Tuesday, March 12

மட்டு - கல்லடி புதிய பாலம் 22ம் திகதி ஜனாதிபதி மஹிந்தவினால் திறந்து வைப்பு





மட்டக்களப்பு கல்முனை பிரதாக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற அதேவேளை குறித்த புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

பல வருடங்கள் பழைமை வாய்ந்த மட்டக்களப்பில் அமைந்துள்ள இப்பாலம் பல்வேரு போக்குவரத்து சாலைகளுக்கு பிரதான பாலமாக திகழ்கின்றது. இப்பால நிர்மாண வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் திடீரென இடைநிறுத்தப்பட்டிருந்து மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதிவேக துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.


ஸாஹிரா கல்லூரி மாடிக்கட்டடித்தின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளது



-றிப்தி அலி, எஸ்.எம்.எம்.ரம்ஸான்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மூன்று மாடிக்கட்டடித்தின்; ஒருபகுதி இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது. சுமார் 15 வகுப்பறைகளை கொண்ட இந்த கட்டிடம் கடந்த 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அர்த்தத்தினால் இந்த கட்டிடம் கடுமையாக சேதமடைந்திருந்தது. எனினும் கடந்த வருட முற்பகுதியில் இந்த கட்டிடம் பயன்படுத்த முடியாது என கல்முனை ஸாஹிரா கல்லூரியின அதிபர் ஏ.எம்.ஆதம்பாவா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

Friday, March 8

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை உடைத்தெறிந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டும்! முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் ஜூனைட் (நளீமி)

4இஸ்லாமிய சிறார்களின் மத்தியில் நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதோடு நவீன சியோனிச சக்திகளுக்கு எதிர்கொடுக்கும் ஆற்றல்மிகு இளம் சமூகத்தை உருவாக்கும் சீரிய பணிக்காக அஹதியா பாடசாலை நாடு முழுவதிலும் இயங்கி வருகிறது. என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாண பிராந்திய பொறுப்பதிகாரி அஸ்ஸெய்ஹ் ஜூனைட் (நளீமி) தெரிவித்தார்.
அஹதியா பாடசாலையை மிகவும் தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் இஹ்லாஸ் உடன் மாணவர்களின் தேவையறிந்து அஹதியா ஆசிரியர்கள் செயற்பட வேண்டுமென அவர் சமீபத்தில் ஆயிஸா மகளிர் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற கந்தளாய் நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் இஸ்லாமிய கலாச்சார விழாவில் பிரதம அதிதீயாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
நூறூல் ஜன்னாஹ் அஹதியா பாடசாலையின் தலைவர் அமீர் சுல்தான் முஹம்மட் தாணீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் போட்டிபோட்டு இயங்குகின்றன அவைகளை உடைத்தெறிந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அம்பாறையில் விழுந்த விண்கல்!

அம்பாறை, முவங்கல, அருணபுற பகுதி வீட்டுத் தோட்டமொன்றில் விண்கல்லொன்று விழுந்துள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளரது 11 வயது மகன் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது மேற்படி விண்கல்லை கண்டெடுத்து தனது பெற்றோருக்கு காண்பித்துள்ளான்.

Wednesday, March 6

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் கொரியா பயணம்!


DSCF3123கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (06.03.2013) மதியம் இரண்டு மணியளவில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியா பயனமானார்.
ஆசிய மன்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கொரிய நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூர் பொருளாதார ஆட்சி அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான  கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே முதல்வர் கொரியா பயணித்துள்ளார்.
மேற்படி கலந்துரையாடல் 07ம் திகதி முதல் 22ம் திகதிவரை நடைபெற ஏற்பாடாகி உள்ளதாகவும் இதன்போது கொரியாவில் உள்ள உள்ளூராட்ச்சி மன்றங்களின் நடைமுறைகள் தொடர்பாகவும் அங்குள்ள நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி, திண்மக் கழிவு மற்றும் வருமான முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட் மற்றும் கிழக்கு மகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் பயணிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா

வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு வீசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

எனினும் விவசாய துறை அமைச்சு இது தொடர்பில் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே இந்த வீசாக்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தில் ஈடுபட போதுமான ஆளனி வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்தே அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த திட்டத்தை அறிவித்தார்.

இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் காணப்பட்ட போதும், தற்போது வரவேற்கப்படுகிறது.

ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் பயணிகள் வீசாவுடன் வந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்தியர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள்(படங்கள் இணைப்பு)


(சமீம் சாஜித்)
கல்முனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பாண்டிருப்பு, பெரியநீலாவணை கிராமங்களில் பல் வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை பிரதேச சிவில் பாதுகாப்புக் குழு, கிராம
அபிவிருத்திக் குழு, சமூகசேவை அமைப்புக்கள் போன்றவற்றுடன் இணைந்து இரண்டு வாரங்களாக நடாத்தியது. டெங்கு ஒழிப்பு சிரமதானம், வீதி சிரமதானம், சூழலை சுத்தப்படுத்துதல் பொதுமக்கள் பிரச்சினை போன்ற வேலைத்திட்ங்களையும் முன்னெடுத்து வந்தது.
இந்த வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள்   பெரியநீலாவணை Red Crosse சுனாமி வீட்டுத்திட்ட திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழகாட்டலுடன் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டத்தின் ஒருகட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், விளையாட்டு வீர்ர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் பாராட்டப்பட்டு சாண்றிதழ்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொளரவ பூஜித்த ஜெயசுந்தர கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஐ.கருணாரட்ண, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயக்கார, கல்முனை மாநகர சபை முதல்வர் Dr. சிறாஸ் மீராசாஹிப், கல்முனை பிரதேச செயலாளர் ஜனாப் எம்.எம்.நௌபல், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் திரு கே.லவநாதன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட சமயத்தலைவர்கள் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tuesday, March 5

கல்முனை சந்தை வீதி புனரமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்!


Km market rd (3)கல்முனை சந்தை வீதி, வடிகான் என்பன அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று (05.03.2013) காலை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புறநெகும அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் 7,490,103.44 ரூபா செலவில் குறித்த வீதி, வடிகான் என்பன அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எச்.எம்.எம்.நபார், சந்தை வர்தக சங்க பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மூவின மக்களும் பயணிக்கும் இப்பிரதான வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டது. அத்தோடு மழை காலங்களில் இவ்வீதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.