Wednesday, May 22

சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை முதல்வரினால் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு!


 
 
 
 
 
 
 
 
 
 
 
சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

அல்-கமறூன் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியின் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் அதிபரினால் வித்தியாலயத்தின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அம்மகஜரிக்கேற்பவே குறித்த ஒலிபெருக்கி சாதனங்கள் முதல்வரினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் புலமைப் பரிசில் பரீட்சையில் 70ற்கும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர முதல்வரின் சேவையினைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்து வாழ்த்துப் பாவும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கல்முனை கல்வி வலயத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம் அவர்களினை வரவேற்றும் அவரின் சேவையினை பாராட்டியும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,  கோட்டக் கல்விப் பணிப்பாளர், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
IMG_4892IMG_4848IMG_4840IMG_4874

1 comment:

  1. கமரூனின் வளர்சிக்காய் தொடரவேண்டும் இன்னுமுண் பணிகள்...
    Hon.Dr.Siraz Sir, அவர்களே..

    ReplyDelete