Tuesday, May 21

பொத்துவில் காணிப்பிரச்சினைத் தீர்வுகளில் அதிரடிப்படையினரை தொடர்புபடுத்தி அச்சுறுத்த வேண்டாம்


பொத்துவில்  பூவரசயடித்தோட்டக் காணியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணிச் சொந்தக்காரர்களை வனஇலாகாவினரும் விசேட அதிரடிப்படையினரும் காணிகளை விட்டு வெளியேறுமாறு விரட்டப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டை யடுத்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி அம்பாறை மாவட்ட வன இலாக அத்தியட்சரிடம உடனே தொடர்பு கொண்டு தனது ஆட்சேபனையை தெரிவித்தார். 
காணிப்பிரச்சினைகளை முறையாகக் கையாள வேண்டும் என எச்சரித்த அவர், விவசாயிகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஆயுதப்படையினரை அணுகுவது பற்றி ஆட்சேபித்தார். மக்களைப் பயமுறுத்தி அடிபணிய வைப்பதைவிடுத்து அரச நிறுவனங்கள் மூலமாக பிரதேச சபை அல்லது பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக உங்கள் பிரச்சினைகளை முன்வையுங்கள் என அவர் வேண்டினார். இதனையடுத்து தான் உடனடியாக பொத்துவில் சென்று இவ்விடயம் பற்றி இன்று விசாரணை செய்வதாக உறுதியளித்தார். மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடு பின்வருமாறு :  
 
ஆதம்பாவா மீராமுகைதீன் 
விவசாயப் பிரதிநிதி 
குளாக்கள்ளி வீதி 
பசறிச்சேனை 
பொத்துவில் 18
2013.05.20
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் 
எம்.ரீ. ஹஸன் அலி 
கௌரவ பொதுச் செயலாளர் 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 
தாருஸ்ஸலாம் 
கொழும்பு 2
அஸ்ஸலாமு அலைக்கும் 
உரிமையாளர்களை அச்சுறுத்தி, விரட்டி புவரசயடித்தோட்ட வயற்காணிகளை அபகரிக்க திட்டம் தீட்டப்படுதல் சம்பந்தமாக 
பூவரசயடித்தோட்ட வயற்காணிப் பிரதேசம் சுமார் 600 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. இப்பிரதேசம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் பசறிச்சேனை கிராம சேவகர் பிரிவினுள் அமைந்துள்ளது. 
நாவிலாற்றுக்குக் கிழக்கே பிரபல்யம் வாய்ந்த குடாக்கள்ளிப் பகுதிக்கு அண்மித்த இவ்வயற்காணிப்பிரதேசம் பெரும்பாலான முஸ்லிம்களினதும் ஒரு சில தமிழ் சகோதரர்களினதும் காணிகளாகும். இதனுடை சில காணிகளின் அனுமதிப்பத்தி இலக்கங்கள் P/3A/ES66,  P/3A/ES/114, P/3A/ES/117,  P/3A/ES/405,  P/3A/ES/318,  P/3A/ES/118,  P/3A/ES/1907,  P/3A/ES/77,  P/L/8391,  P/3A/ES/51,  P/ES/109,  P/28387,  P/3A/ES/110,  P/3A/ES/318,   ஆகும். இதனை கடந்த 50 வருட காலமாக ஆட்சி செய்யப்பட்ட பாராமரிக்கப்பட்டு வருகின்றது. இக்காணியுரிமையாளர்களுக்கு அரசாங்கம் 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை டுனுழு சட்டத்தின் கீழ் உத்தரவுப் பத்திரங்களும் ஜயபூமி அன்பளிப்புகளும் வழங்கி உரிமையாளர்களின் ஆட்சியை உறுதிசெய்தள்ளனர். 
இவ்வாறிறுக்க கடந்த 2013.05.16ம் திகதி காணிச் சொந்தக்ககாரர்கள் தமது வயற்காணிகளினுள் அபிவிருத்தி வேலைகள் செய்து கொண்டிருந்த வேளையில் பொதுபல சேனா அமைப்பின் பிரதி நிதிகள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு சில பௌத்த தேரர்களும் அவர்களுடன் இணைந்து சாஸ்த்தர வெலி விஷேட அதிரடிப்படை மற்று லௌகல நிர்வாக பிரதேசத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரி இருவரும் (அவர்களில் ஒருவரின் தொலைபேசி இல: 0713223217) குறித்த வயற்காணிப் பிரதேசத்தினுள் நுழைந்து காணி உரிமையாளர்களிடம் இக்காணிப் பிரதேசம் பௌத்தர்களுக்குச் சொந்தமானதெனக் கூறி உடனடியாக காணிகளை விட்டு வெளியேறுமாறு விரட்டி அடாவடித்தனம் பண்ணி அச்சுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இக் காணியுரிமையாளரக்ள் அதிர்ந்து அச்சத்தால் உறைந்து போயுள்ள அதே வேளை வயற் பிரதேசங்களுக்குச் செல்லவும் தயங்குகின்றனர். ஆகவே தாங்க் மேற் குறிப்பிட்ட காணியுரிமையாளர்கள் தமது காணியுரிமைகளை தொடர்ந்து நிலை நிறுத்தவும் காணிப்பிரதேசங்களுக்கு அச்சமின்றிச் சென்று பணிகளில் ஈடுபடவும் வேண்டிய நடவடிக்கைகளையெடுத்து காணிகளை பாதுகாக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment