Thursday, April 4

பொதுபல சேனா தடை செய்யப்பட வேண்டும் - கல்முனை மாநகர சபை தீர்மானம்



நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என அரசைக் கோரும் மனுவை கல்முனை மாநகர சபையில் சமர்ப்பித்து எம்.ஐ.பிர்தௌஸ் ஆற்றிய உரை.
மேற்படி பொது பல சேனா என்ற இயக்கம் கடந்த 2012ம் ஆண்டு; மே மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த நாட்டிலுள்ள பௌத்தர்கள் அல்லாத சிறுபான்மை மதங்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலபொல அத்தோஞான சார தேரர் பெருமையாகக் கூறுகின்றார்.
இலங்கை பல் இன மக்கள் வாழ்கின்ற பல இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை இலங்கைப் பிரஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்கின்றோம். 
 
இலங்கையில் பௌத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாகஇந்த நாட்டில் வரலாற்றுரீதியாக வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். மிக நீண்ட 30 வாழ்கின்றார்கள் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். சிறுபான்மையாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் அவரவர் மதப் பிரிவுகளை பின்பற்றிக்கொண்டு ஒற்றுமையாக வருட கால இன வன்முறை, யுத்த வெற்றியின் மூலம் அண்மையில் தான் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
இன்று முஸ்லிம் சிறுபான்மையினர் மேற்படி வன்முறை இயக்கமான பொது பலசேனாவினால் அனுராதபுரம் சிக்கந்தர் சியாரம், தம்புல்ல பள்ளிவாசல் தாக்குதல், கொழும்பு தெஹிவலை, குருனாகல் பகுதிகளில் பல மதரசாக்களின் தாக்குதல், கெடுபிடிகள் என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நின்றுவிடவி;ல்லை. ஹலால் பிரச்சினையை பெரிதுபடுத்தினார்கள்.
இன்று முஸ்லிம்களின் ஈமான் என்னும் நம்பிக்கைகளிலும் கைவைக்க ஆரம்பித்துள்ளார்கள். (எமது முன்னோர்களால்) கூறப்படும் பழமொழியான ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளேயே கடிப்பது) என்ற நடைமுறையை இந்த அமைப்பினர் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதன்மூலம் பௌத்த மறுமலர்ச்சி ஒன்று இங்கு இவர்களால் ஏற்படுத்தப்படலாம் என நினைப்பது முட்டாள்தனமே.
நிச்சயமாக இது இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாத வன்முறைக்கே வழிவகுக்கும். இன்று உலகம் ஒரு கிராமம் 1915,1983ம் ஆண்டைய வன்முறைகளைப்போல் இலங்கையில் மீண்டும் ஒரு வன்முறை உருவானால் இலங்கை நாடு 30வருட யுத்த வெற்றியின் பின் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்க முடியாமல் அரசும், அரசாங்கமும் திண்டாடுவதை நாம் மட்டுமல்ல முழு உலகமுமே அறியும்.
அண்மையில் மிக நீண்டகாலமாக அமுலில் இருந்த ஹலால் விடயத்தை பிரச்சினையாக்கி பெரிதுபடுத்தி, பிழையோ, சரியோ முஸ்லிம்களுக்கு பாதகமான முறையில் அகில இலங்கை உலமா சபை பணிந்து கொடுத்து நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம், சமாதானம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் மக்களின் உயர் சபையான உலமா சபை விட்டுக் கொடுத்து ஒரு தீர்வை வைத்தது.
இன்று வெற்றிக் கழிப்பில் பொது பலசேனா முஸ்லிம் பெண்களின் பர்தா விடயத்தில் தலையிடுவதை எந்தவொரு உலமாவோ உலமா சபையோ தீர்மானிக்க முடியாது. பர்தா விடயம் மாத்திரமல்ல முஸ்லிம்களின் வங்கி முறை, காதிநிதிமன்றம், தொப்பிபோடுதல், தாடிவைத்தல் என்பவற்றிலும் தலையிடுவோம் என்று கூறுகின்றார்கள்.
அண்மையில் கொழும்பு தெமட்டகொட, கோட்டை, வேருவலை போன்ற இடங்களில் காவி உடை அணிந்துகொண்டு பொலிசார் போன்று நாட்டின் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு அனுமதி பெற்ற இறைச்சிக் கடைகளை பரிசோதிக்கும் அளவிற்கு பொலிசார் பார்வையாளர்களாக மாறும் அளவுக்கு இவர்களுக்கு இலங்கையின் சட்டத்தைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்தவர்கள் யார்? இவர்கள் ஒரு சமுகத்தை, மதத்தைப் பார்த்து கேவலமாக பேசுவதற்கு சுதந்திரம் கொடுத்தது யார்? இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவர்கள் இல்லையா?
இவர்களின் தொடச்சியான இந்த நடவடிக்கைகளின் மூலம் நாடு எதிர்காலத்தில் பிளவுபடுவதற்கு வழிவகுக்காதா? இவர்களுக்கு உதவுபவர்கள் யார்? இவர்கள் இந்த நாட்டைச் சீரழிக்கும் பயங்கரவாதிகள் இல்லையா? ஆமாம் இவர்கள் புலிகளைவிட கொடியவர்கள். இத்தாலியில் முசோலினி, ஹிட்லரின் நாசிச கட்சிக்கு ஒப்பானவர்கள்.
இவர்கள் விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், எம். பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்களே உறங்கியது போதும் விழத்தெழுங்கள். மிகவும் தைரியமாக குரல் கொடுக்குமாறு மிகவும் அன்புடன் வேண்டுகிறேன்.
ஆகவே இன்று சர்வதேசங்களும் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இவர்களின் செயற்பாடுகள்  தடையாக இருக்கும் என இச்சபை கருதுகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு பெரிய உள்நாட்டு யுத்தத்திற்கும் இது வழிவகுக்கலாம். இதற்கு அரசின் ஏதாவது இரகசிய உதவிகள் இருந்தால் நிறுத்தப்படவேண்டும். தொடர்ந்தும் பொதுபலசேனா தனது கொள்கைகளை மீள்பரிசீலனை செய்யாதவிடத்து உடனடியாக இவ்வியக்கத்தை நாட்டின் நன்மைகருதி அரசு தடைசெய்யவேண்டும்.
நாட்டின் சட்டத்தை கையில் எடுக்கும் குற்றத்திற்காக இதன் தலைவர், செயலாளர்கள் கைதுசெய்யப்படவேண்டும் எனவும் இச்சபை கோருகின்றது. அத்துடன் இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டம் எனவும் இச்சபை கோருகிறது.
இத்தீர்மானம் ஏகமனதாக கல்முனை மாநகர சபையால் நிறைவேற்றப்ப்ட்டது.

No comments:

Post a Comment