Friday, March 22

கல்லடி புதிய பாலம் மக்கள் பாவனைக்கு : ஜனாதிபதி திறந்து வைத்தார்


மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில், நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோக பூர்வமாக இன்று திறந்து வைத்து  மக்கள் பயன்பாட்டுக்கு கையளித்தார்.

1970 மில்லியன் ரூபா செலவில், 289மீற்றர் நீலமும் 14மீற்றர் அகலமும் கொண்ட, இந்தப் பாலம் ஜனாதிபதியால் இன்று மாலை 4.30 அளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், உட்பட பல பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.


இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.

50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
.

No comments:

Post a Comment