Wednesday, April 3

கிழக்கு மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு


2 கிழக்கு மாகாண ஆளுநர்  அலுவலகத்தில் மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு 02.04.2013ஆம் திகதி செவ்வாய்கிழமை (கிழக்கு )ஆளுநர் ரியல் அட்மிரால் மொஹான் விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.
இக்கையேடானது கிழக்கு மாகாணசபையின் வரலாற்றில் முதல் முதல் நிர்வாக நடைமுறைகள் நீதி நடைமுறைகள் சம்மந்தமாக விசேட அறிவித்தல் நூலொன்றை வெளியிட்டிருக்கின்றோம் இது பாராட்டப்படக் கூடிய விடயம் எனவும்  “ கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிர்வாகத்தை செம்மையாக நடைமுறைப்படுத்த செயல்படுத்த உதவும் எனவும் நம்புகிறேன் ” என ஆளுநர் கூறினார்.
மேலும் இலங்கையில் இது மூன்றாவது வெளியீடு எனக் குறிப்பிட்டவர் ஏற்கனவே சப்பிரகமுவ, மேல்மாகாணங்களில் இவ்வகையான கையேடு வெளியிடிட்ருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
“ இதற்கு முன் இந்த நீதி நிர்வாக நடைமுறைகள் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தெரியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை மாகாணத்தில் அனுபவித்து இருக்கிறோம் ஆசிரிய நியமனம் ஏனைய நியமனங்கள், பதவியுயர்வுகள், விசாரனைகள் சம்மந்தமாக பல்வேறு பிரச்சினைகள் அனுபவிக்கவேண்டியிருந்தது ”

நடைமுறைகளிலும் சிறந்தாக செயற்படுகின்றது. 7வருடங்களுக்கு மேல் கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக கடைமையாற்றிய நான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளேன். 13ஆவது திருத்தச் சட்டம் பல முறைப்பாடு கொண்டதெனக் கூறப்பட்டபோதும் அதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது என்பதே உண்மை. சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளை நியமிக்கும் போது, பதவி உயர்வு வழங்கும் போது பல சட்டப் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியுள்ளது. இவை இனிமேல் இக்கையேட்டு வழக்கத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.
மாகாணத்துக்கு தேவையான ஆசிரியர் நியமனம், அதிபர் நியமனம் ஏனைய உத்தியோகத்தர் நியமனங்களை இந்ந மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் மூவினத்தையம் கருத்தில் கொண்டு வந்திருக்கின்றேன் என்றார். இதில் ஆளுநர் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், பிரதம செயலாளர் சரத் அபயகுணவர;த்தன மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2 1

No comments:

Post a Comment