Tuesday, March 26

கல்முனை சாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடல்



ZCK2கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற வைத்தியர்களின் ஒன்றுகூடல் வார இறுதியில் கொழும்பில் இடம்பெற்றது.
கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடலில் கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்று தற்போது கொழும்பில் வைத்தியர்களாக கடமையாற்றுபவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 15 வைத்தியர் கலந்துகொண்ட இந்த ஒன்றுகூடலின்போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் வைத்தியத்தர்களின் அரங்கமொன்றும் இதன்போது உருவாக்கப்பட்டது.

கல்முனை சாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற தொழில் வாண்மையானவர்களுடனான ஒன்றுகூடலினை கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது. இதன் முதற் கட்டமாகவே வைத்தியர்களுடனான ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இதுபோன்ற ஒன்றுகூடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
து.

ZCK1ZCK3
ZCK2

No comments:

Post a Comment