Saturday, March 23

கிழக்கின் பெருமை காத்த கல்முனைக் கல்வி வலய மாணவர்களுக்குப் பாராட்டு


கல்வி அமைச்சு தேசிய ரீதியில் நடாத்திய 'ஆரோக்கியப் புதிர் போட்டியில்' முதலிடம் பெற்று, கிழக்கு மாகாணத்திற்கும், கல்முனைக் கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்த மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு நேற்றைய முதல் நாள் காரைதீவு சன்முகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற,கிழக்கு மாகாண கல்முனை வலய மாணவர்கள் ஐவர்  கல்வி அதிகாரிகளால் பாராட்டி , கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவர்கள்  பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம்,மாகாண மட்டங்களில் வெற்றி பெற்று, இறுதியாக களனி ' சரசவிய சினிமா கலையரங்ககில்' இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 08 மாகாண மாணவர்களையும்  தோற்கடித்து, கிழக்கு மாகாண மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களாலும் அம்மாணவர்கள் நினைவுச் சின்னம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
கிழக்கு மாகாணம் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த கார்மல் பத்திமா கல்லூரி, காரைதீவு இராம கிருஷ்ணமிசன் பெண்கள் கல்லூரி, கல்முனை மஃமூத் பெண்கள் கல்லூரி, நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment