Sunday, June 26

யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று இன்று முதல் புதிய பஸ் சேவை


யாழ்ப்பாணத்துக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான பஸ் சேவை இன்று வெள்ளிக்கிழமை முதல் அக்கரைப்பற்று வரையும் நீடிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வடக்கு பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு செல்லும் இந்த பஸ் இன்று முதல் தினமும் மாலை 7.30 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு சேவையை ஆரம்பிக்கும்.

இச் சேவை மட்டக்களப்பு ஊடாகவே அக்கரைப்பற்றுக்கு நடைபெறும்.இதேபோல அக்கரைப்பற்று பஸ் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இந்த பஸ் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வந்தடையும். ஆசனப்பதிவுகளை யாழ்ப்பாணம்,அக்கரைப்பற்று பஸ் நிலையங்களில் பயணிகள் மேற்கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment