Wednesday, June 22

அம்பாரை கச்சேரியில் கை கட்டி காத்திருக்கும் பொது மக்களும், 11.00 மணிக்கு சமூகமளிக்கும் அதிகாரியும்.



அண்மைக்காலமாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கென பெரும் எண்ணிக்கையான மக்கள் அம்பாரை கச்சேரிக்கு ட்ரயல் பரீட்சைக்கு வருவதும் மக்கள் பகல் 12.00 மணிவரைக்கும் காத்திருப்பதும், அதிகாரிகள் அதற்கு பிறகு வந்து வேண்டா வெறுப்பாக ட்ரயல் பார்ப்பதும் கொமிசனுகளுக்காக மக்களை காத்திருக்க வைப்பதனையும் எமது விசேட செய்திக்குழு அறிக்கை ஒன்றினையும் படங்களையும் சமர்ப்பித்திருப்பது எமது மனங்களை கவலைப்பட வைத்திருக்கின்ற ஒரு விடயமாகும்.
இந்த நடவடிக்கையிற்கு தகுந்த பதிலை உரிய அரச சேவை அதிகாரிகள்  எடுக்க வேண்டுமன்று பொதுமக்கள் கேட்டு கொள்கின்றனர்.

Tuesday, June 21

6 மாதங்களுக்கென கொடுத்த அகதிமுகாமில் 7 வருடங்களாக வாழும் சாய்ந்தமருது மக்கள்

ஒரு நேரடி ரிப்போர்ட்
இலங்கையில் 2004இல் இடம்பெற்ற சுனாமி பேரனர்த்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமே. அதிலும் குறிப்பாக மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களே அதிகமாகப் பலியானார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகினர். அவர்களில் பலர் மீள்குடியேறிவிட்டனர். ஆனாலும், இன்னும் சில குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலேயே தமது காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இன்று காலை கல்முனையில் யுவதியொருவரை வேனில் கடத்த எடுத்த முயற்சி மக்களால் முறியடிப்பு.




தனது கடமைக்காக  காரியலயத்தை நோக்கி வழமை போல் முற்சக்கர வண்டியில் இன்று காலையில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவரை  கோவில் வீதியில் ( சோடாக் கம்பனிக்கருகமையில் ) வைத்து முற்சக்கர
வண்டியின் சாரதின் தலையில் தாக்கிவிட்டு அவ்யுவதியை கடத்த முறபட்டபோது சாரதி கூச்சலிட்டு மக்களின் உதவியுடன் அவ்யுவதியை காப்பற்றினார்கள்.

பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரனையை தெடர்கின்றனர்.

யுவதியைக் கடத்த முற்பட்ட வேனின் இலக்கம் 251-1932 ஆகும்.






Friday, June 17

கிழக்கு மாகாண இடமாற்றங்கள் தொடர்பில் 21ம் திகதி தீர்மானம் கிழக்கு மாகாண இடமாற்றங்கள் தொடர்பில் 21ம் திகதி தீர்மானம்


கிழக்கு மாகாண இடமாற்றங்கள் தொடர்பில் 21ம் திகதி தீர்மானம்
June 17, 2011  05:11 pm
கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடமாற்றங்கள் தொடர்பிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் வாரியக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இடமாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதையடுத்து அப்பிரசேத்திலுள்ள ஒருசில பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, எம்.எல்.துல்கர்நஹீம், எம்.எல்.ஏ.அமீர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.தௌபீக் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்து தற்போதைய நிலைமைகளை அவதானித்தனர்.

சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் மாணவர் மன்றமும் கலை நிகழ்சிகளும் பரிசளிப்பும்.


Thursday, June 16, 2011

( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் சாய்ந்தமருது எக்ஸ்பேட் கல்வி நிலையத்தின் மாணவர்களின் மாணவர் மன்றமும் கலை நிகழ்சிகளும் பரிசளிப்பும் நடைபெற்றது.



மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எக்ஸபேர்ட் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் கே.ஜெமில் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்களான எம்.ஐ.எம்.நௌஸாத் எம்.எம்.பாயிஸ் திரு சயானந்தன் எம்.சப்ரி எஸ்.எம்.சபான் இஎஸ்.எம்.எம்.றம்ஸான் எம்.கே.ஐ.நிலோபா எம்.கே.எம்.சிறின் ஆகியோர் விஷேட அதிதியாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் மூலம் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் வரலாற்று வினாவிடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குமான பரிசுகள் வழங்கப்பட்டன.





ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு

ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு


June 17, 2011  03:10 pm

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மாணவர்களின் நன்மையை கருத்திற் கொண்டு செயற்படாத சில சுயநல அரசியல்வாதிகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆசிரியர் நியமனத்தை பகடைய்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எனினும் மாகாண அமைச்சரவையின் இத்தீர்மானத்தை கிடப்பில் இட்டு ஆளுநரின் கட்டளைப்படி ஆசிரியர் இடமாற்றங்களுக்கான கடிதங்கள் வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் இடமாற்றத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு இவர்கள் விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை 01.01.2012 அன்று வழக்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 21ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்குப் பின்னரும் ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்டால் சபை நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம் எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட சிலர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறுக் கோரி சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று பொது மக்கள் மாணவர்கள் சேர்ந்து ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இடமாற்றங்கள் எவ்வகையிலும் இரத்தாகாது


தினகரன் ௧௭-௦௬-2011




எத்தகைய நிலையிலும் ஆசிரிய இடமாற்றங்களில் மாற்றமில்லை. வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் ரத்துச்செய்யப்படமாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே முதலமைச்சரும் உள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். டி. ஏ. நிஷாம் தெரிவித்தார். அதேவேளை; மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்ற கண்டிப்பான பணிப்புரையை சகல அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆசிரிய இடமாற்றங்களை ரத்துச் செய்யக்கோரி நேற்றும் கிழக்கில் கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைய தினமும் பெருமளவிலான கிழக்கு மாகாண பாடசாலைகள் ஆர்ப்பாட்டத்திலீடுபட உத்தேசித்துள்ளதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெவிக்கையில்;
ஆசிரிய இடமாற்றத்தைக் கண்டித்து நேற்று கல்முனையில் ஐந்து பாடசாலைகளிலும் மட்டக்களப்பில் மூன்று பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாணவர்கள் பாடசாலைக்கு வருவதைத் தடுத்துள்ளனர்.
எவ்வாறெனினும் ஆசிரியர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியும். பெற்றோரும் அவ்வாறுதான், ஆனால் மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. ஒரு பிழையான கலாசாரம் வளர்க்கப்படக் கூடாது. இது விடயத்தில் பாடசாலை அதிபர்கள் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அதன்போது இடமாற்றம் ரத்துச் செய்யப்படமாட்டாது என்ற அவரது நிலைப்பாட்டையும் அவர் வெளியிட்டார்.
அரசாங்கமும் வழங்கப்பட்ட இடமாற்றங்களை ரத்துச் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவே உள்ளது. அத்துடன் பெரும்பாலான பாடசாலைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் உள்ளனர் என்பதும் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.
சில பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் 12ம் தரம் வரையான வகுப்புகள் உள்ளபோதும் ஆசிரியர்கள் மூன்றோ நான்கோ பேர்களே உள்ளனர். மேலதிக ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Thursday, June 16

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு றோயல் பாடசாலை

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு றோயல் பாடசாலை



Bookmark and Share
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இறைவெளிக்கண்ட வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட 456 குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் நலன் கருதியும், கூட்டு ஆதன முகாமைத்துவ குழுவின் கோரிக்கைக்கு இணங்கவும் றோயல் பாடசாலை அமைக்கப்படவுள்ளது.

இப்புதிய பாடசாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் பூர்வாங்க வேலைகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கல்முனை வலயக் கல்வி அலுவலக பொறியியலாளர் எம்.சீ.எம்.நவாஸ், பாடசாலை வேலைகள் பரிசோதகர் ரீ.எல்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் சென்றிருந்தனர்.

காரைதீவுக் கிராமத்தில் அதிசய தாவரம்.




இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு ஒன்றின் பின்புறத்தில் அதிசய தாவரம் ஒன்று திடீரென முளைத்து உள்ளது.


இது பூச்சிகளை தின்கின்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. சடலங்களில் இருந்து வீசுகின்ற பிண வாடையை காட்டிலும் மோசமான நாற்றம் இத்தாவரத்தில் இருந்து வீசி இருக்கின்றது. இதனால் வீட்டுக்காரர்கள் இத்தாவரத்தை வேரோடு பிடுங்கினர். நிலத்தில் புதைத்தனர்.




Tuesday, June 7

கிழக்குமாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து.




நேற்று இடம்பெற்ற அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்குமாகாணத்தில் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்யும்படியாக ஜனாதிபதியிடம்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.  

உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் இடமாற்றங்களால், எதிர்வரும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை மற்றும் க.பொ.த.சாதாரன தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில்  ஜனாதிபதியின் மேலதிக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இவ் இடமாற்றங்களை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நுரைச்சோலை கண்டத்தில் நெற்செய்கைக்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்


தெ. கி பல்கலைக்களகத்துக்கு 12 மில்லியன் குவைத் தினார்கள் அன்பளிப்பு

அம்பாறையில் கடலரிப்பு : பிரதேசவாசிகள் அச்சம்

June 7, 2011  07:36 am
Bookmark and Share
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் பிரதேசவாசிகள் மிகவும் அச்சம் தெரிவிக்கின்றனர் என நம்பத்தகு தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, ஒலுவில், கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை போன்ற கரையோர பிரதேசங்களிலுள்ள கடலோர நிலப்பரப்புகளை நாளுக்கு நாள் கடல் தனதாக்கிக் கொண்டு வருகின்றது.

அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதனாலும் கடல் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்வதனாலும் கடலரிப்பு அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையோரங்களில் வளர்ந்திருந்த அடம்பன்கொடி, இராவணன் மீசை, எழுத்தாணிப்பூண்டு மற்றும் தாழை போன்ற மரங்கள் அழிவடைந்த நிலையில் இவை இது வரை மீள நடுகைக்கு உட்படுத்தப்படவில்லை.

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசத்தில் பாரிய பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த போதிலும் அதனையும் தாண்டி கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான கடலரிப்பு தொடருமாயின் கடற்கரைப் பிரதேசமொன்று எதிர்காலத்தில் இல்லாமல் போவதுடன் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தங்களது வள்ளங்களையோ இயந்திரப்படகுகளையோ தோணிகளையோ நிறுத்தி வைப்பதில் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற அச்சம் நிலவுகின்றது.

Monday, June 6

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தகுதி பெற்று சாதனை






பல்கலைகழக மானிய ஆணைக்குழு கடந்த வாரம் வெளியிட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.



2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லாரியிலிருந்து சுமார் 70  மாணவர்கள் பலதுறைகளிலும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற போதிலும் பொறியியல் துறையில் ஒரே தடவையில் 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு  தெரிவு  செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இச்சாதனை  ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளை பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஏ.சர்பான் அஹமட் இ எம்.ஏ.எம்.இர்பான் மற்றும்  எஸ். எச் .எம். சப்ராஸ் ஆகிய மாணவர்கள் தேசிய ரீதியிலும் ஏனைய மாணவர்கள் மாவட்ட ரீதியிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திறகு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லாரி அதிபர்  அல் ஹாஜ் எம். எம். இஸ்மாயில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

Saturday, June 4

இப்படியும் கற்பிக்கலாம்.


May 27, 2011

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இவ்வாண்டு புலமைப்பாரிசில் பாரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை களப்பயணம் மூலம் அழைத்துச் சென்று கல்முனை தபாலகத்தில் கற்பிக்கப்பட்டது.

புத்தகக்கல்வியுடன் மட்டும் நின்று விடாது, மாணவர்களுக்கு அனுபவத்தின் மூலமும் கல்வியை கற்பிக்கும் நோக்கோடு
பாடசாலை அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்கள் உற்சாகத்துடன் இக்களப்பயணத்தில் ஈடுபட்டு சிறந்த விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.