Saturday, April 6

நிந்தவூரில் நெனசல அறிவகம் திறப்பு (படங்கள் இணைப்பு)




ஜனாதிபதி செயலக  அனுசரணையுடனும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக இன்று (06.04.2013) நிந்தவூரில் நெனசல அறிவகம் திறந்து வைக்கப்பட்டது.  ஐ எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ்  எம்.ரீ. ஹஸன் அலி, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி றிபா உம்மா அப்துல் ஜலில், நிந்தவூர்  கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.எம். சலீம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப்பிராந்திய  நிருவாக உத்தியோகத்தர் எ எல் சித்தீக் மற்றும் நிந்தவூர் அல் மதீனா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எஸ் அகமது மற்றும் அமைப்பின் தவிசாளர் ஊடகவியலாளர் புஹாது  மற்றும் பயனாளிகளின் பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர். 
 
நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 வறிய மாணவர்களுக்கு கணணிக் கல்வியை இலவசமாக தொடர்வதற்கான அனுமதிப்பத்திரங்களும் பெற்றோர்களுக்கு அதிதிகளால் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment