Thursday, April 4

யப்பானிய பிரதித்தூதுவர் – கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு


??????????????????????????????? யப்பானிய பிரதித்தூதுவர்  - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு:கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்கள் நிதியம் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த யப்பான் உதவவுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் அவரின்  முதலமைச்சர் காரியாலயத்தில் 01.04.2013ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக சந்தித்து கலந்துரையாடிய யப்பானிய பிரதித்தூதுவர் கிரோகி இஸுகா மற்றும் அதிகாரிகளும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தின் போது கிழக்குமாகாணத்தில் 1983ஆம் ஆண்டிற்கு பின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மறுவாழ்வு அளிக்கும் முகமாக பெண்கள் நிதியம் ஒன்றை நிறுவி  உதவி புரிவதற்கு  யப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் பிரதித்தூதுவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன. மேற்படி திட்டம் உயர்ந்த நிலையில் வெற்றி கண்டுள்ள நிலையில் எதிர் வரும் காலங்களில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் இப்பயிற்சி நெறியை விரிவுபடுத்தவுள்ளதாக அக்குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் குறிப்பிட்டனர். இக்கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண தவிசாளர் ஆர்யவதி கலபதி, மாகாணசபை செயலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
கிழக்கு மாகாண அமைச்சர்  JICA இணைப்பாளருடன் கலந்துரையாடல்
பஹ்மியூஸூப்: கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டில் கீழ் மூவின மக்கள் வாழும் கிராமங்களை இனங்கண்டு அக்கிராமங்களை JICA திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை நாட்டிற்கான JICA  இணைப்பாளருடன் கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்  எம்.எஸ்.உதுமான்லெப்பை மேற்கொண்டிருந்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 03.04.2013ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது. அம்பாறை மாவட்டத்தின் நான்கு கிராமங்களும் மட்டக்களப்பில் மூன்று கிராமங்களும் திருகோணமலையில் மூன்று கிராமங்களுமாக பத்து கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சார் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எம்.ஐ.ஹியாவூடீன்இ மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
???????????????????????????????
About these ads

No comments:

Post a Comment