Wednesday, March 20

முஸ்லிம்களின் காணிகளிலிருந்து கடற் படையினரை விரைவில் வெளியேற்றுவேன் – நஜீப் ஏ மஜீத்


Land-Issue0(முதலமைச்சரின் ஊடகப்பிரிவு)
புல்மோட்டை கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிக்கச்சேரி மூலம்
தெரிவிசெய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ள சகல மக்களுக்கும்
அவர்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக வழங்குவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு கிழக்குமாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


புல்மோட்டை மக்களின் காணிப் பிரச்சினை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான கலந்துரையாடல் முதலமைச்சரின் பணிமனையில் செவ்வாய்க்கிழமை (19.03.2013) மாலை விஷேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு புல்மோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மண்கிண்டிமலை, தேத்தாவாடித்தீவு, வீரந்தீவு, பொன்மலைக்குடா ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அக்கிராமங்களுக்குச் சென்று மீளக்குடியமர முற்பட்டபோது அவர்களுக்கு சொந்தமான காணி, நிலங்களை தமக்கு சொந்தமானதென கடற்படையினர் தெரிவித்ததையடுத்து அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடல்படையினருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

மேலும், கடல்படையினரால் அபகரிக்கப்பட்ட சகல காணி நிலங்களிலிருந்தும் அவர்களை மிகவிரைவில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், ஆர்.எம் அன்வர், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஆதம் பாவா தௌபீக், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கே.கே.ஜீ. விஜயதிலக, குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன், மற்றும் திருகோணமலை மாவட்ட வனவிலங்கு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment