Saturday, March 30

"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் நிந்தவூர் பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி


"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 13 பள்ளிவாசல்களுக்கு சுமார் 48 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டன.
நிந்தவூர் சமூக  சேவை  அபிவிருத்தி நிலையத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி RU அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அல் ஹாஜ் MCM  பைசால் காசிம் அவர்களினால் பள்ளிவாசல்களுக்கான நிதிக்கொடுப்பனவுக்கான ஆவணங்கள்  பள்ளிவாசல் தலைவர்களிடம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளருமான MMM .அன்சார்,   நிந்தவூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.சுல்பிகார் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பள்ளி வாசல்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நிதி வழங்கப்பட்ட பள்ளி வாசல்களின் விபரம்
1. மஸ்ஜிதுல் அப்ரார், 
2.ஹக், 
3.மினன் 
4.முத்தகீன், 
5.புர்கான், 
6.ஹிதாயா, 
7.ரஹுமானியா, 
8.நூர், 
9.ரஹ்மான் 
ஜும்மா பள்ளிவாசல்கலான  
10.பிர்தௌஸ்,  
11.அட்டப்பளம் ஹுதா 
மற்றும் அரபுக்கலாசாலைகளான 
12.உபைப் இப்னு கஅப் மற்றும் 
13.பாத்திமா பெண்கள் அரபுக்கலாசாலை 
( நிதி வழங்கப்பட்ட பள்ளி வாசல்கள்  அனைத்தும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயட்படுதப்படுவதாக செயலாளர் MAM றசீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment