Saturday, April 6

மஹிந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் தலை கீழான பல மாற்றங்கள்- பஷீர் சேகுதாவூத்


???????????????????????????????
மஹிந்த ராஜபக்ஷ அரசு பவிக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தலை கீழான பல பாரிய மாற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
இன்று 05.04.2013 முற்பகல் ஏறாவூர் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஐயாயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
பாடசாலை அதிபர் எஸ். அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,
தூர இடத்திற்கு தொழிலுக்காகச் சென்ற கணவர் உயிருடன் திரும்பி வருவாரா வரமாட்டாரா என்று இப்பொழுது மனைவிமார் ஏங்கிக் கொண்டு இருப்பதில்லை.
வீதியில் குண்டுகள் வெடிப்பதில்லை. யாரும் தரையிலிருந்து விமானத்திற்கு சுடுவதுமில்லை விமானத்திலிருந்து தரையை நோக்கி குண்டுகள் போடப்படுவதுமில்லை.

காலடி எடுத்து வைக்க முடியாதிருந்த தமது ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக வாழ்விடங்களில் எல்லோரும் கால்மிதிக்கிறார்கள்.
கூலிகளாக இருந்த விவசாயிகள் இப்பொழுது தமது காணிகள் மீளக் கிடைத்து விட்டதால் முதலாளிகளாக மாறிவிட்டார்கள்.
கடைகளில் யாரும் கப்பம் கேட்பதில்லை. பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிப் பரிசோதனை செய்த பின்னர் தாங்கள் விரும்பிய நேரத்திற்கு போக்கு வரத்துச் செய்ய மக்களை அனுமதிக்கும் நிலைமை கிடையாது.
ஏனென்றால் நாட்டில் யுத்தமில்லை. மதப்பிரமுகர்களும் மாணவர்களும், சாதாரண பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினரும் கொல்லப்படுவதில்லை.
முப்பது வருடங்களாக இருந்த இத்தகைய நிலைமைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.
இதனைப்பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழுவினர் எதிர்ப் பிரச்சாரத்தை நடவடிக்கைகளாலும் வார்த்தைப் பிரயோகங்களாலும் ஊடகங்களுக்கூடாகவும் செய்து வருகின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கில் கால் நடைகள் கூட கடந்து செல்ல முடியாததாக இருந்தவீதிகள் இப்பொழுது கார்பெட்டாகவும் கொங்கிறீற் வீதிகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நமது பிள்ளைகள் கொழும்புக்குச் சென்று கடைகளில் வேலை செய்கின்றார்கள். சுதந்திரமாகப் பயணிக்கின்றார்கள்.
ஆகவே நாடு முழுவதிலும் ஒரு தலைகீழான சாதகமான பெரிய மாற்றம் வந்திருக்கின்றது.
இன்று இந்த நாட்டில் இருக்கின்ற அமைதியைச் சீர்குலைப்பதற்காக ஒரு பெரிய சக்தி திட்டமிட்டுச் செயற்படுகின்றது.
இந்த அரசாங்கத்தை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி முஸ்லிம்களின் மன நிலையில் நூறு வீதம் அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஓரங் கட்டிவிட நினைக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாணவர்களின் கல்வியிலே பெரியதொரு அபிவிருத்தியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றார்.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னராகவே இலங்கையில் இனங்களுக்கிடையில் பிளவுகள் வளர ஆரம்பித்து விட்டன. ஆங்கிலேயரே பிரிவினையைத் தூண்டினார்கள்.
கல்வியிலும் அதனை உட்புகுத்தினார்கள். மதரீதியான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏற்கெனவே நம்மை அவர்கள் பிரித்துத்தான் வைத்திருக்கின்றார்கள்.
இப்பொழுது புதிது புதிதாக வெளிநாட்டு உதவிகளுடன் இயக்கங்கள் முளைக்கின்றன.
இவர்கள் தங்களுக்கான எதிரிகளைத் தாங்களே கட்டமைக்கின்றார்கள்.
உலகில் எந்தப்பாகத்திலும் பேரினவாதம் அல்லது பெருந்தேசிய வாதம் எதிரிகள் இல்லாமல் வாழ முடியாது. அரசியல் செய்யவும் முடியாது.
அவர்கள் ஜீவித்திருக்க வேண்டுமாக இருந்தால் கட்டாயம் அந்த இடத்தில் எதிராளிகள் இருக்க வேண்டும்.
இயல்பாகவே எதிராளிகள் இல்லையென்றிருந்தால் இந்தப் பேரினவாதிகள் வலிந்து எதிரிகளை உருவாக்குவார்கள். அமைதியாக வாழும் சிறுபான்மைகளை வம்புக்கிழுப்பார்கள்.
தொடர்ந்தும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை இனி சிங்கள மக்களின் எதிரிகளாகக் காட்ட முடியாது.
வெளிநாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களைத்தான் எதிரிகளாகக் காட்ட முடியும்.
ஆகவேதான் இலங்கையிலே வாழ்கின்ற முஸ்லிம்களை இன்னுமொரு எதிரிகளின் கூட்டமாகக் காட்டுவதற்கு பொது பல சேனா போன்ற 26 சிங்கள அமைப்புக்கள் களமிறங்கியிருக்கின்றன.
இவர்கள் கூட்டாகச் சேர்ந்தும் தனித்தனியாகவும் தங்களது செயற்திட்டத்தை இலங்கையிலே விஸ்தரித்திருக்கின்றார்கள்.
‘பொதுப் புத்தியை கிள்ளி விட்டு விஷமத்தனம் புரிபவர்கள்தான் பொது பல சேனா அமைப்பினர்.
இதன் காரணமாக சிங்கள் பேரினவாத பௌத்த கூடாரத்திற்குள் சிங்கள மக்களை ஒதுக்கிக் கொண்டு போக அவர்கள் நினைக்கின்றார்கள்.’
தமது நடவடிக்கைகள் முஸ்லிம் விரோத செயற்பாடு அல்ல என்று இவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தாலும் இல்லாத ஒன்றை அவர்கள் இட்டுக்கட்டி வசைபாடுகிறார்கள், வம்புக்கிழுக்கின்றார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் மிகப் பிரதானமான அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்த நாசகார சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் நிதானமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு நாடு தீப்பற்றி எரிவதிலிருந்து இந்த நாட்டையும் இங்கே வாழ்கின்ற அனைத்து இன மக்களையும் காப்பாற்றியுள்ளது.
ஏனைய மனிதர்களுக்கும் மதங்களுக்கும் கொடுக்கின்ற உயர்வான கண்ணியததை இந்த அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை காப்பாற்றியுள்ளது.
அந்த அமைப்பைக் கூட காறி உமிழ்கின்றார்கள். சூழ்நிலை சமகால நிகழ்வுகளுக்கூடாக முஸ்லிம்களுடைய பொதுப்புத்தியைத் தூண்டிவிடவும் ஆட்கள் வந்துவிட்டார்கள்.
சிறுபான்மை இனங்களின் பொதுப் புத்தியைத் தூண்டி விட்டு அதிலே குளிர்காய நினைப்பவர்களைப் பற்றி சிறுபான்மை இனங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அடிப்படைவாதம் என்று பொது பல சேனா கூறுவது அடிப்படையிலே தவறான விடயம்.
இலங்கையிலே இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற ஒன்று இருந்து எத்தனை குண்டுகள் வெடித்திருக்கின்றன என்றும் எத்தனை பேரை ஆயுதங்களுடன் கைது செய்திருக்கின்றீர்கள் என்றும் இந்த அடிப்படையில்லாத பொது பல சேனாவிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.
தாடியும், தொப்பியும், ஜுப்பாவும், ஹபாயாவும் தான் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடையாளம் என்று நீங்கள் சொன்னால் அது உங்களின் அடி மட்ட முட்டாள்தனம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. என்றார்.
பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
DSC09633 ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

No comments:

Post a Comment