கல்முனை சுபத்திராராம விகாராதிபதி
ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்
வழங்கிய பிரத்தியேக பேட்டி இது.
தேரரே முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை பற்றி உங்கள் கருத்து என்ன ?
சங்கரத்ன தேரர்:- இது ஒரு நல்ல
விடயம். மற்றவர்கள் ரசிக்கக் கூடியவர்களாக பெண்கள் இருக்கக் கூடாது.பெண்கள்
பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எமது நாட்டில் இப்படியான நிலைமை
இருந்தபடியால்தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சில கட்டுப்பாட்களைக் காணக்கூடியதாக
இருக்கின்றது கட்டுப்பாடுகளை மீறி நடப்பதன் காரணமாக பல விதமான பிரச்சினைகள்
தோன்றியிருப்பதை பத்திரிகைகள் ஊடாக வாசித்து அறிந்திருக்கிறோம். நாம்
எம்மிடம் இருக்கின்ற பண்பாடு கலாசாரம் என்பவற்றை மதிக்காமல் வெளி
நாடுகளிலுள்ள சில விடயங்களை எடுத்துப் பார்த்து அதற்காகவே நாம் முகம்
கொடுக்கின்றோமே தவிர எமது கலாச்சாரங்களைப் பாதுகாப்பாக பேணவில்லை.இது ஒரு
முக்கியமான காரணம். எமது நாட்டில் பெளத்தம் இஸ்லாம் இந்து கிறிஸ்தவம் ஆகிய
சமயங்களில் இருந்து கொண்டிருக்கின்ற நாம் அவ்வரவரின் சமயத்தை
பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம்தான் நூற்றுக்கு நூறு
எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். $













