Sunday, April 14

கல்முனை செஸ்டோ அமைப்பின் ஒன்றுகூடல்



கல்முனை ஸஹிரியன் கல்வி, சமூக அபிவிருத்தி அமைப்பின் (செஸ்டோ) ஆலோசகர்களுடனான ஒன்றுகூடல் நேற்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்ட்டோரன்டில் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செஸ்டோ அமைப்பின் ஆலோசகர்களான சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், டாக்டர் யூ.எல்.சராப்டீன், கல்முனை நகர வர்த்தக சங்க தலைவர் கே.எம்.ஹாதிம், கல்முனை ஸாஹிறாக் கல்லூயின் முன்னாள் அதிபர் சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி, தொழில் பிரதேசத்தில் ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கான வாகன வசதி இன்று வரை இல்லை என்ற குறையினை நீக்குமுகமான செஸ்டோ அமைப்பின் ஊடாக இவ்வாகனம் கொள்வனவு செய்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயப்பட்டன.
எதிர்காலத்தில் கல்முனை பிரதேசத்தில் நீண்ட கால, குறுகிய கால சமூக நலத்திட்டங்களை மேற்கொள்ளுதல் எனவும் தீர்மானிக்கப்ட்டது.



No comments:

Post a Comment