Sunday, June 26

15 வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்றப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் தட்டிக்கொண்டது....


சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகத்தின் 15 வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்றப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  மர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தினை கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

மெட்ரோபொலிடன் கல்லூரியின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து  விளையாட்டுக்கழகங்கள் பங்கு கொண்ட 20 – 20
கடின பந்து கிறிக்கட் இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் 18.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இறுதி நாள் நிகழ்வில் மெட்ரோபொலிடன் கல்லூரியின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான கலாநிதி  அல்ஹாஜ் எம்.எம்.எம்.சிராஸின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சன் பிளவர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம். அஸ்வர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி , ஓய்வுபெற்ற விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார், நில அளவையாளர் எம். ஏ.றபீக், சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு அதிகாரி ஐ.எம்.கடாபி, முஹம்மட் ஜெமீல் ,ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.பீர் முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment