எல்லோரும் செல்லமாக இவரை “தொப்பி முகைதீன”; என்றே அழைத்தார்கள். அது இவரின் காரணப் புனைப் பெயராக இன்று வரை திகழ்கிறது. தொப்பி முகைதீன் என்றால் முழு நாடுமே அறியும். நீதிபதி அப்துல் காதர், அறிஞர் சித்தி லெப்பை, சேர் றாசீக் பரீட் போன்றவர்களின் பின், துருக்கித் தொப்பியை இவர் மிகவும் கவனமாகப் பேணி வந்தார். நீதிமன்றம், பாராளுமன்றம் போன்றவற்றுக்கு மட்டுமன்றி அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் அந்தத் தொப்பியுடனேயே காட்சியளித்தார். இலங்கையில் துருக்கித்தொப்பி அணிந்த கடைசி மனிதர் இவர் என்று கூறலாம். அதன் பின் வேறு யாரும் இவ்வாறு தோற்றமளிக்கவில்லை என்றே கூற வேண்டும். இவர் வரலாற்று நிகழ்வுகளுடனும் தலைவர்களடனும் மிகக் கூடிய தொடர்பை வைத்திருந்தது மட்டுமன்றி அவர்களின் கொள்கைகள் மீதும் மிகக் கூடிய பற்றுடையவராகக் காணப்பட்டார்.
இவர் நீண்ட காலமாக இடதுசாரிக் கொள்கையின் பிடிப்புடன் காணப்பட்டாலும் 1956ம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தீவிர உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார். இது இவர் டாக்டர் பதியுதீன் மஃமூத் அவர்களுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவின் காரணமாக இருக்கலாம். இவர் சட்டக் கல்லூரியில் பயிலும் போதே பல பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். தனது அரசியல் அறிமுகத்தை வைத்துப் பலருக்கு ஆசிரிய நியமனங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக று.று. தஹநாயக்க கல்வி அமைச்சராக இருந்த போது பலருக்கு ஆசிரிய நியமனங்களைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். பின் ஊர் வந்து சட்டத்தரணியாகத் தொழில் புரியும் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளராகவும் இருந்து அக் கட்சியை இப்பிரதேசத்தில் பிரபல்யப்படுத்தினார். பல்வேறு தேர்தல்களிலும் அவரும் ஏனையவர்களும் நின்று போட்டியிட்ட போதிலும் வெற்றி பெறமுடியாமற் போய்விட்டது.
1947 ல் மல்வத்தை கமநல சேவை மத்திய நிலையத்தின் தலைவராக இருந்து யுPஊ கட்டிடத்தை அமைத்தார். அக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்தமையால் கல்வியமைச்சரும் அவரது நண்பருமான பதியுதீன் அவர்கள் மூலம் சம்மாந்துறைத் தொழில்நுட்பக் கல்லூரியைத் திறந்து வைக்க மிகவும் பிரயத்தனமெடுத்து ஆரம்பித்து வைத்தார். அன்றைய பராளுமன்ற உறுப்பினரான அப்துல் மஜீத் அவர்களும் இதற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். 1989ல் நடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டார். இதில் மர்ஹ{ம் ஆ.ர்.ஆ அஷ்ரப், சேகுஇஸ்ஸதீன் ஆகியோருக்கு அடுத்த வாக்கினைப் பெற்றார். ஆனால் 615 வாக்குகள் குறைந்தமையால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று உறுப்பினர்களை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதில் அஷ்ரப் மட்டுமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.அதனால் முகைதீன் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. ஆனால் 1994ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு முஸ்லிம் பிரதேச சபைகளும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்டால் நான் ராஜினாமாச் செய்வேன் என்று அஷ்ரப் சூழுரைத்திருந்தார். அதில் நிந்தவ+ர், பொத்துவில் ஆகிய இரு சபைகளும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசயத்தில் தோல்வி கண்டன. இதனால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டார். இரண்டாவது வாக்கைப் பெற்றிருந்த சேகு இஸ்ஸதீன் தலைவருடன் முரண்பட்டு கட்சிமாறியிருந்தமையால் அடுத்த வாக்குப் பெற்றிருந்த முகைதீன் பாராளுமன்ற உறுப்பினரானார். அடுத்து 1994ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமையால் இரண்டாவது தெரிவு வாக்கைப் பெற்ற ரு.டு.ஆ. முகைதீன் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இக்காலப் பகுதியிலேயே சந்திரிக்கா அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தது. சமூர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் முழுவதும் இவரது காலப் பகுதியிலே வழங்கப்பட்டது. மேலும் துறைமுகத்துக்கான ஊழியர்கள் நியமனமும் தலைவர் அஷ்ரப் மூலமாக வழங்கப்பட்ட போது இவர் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். மேலும் இவரது காலத்தில் சம்மாந்துறைப் பிரதான வீதி விஸ்தரிப்பும், மணிக்கூட்டுக்; கோபுர அமைப்பும், பௌசி மாவத்தை, முகைதீன் மாவத்தை என்பவற்றைச் சிறப்பாக அமைத்ததன் மூலம் சம்மாந்துறையின் குடியேற்றப் பிரதேசம் நகரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சம்மாந்துறை வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டிடம் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்தவரும் இவரது நெருங்கிய நண்பருமான யு.ர்.ஆ.பௌசி மூலம் அமைத்தது சிறப்பம்சமாகும். ‘கொலி சென்றர்’ என்ற விவசாய நிலையக் கட்டிடம், பஸ்டிப்போ என்பவற்றையும் மிக நீண்டகாலமாக விவசாயிகள் நீரப்;;பாசனத்துக்கு ஆறுகள் தோண்டப்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தமையை உணர்ந்து பலகோடி ரூபா செலவில் ஆறுகளையும் தோண்டுவித்தார். கல்முனைக் கல்வி நிலையம் இரண்டாகப் பிரித்து வலயக் கல்வி வலயம் அமைய இருந்தது. அவரின் விடாமுயற்சியாலும் சாதுரியத்தாலும் மூன்றாகப் பிரித்து சம்மாந்துறைக்கும் ஒரு கல்வி வலயம் ஏற்படுத்தியமை மிக்க நினைவு கூறத்தக்கதாகும். பின் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நுவாக் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சுமுகமான அமைதியான ஒரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்க பகீரதப் பிரயத்தனம் செய்தும் அவரது உறவினர்கள் விட்டுக் கொடுக்காமையால் அவரால் அதனை அடைய முடியவில்லை. இறுதியாக 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி இறையடி எய்தினார்.

ஆ.ஐ. அன்வர் இஸ்மாயில்
ரு.டு.ஆ. முகைதீன் அவர்களின் தோல்வியின் பின் 2000ம் ஆண்டு தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானார். இவர் தலைவர் அஷ்ரப் அவர்களால் வளர்க்கப்பட்டமையால் அவரின் சாணக்கியமும், அரசியல் அறிவும் கைவரப்பெற்றிருந்தார். மிகவும் இளைஞரான இவர் மிகப் பெரிய பொறுப்புக்களைச் சுமந்ததுடன் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தினார். மிக விரைவில் ஆட்சியாளர்களுடன் இணைந்து பிரதி அமைச்சரானார். தன்னையும், தன்னுடன் சேர்ந்தவர்களையும் நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்ற பேரவாக் கொண்டவர். சம்மாந்துறை மிக அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவராவார்.
சம்மாந்துறை ஹிஜ்றாச் சந்தியில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடம் மிக அழகாகக் கட்டப்பட்டது. ஊரின் இருபுறமும் வரவேற்பு வளைவுகள், ஜம்யத்துல் உலமாவுக்கான கலாச்சாரக் கட்டிடம் என்பவற்றை அமைத்து பிரமிக்கத்தக்க வகையில் அழகுபடுத்தும் அவாவும் ஆற்றலும் மிக்கவராக காணப்பட்டார். சம்மாந்துறையின் பள்ளிவாசல்களில் சிலவற்றை அபிவிருத்தி செய்வதில் கூடிய கவனம் செலுத்தி வந்தார். இதுவும் ஊரின் அழகை மேலும் அழகுபடுத்துவதுடன் மக்களின் ஆத்மீக மேம்பாட்டுத் திருப்தியினையும் தோற்றுவித்தது. வீதி அபிவிருத்தி வேலைகள் விடுபட்டிருந்ததை தூண்டி செயற்படுத்தினார். லத்தீப் சேமன் வித்தியாலயம், இஸ்மாயில் வித்தியாலயம் போன்ற புதிய பாடசாலைகளை உருவாக்கி அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவினார். விவசாய உற்பத்தியை உயர்த்தும் பொருட்டு ஆறுகளை ஆழத் தோண்டுதல், அணைக்கட்டுகளைச் சீர் செய்தல், விவசாயப் பாதைகளை அமைத்தல் என்பவற்றில் கவனம் செலுத்தினார். குறிப்பாக வீரயடி அணைக்கட்டு, உடங்கா அணைக்கட்டு மோறாவில் அணக்கட்டு என்பவற்றை புதிதாக அமைத்துள்ளார். மேலும் நெய்னாகாடு குடிலில் பாதையை மிகக் கூடிய பணச் செலவில் செப்பனிடவும் அப்பாதையில் அமைந்துள்ள திராஓடை, விசாரை வாய்க்கால், சாவாறு என்பவற்றில் நவீனமான மிகப்பிரமாண்டமான பாலங்களைப் பாடுபட்டமைத்து மக்களின் போக்குவரத்து வசதியை மிகவும் இலகுபடுத்தியுள்ளார். இதனால் விவசாயிகள் மட்டுமன்றி செங்கல் உற்பத்தியாளர்களும் பயன்பெறுகின்றனர்.
சம்மாந்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனாதிபதி கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறைக்கான கட்டிடத் தொகுதியொன்றையும் நிர்மாணித்துள்ளார். தலைவர் அஷ்ரப் உருவாக்கிய தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய அறபுக் கற்கை பீடமொன்றை உருவாக்க உழைத்தார். அதே போல விவசாய பீடத்தை உருவாக்கவும் திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். அது இன்னும் கைகூடவில்லை. அவர் பெற்றுள்ள நீர்ப் பாசனத்திட்ட அமைச்சுப் பதவி இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பட வேண்டும் என்ற நோக்குடன் இப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கல்முனைக்குச்; சென்றே தமது நீர்ப்பாசன பொறியியலாளரைச் சந்தித்து வந்தனர். அதனைச் சம்மாந்துறை பிரதேசத்திற்கும் ஒன்றாகப் பிரித்து சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் திறந்து வைத்ததன் மூலம் விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாகக் கொண்ட மக்களுக்கு காலடியில் நீர்ப்பாசன நிர்வாகத்தை கொண்டு வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.
மேலும் கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் 55 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனைப் புனரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக 300 மில்லியன் ரூபா செலவில் ஒரு திட்டத்தை வகுத்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் பெற்றுள்ளார். இதனால் இம்மாவட்டத்தின் அனைத்து மக்களும் பயன்பெற வாய்ப்பிருந்தது. இவர் மேலும் பல சேவைகளைச் செய்யவும் எண்ணியிருந்தார்;. துரதிஸ்டவசமாக 14.09.2007 ந் திகதி இறையடி சேர்ந்தார்.

உள்ளுராட்சியின் பெயர்ச்சியும் அதிகாரமும்
1925ம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய தேசாதிபதியினால் உள்ளுர் நிர்வாக முறைமைக்கு ஒரு ஒழுங்கு மேற்கொள்ளப்ட்டது. முன்பிருந்த ஊர்மட்ட அதிகார சபையுடன் அவரால் நியமிக்கப்பட்ட ஓரிருவர் சில பணிகளை செய்வதற்காக அமர்த்தப்பட்டனர். இது டழஉயட டிழயசன ஊராட்சி சபை என அழைக்கப்பட்டது. இதன் மூலம் தெருக்களையும் பாதைகளையும் துப்பரவாக வைத்திருத்தல், நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இக்காலத்தில் மலேரியா மிக மோசமாக மக்களை தாக்குவதனையும் நுளம்பின் மூலம் இது பரப்பப்படுகின்றது என்பதனையும் அறிந்திருந்தனர். சிறு பாலங்களை அமைப்பதுடன் பதைகளை ஏற்படுத்தி செப்பனிடல், இரவு நேரங்களில் மக்களின் வசதிக்காக தெருவிளக்குகளை ஏற்படுத்துதல், ஊரின் குப்பைகூழங்களை அப்புறப்படுத்துதல்,சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இச்சபை செய்துள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்படாது தேசாதிபதியால் நியமிக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு விதமான ஊரின் முக்கியஷ்தர்களாக இருந்தனர். 1931ம் ஆண்டைத் தொடர்ந்து டொனமூர் சீர்திருத்த்தின் பின் இதனுடைய அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. அன்று மட்டக்களப்பு கோட்டைதான் கச்சேரியாக தொழிற்பட்டதாகவும் அங்கிருக்கும் அரச அதிபர் (புயு) தான் இவர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த சபை சுகாதார சபை எனப்பட்டது. (ளுயுNஐவுயுசுஐ டீழுயுசுனு) இச்சபைக்கு தேசாதிபதி கொடையாக வருடந்தோறும் குறி;ப்பிட்ட தொகைப்பணம் வழங்கினார். அவர்கள் இப்பணத்தின் மூலம் மேற்கூறிய பலசேவைகளையும் செய்து வந்தனர்.
பிரதி நிதிகள்தான் ஊரின் முக்கிய பணிகளை மேற்கொண்டனர். ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றுதல், வீதிகளை அமைத்தல், தெருவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தனர். இது அரசாங்கம் சார்பாக அரச அதிபர் ஒதுக்குகின்ற நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இக்காலத்தில் இச்சபை எந்தவித வருமானத்தையும் ஈட்டக்கூடியதாக இருக்கவில்லை. எமதூரைப் பொறுத்தவரை முகம்மது உடையார் முகைதீன் பாபா போடி என்பவர் பிரதிநிதியாக இருந்து செயற்பட்டுள்ளார். இதே காலப் பகுதியில் ஊரின் உள்ளுராட்சி வேலைகள் சில மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. பாதைகள் செப்பனிடுதல், பாலம் அமைத்தல் என்பன ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளும் அமைப்பொன்று இக்காலப் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது எனக்கூறலாம். 1950 ம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கும் வரை கரையோரப் பாதையான மட்டக்களப்பு பொத்துவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. சம்மாந்துறைக்கான போக்குவரத்து தொடர்புகளும் பாதைகளும் போதியதாக இருக்கவில்லை. மட்டக்களப்பில் அமைந்திருந்த கச்சேரி, பிரதான பாடசாலை, நீதிமன்றம் என்பவை போன்ற வேறு பலவுமான கருமங்களுக்குச் செல்லும் பயணிகள் சம்மாந்துறையில் இருந்து காரைதீவு வரை கரத்தையில் அல்லது நடந்தே சென்று அங்கிருந்துபஸ் வண்டியில் பிரயாணம் செய்தனர்.
இதன் பின் 1947ம் ஆண்டு உள்ளுராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது கிராம சபைகளும், நகர சபைகளும், மாநகரசபைகளும் என வகை;படுத்தப்பட்டன. அதில் இப்பிரதேசத்தில் கல்முனையும் சம்மாந்துறையும் மட்டுமே பட்டினசபையாக அமைக்கப்பட்டன. ஏனைய நிந்தவூர்பற்று, கரைவாகுப்பற்று வடக்கு, கரைவாகுப்பற்று தெற்கு, அக்கறைப்பற்று எனப்படும் கிராம சபைகளும் தோற்றுவிக்கப்பட்டன. அன்றைய சம்மாந்துறை பட்டின சபை ஐந்து வட்டாரமாக பிரிக்கப்பட்டு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 1947ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பட்டின சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் யூ.எம். சுலைமாலெவ்வை (யூ.எல். எம். முகைதீன் அவர்களின் மாமனார்) அவர்களைக் தலைவராகக் கொண்டு இயங்கியது இக்காலத்தில் மக்களிடம் சோலை வரி அறவிடப்பட்டது. அந்த வரிப்பணம், சந்தையைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் பெறப்படும் பணம் - இவற்றைக் கொண்டு அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வந்தனர். அதன் பின் 1950ல் நடைபெற்ற தேர்தலில் ஆரு உதுமாலெவ்வை தலைவராக இருந்து 1952 வரை சேவையாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் இடம், காரியாலயம், தளபாடம், ஊழியர் என்பனவற்றை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்துவதிலேயே தமது காலத்தை முடித்துக் கொண்டனர். இதன் பின் 1953ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் ஆஐயு லத்தீப் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது காலத்தில் பட்டினசபைக் காரியாலயக் கட்டிடம் கட்டப்பட்டது. சம்மாந்துறைக்கான மின்சாரமும் இவரது காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. அதற்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் யு.ஆ. மேர்சா அவர்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினார். பட்டின சபையின் கூட்டங்களும் விதிமுறைகளும் இவர்களது காலத்திலேயே பின்பற்றப்பட்டது எனக் கூறலாம்.
1956ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆ.யு.அப்துல் மஜீட் டீ.யு அவர்கள் பேட்டியிட்டு ஆ.ளு. காரியப்பர் வெற்றி பெற, அதன் பின் நடைபெற்ற பட்டினசபைத் தேர்தலில் வெற்றிபெற்று தலைவராகத் தெரிவானார். இவர் 1960ம் ஆண்டு தேர்தல் வரை தலைவராக இருந்து சேவையாற்றினார். இவர் பல்கலைக் கழக பட்டதாரியாக கல்வி கற்றிருந்தார். இளைஞர், புரட்சிகரமான சிந்தனையுடையவராக காணப்பட்டமையினாலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதனாலும் பல வேலைகளைச் சிறப்பாகச் செய்து வந்தார். இவரது காலத்தில் மிகக் கூடுதலாக சம்மாந்துறையின் குடிநீர்ப் பிரச்சினைக்குப் போதியளவு திட்டங்கள் தீட்டியதுடன் பல குடிநீர்க் கிணறுகளை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெறலானார். இவர் தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களின் உறவைப் பெரிதும் கட்டியெழுப்பினார் என்றே கூற வேண்டும். இதன் பின் 1960 முதல் பாராளமன்றத்துக்கு ஒரு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1961ம் ஆண்டு நடைபெற்ற பட்டின சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆ.யு. அமீர்அலி அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
உள்ளுராட்சியின் பெயர்ச்சியும் அதிகாரமும்
இவர் 1968ம் ஆண்டு வரை இரு தேர்தல்களில் வெற்றி பெற்றுத்; தலைவராகச் சேவையாற்றினார். இவரது காலத்தில் சம்மாந்துறைப் பிரதேசம் பெரிதும் வளர்ச்சியடைந்ததென்றே கூறவேண்டும். குறிப்பாக வீதிகளைத் திருத்தியமைத்தல், வீதிகளைப் பெரிதாக்குதல், சம்மாந்துறையின் உள்வீதிகள் கூடப்போதியளவு பெரிதாகக் காணப்படுவதற்கு பலரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பாதைகள் விஸ்தரிப்பு வேலைகளைச் செய்தார். மேலும் பல பகுதிகளில் வடிகான்களை அமைத்தார். உள்ளுராட்சி சபையின் அதிகாரத்தைப் பூரணமாகப் பயன்னடுத்தினார் என்றே கூறவேண்டும். முக்கியமாகக் கல்வியின் மீது மிக்க அக்கறை கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் வாசிகசாலைகளைப் பல பகுதிகளிலும் ஏற்படுத்தினார். சம்மாந்துறைக்கென சிறந்த ஒரு வாசிகசாலையை அமைக்க வேண்டும் எனப்பாடுபட்டு அதற்கென நிலத்தையும் பெற்று மிக அமைதியான சூழ்நிலையில் இன்று அமீர்அலி நூலகம் என்ற பெயரில் இயங்கி வருவது நாம் எல்லோரும் சந்தோசப்படக் கூடிய விடயமாகும். மேலும் அரசியல் குழப்பநிலை காரணமாக 1968ம் ஆண்டுக்குப் பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறாமல் விஷேட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். 19-01-1969 முதல் 28-02-1970 வரை அன்ரன் அல்பிரட் என்ற உதவி உள்ளுராட்சி ஆணையாளர் விஷேட ஆணையாளராக கடமையாற்றினார். பின் 20-09-1970 முதல் 08-08-1977 வரை எம்.ஏ. அமீர்அலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்;. அக் காலத்திலும் மிகக் கூடிய சேவையாற்றினார்.
புpன் குறிப்பிடப்படுவோரும் இவ்வூரின் விஷேட ஆணையாளர்களாக கடமையாற்றினர்.

திரு ஏ.P.சற்குணராஜா 09-08-1977 – 07-11-1977
திரு மு.துரைராஜா(யு.பு.யு.சம்மாந்துறை நடை பெற்றது) 09-11-1977 – 17-05-1979
ஜனாப் யு.ளு.ஆ. ஆரிப் 18-05-1979 – 16-09-1979
ஜனாப் ஆ.யு.ஆ. மேர்சா 17-09-1979 – 30-06-1981
(இவரது காலத்திலேயே ஹிஜ்றா சந்தி வீட்டுத் திட்டம்)
மாவட்ட அபிவிருத்திச்சபை 01-07-1981 – 06-09-1981
திரு யு. விக்னராஜா 07-09-1981 – 31-12-1982
ஜனாப் வு.யு. ஜாயா 01-01-1983 – 31-12-1987

01-10-1988 முதல் பிரதேச சபைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேசசபையாக பிரகடனப்படுத்தப்பட்டு சம்மாந்துறைப் பிரதேசசபை, சம்மாந்துறைப் பட்டினசபை, சம்மாந்துறைக் கிராமசபை, மல்வத்தைக் கிராமசபை, நாவிதன்வெளி கிராமசபை, இறக்காமம் கிராமசபை ஆகியவற்றை ஒன்றிணைத்ததாக காணப்பட்டாலும் 1988ல் நடைபெற இருந்த தேர்தல் உள்நாட்டு யுத்தம் காரணமாக நடைபெறவில்லை. இது 1994ம் ஆண்டு முதன் முறையாக நடைபெற்றது. 01-03-1994ம் ஆண்டு நடைபெற்ற சம்மாந்துறைப் பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றி ரு.டு.ஆ. முகைதீன் தலைவராகவும் ஐ.ஆ.இப்றாகீம் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். ரு.டு.ஆ. முகைதீன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 01-06-1994 முதல் ராஜினாமாச் செய்து ஐ.ஆ. இப்றாகீம் தலைவராகப் பதவி ஏற்றார். இக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மரஹ_ம் ஆ.ர்.ஆ. அஷ்ரப் அவர்கள் அரசாங்கத்தின் பங்காளியாகவும் துறைமுகங்கள் புனரமைப்பு புனருத்தாபன அமைச்சராகவும் இருந்தமையையும் பயன்படுத்தி ஹிஜ்ராபுரம், மல்வத்தை, வளத்தாப்பிட்டி ஆகிய மாதிரிக் கிராமங்களை அமைத்ததன் மூலம் வீடுகளைக் கட்டி வழங்குதல், பாதை, மின்சாரம், சுகாதரம் போன்ற பல்வேறு பணிகளில் மிகச்சிறப்பாக ஈடுபட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. முக்கியமாக இக்காலத்திலேயே சம்மாந்துறையின் குடிநீர்ப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. பல விவசாயப் பாதைகள் கூட அமைக்கப்பட்டன. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் ஆ.ஐ.ஆ.மன்சூர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இன்று வரைப் பல்வேறு சேவைகளையும் செய்துகொண்டிருக்கின்றார்.


- ஐ.எம். இப்றாஹீம் -

No comments:

Post a Comment